எனது இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

அன்பு உலகத் தமிழ் உள்ளங்களுக்கு எனது இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ,பழகிய பழக்கத்தை மாற்றிக்கொள்வது கடினம் என்பது போல என்னதான் காரணங்கள் சொல்லி தை 1 ஆம் தேதியை தமிழ் புத்தாண்டாக அரசு அறிவித்தாலும் நிறைய தமிழ் குடும்பங்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை,
(இலங்கையில் நடக்கும் இனப்படுகொலையையையும் தமிழ் நாட்டில் நிலவிய,(நிலவும்) மின்சார பற்றாக்குறையை தற்காலிகமாக திசை திருப்ப எடுக்கப்பட்ட ஒரு முடிவு என்று எல்லோரின் மனசாட்சிக்கும் தெரியும்.அடுத்த அரசு வந்தால் இதை வைகாசி 1 ஆம் தேதிக்கு மாற்றினாலும் மாற்றுவார்கள்,இதில் என்ன ஒரு கொடுமை என்றால் அரசு பஞ்சாங்கமும் வெளியிடப்போகிறதாம்,(முதலில் இருக்கும் பிரச்சனையை தீருங்கள்)இன்று கலைஞர் தொலைக்காட்சியிலும் புத்தாண்டு நிகழ்ச்சிகளை காணத தவறாதீர்கள்.தயவு செய்து இந்துக்களின் உணர்வை மேலும் புண்படுத்தும் செயலில் இறங்காமல் இருப்பது அரசுக்கு நலம்.(ஆனால் ஒரு ஓட்டை ஐயாயிரம் கொடுத்து வாங்கும் திறம் படைத்தவர்களுக்கு இதை பற்றிஎன்ன கவலை.(மக்களே இந்த வாய்ப்பை நன்கு பயன் படுத்தி மக்களின் காசு மக்களுக்கே என்று வாங்கிக்கொண்டு செல்லா ஓட்டாவது போடுங்கள்.என் வீட்டிலும் அதையே செய்ய சொல்லியிருக்கிறேன்.
0 Comments:
Post a Comment
வலை நண்பர்களே சான்றோர்களே சொன்னது பிடித்தால் ஓட்டு & கருத்து போட்டு ஊக்கம் கொடுங்கள்.
Subscribe to Post Comments [Atom]
<< Home