Thursday, May 21, 2009

இனி கருணா என்றால் ஆள்காட்டி என்று பொருள் கொள்வீர்...



கருணா...
உனக்கு என்னவொரு அருமையான பதவி... கொடுத்திருக்கிறது... சிங்கள அரசு பிரபாகரன் இருக்கும்போதும் காட்டிக் கொடுக்க உன்னைத்தான் அழைத்தது... இறந்ததாகக் கருதப்பட்ட பின்னும் காட்டிக் கொடுக்க உன்னைத்தான் அழைக்கிறது... பிரபாகரன் இறந்து போனது உண்மையானால்... உனது தேவை சிங்கள அரசுக்கு தேவைப்படாது... அடுத்த சில நாள்களில் உனது பதவி சிங்களத்தை நேசிக்கும் ஒரு சிங்களனுக்கு கொடுக்கப்படும்... உனது உயிர் தமிழை நேசிக்கும்... தமிழனை நேசிக்கும்... பிரபாகரனை தலைவனாக எண்ணும் ஒருவரால் பறிக்கப்படும்... தமிழனாக பிறந்ததில் பெருமைப்படுகிறேன், பிரபா ஒரு தமிழன் என்பதால் அதே சமயம் வேதனைப்படுகிறேன் ஒரு சில தமிழ் அரசியல்வாதிகளும்,கருணாவும் தமிழன் என்று கூறிக்கொள்வதால். பிரபாகரன் புதைக்கபடவில்லை விதைக்கப்பட்டு இருக்கிறார். பிரபாகரன் தேர்ந்தெடுத்த வழி(வன்முறை) வேண்டுமானால் தவறாக இருக்கலாம். ஆனால் அவருடைய நோக்கம் மிக சரியானது. ஒரு கட்டத்தில் விடுதலை புலிகள் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறி இருக்க வேண்டும். பிரபாகரன் செய்த ஒரே தவறு ராஜீவின் படுகொலை. அது மட்டும் நிகழ்ந்திரா விட்டால் இந்நேரம் தமிழ் ஈழம் மலர்ந்திருக்கும் இந்திய அரசின் உதவியோடு. கருணா இலங்கை அரசால் கொல்லப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை. ராஜ பக்ஷே வின் நாட்களும் எண்ணப்படும். ஒரு கட்டுக்கொப்பான இயக்கத்தை வளர்த்ததர்க்காகவும் ஒரு தமிழனாகவும் பிரபாகரனுக்கு ஒரு ராயல் சல்யூட் பிரபாகரன் என்னும் ஒரு சகாப்தம் அழிக்கப்பட்டாலும், அவருடைய நினைவுகளும், கொள்கை உறுதிப் பிடிப்பும் அவரை வரலாற்றில் நீங்கா இடம் பிடிக்க வைத்து விட்டது. இந்த நூற்றாண்டின் இணையற்ற மாவீரன் மாவீரன் பிரபாகரனை உயிருடன் இருக்கையிலும் காட்டிக் கொடுத்து, இறந்த பிறகும் காட்டிக்கொடுத்த ''கருணா'' எட்டப்பனையும் மிஞ்சி விட்டான். கற்றுக் கொடுக்கும் இனம் தமிழ் இனம் என்பது அன்று. பணம், பதவி, புகழுக்காக காட்டிக்கொடுக்கும் இனம் தமிழ் இனம் என்பது இன்று. அதிலும் ''கருணா'' என்றால் காட்டிக்கொடுப்பவன் என்று இனி சரித்திரம் கூறும். வாரிசுகளின் வாழ்வு வளம் பெற கடமை கண்னியம் கட்டுப்பாட்டு என்னும் கொள்கையை அடகுவைத்து அள்ள அள்ள குறையாத குன்று போல் செல்வம் ஈட்டும் அரசியல்வாதிகளுக்கிடையில் வாழ்நாள் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு இறுதியில் தன் உயிர் மட்டுமன்றி மனைவி, மகன், மகள் என்று தன் குடும்பத்தையே தமிழர்கள் உரிமைக்காக அர்ப்பணித்த பிரபாகரனின் தியாகத்தை நினைத்தால் இவர் வாழ்ந்த காலத்தில் நாமும் இருந்தோம் என்கிற நினைப்பே பெருமையாக உள்ளது. இந்திய- சிங்கள அரசுகள் அவிழ்த்து விடும் பொய்களில் இதுவும் ஒன்றாகத்தான் இருக்கும். ஒரு வேளை இது உண்மையாக இருந்தாலும் இதனால் தமிழ்த் தேசிய ஞாலத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் பெருமைதான் ஓங்குமே தவிர இ-சி அரசுகள் எண்ணுவதுபோல் சிறுமை அடையமாட்டார்கள். மேலும் உலகத்தமிழர்கள் சொல்லொண்ணா வேதனையுற்றாலும் இன்னும் வேகம் கொண்டு- கருணாக்களின் துரோகங்களையும் புரிநது கொண்டு - தங்கள் தலைவர் வழியிலேயே சென்று தமிழ் ஈழத்தை வென்றெடுப்பார்கள். அதே நேரம் இது கட்டுக்கதை என்னும் பொழுது இ-சி அரசுகள் இது குறித்து வெட்கப்படப் போவதில்லை. கற்பனையாகச் சில நாள் மகிழ்ந்ததிலேயே பெருமை பட்டுக் கொள்ளும். மேதகு பிரபாகரன அவரக்ளும் அவர் குடும்பத்தினரும் பிற தளபதிகளும் படைஞர்களும் ஈழத் தமிழர்களும் நீடூழி வாழட்டும்! விரைவில் இ - சி சதிகளை வெல்லட்டும்! மலர்க தமிழ் ஈழம்

Labels:

0 Comments:

Post a Comment

வலை நண்பர்களே சான்றோர்களே சொன்னது பிடித்தால் ஓட்டு & கருத்து போட்டு ஊக்கம் கொடுங்கள்.

Subscribe to Post Comments [Atom]

<< Home