காரணமின்றி கண்ணீர் வரும்...
காரணமின்றி கண்ணீர் வரும்,
காரணமின்றி கண்ணீர் வரும்,
உன் கருணை விழிகள் கண்டால்....
காரணமின்றி கண்ணீர் வரும்,
உன் கருணை விழிகள் கண்டால்....
காரணமின்றி கண்ணீர் வரும்,
உன் கருணை விழிகள் கண்டால்....
கருக்குழி வழி தன்னை அடைக்கும் விழி...
கருவினில் திரு வந்து நிறைந்த விழி...
இரு விழி,தரும் மொழி,திரந்திடும் அருள் வழி...
காரணமின்றி கண்ணீர் வரும்,
உன் கருணை விழிகள் கண்டால்....
காரணமின்றி கண்ணீர் வரும்,
உன் கருணை விழிகள் கண்டால்....
பிதற்றிடும் மொழி என் பிள்ளை மொழி,
தினம் அரற்றுதல் தவிரவேறில்லை வழி..
பிதற்றிடும் மொழி என் பிள்ளை மொழி,
தினம் அரற்றுதல் தவிரவேறில்லை வழி..
அருந்தவச்சுடரே,அருள் நிறை கடலே,
அடியவர்க்கிரங்கி வந்தனைத்திடும் அருளே..
தொழுதேன்,தொழுதேன்,விழி திறப்பாய் ,
பிழைகள் பொருத்தே பழி எறிப்பாய்...
இரு விழி,தரும் மொழி,திறந்திடும் அருள்வழி...
காரணமின்றி கண்ணீர் வரும்,
உன் கருணை விழிகள் கண்டால்....
காரணமின்றி கண்ணீர் வரும்,....
பொருள் வழி செல்லும் மன வழி அடைப்பாய்..
நல்ல அருள் வழி தரும் பெருந்துயர் துடைப்பாய்...
பொருள் வழி செல்லும் மன வழி அடைப்பாய்..
நல்ல அருள்வழி தரும் பெருந்துயர் துடைப்பாய்...
எழில் ஞாயிறு போல் அருள் ஞாயிறு நீ...
ஒளி தனைப் பொழிந்திடும் கருணா நிதி நீ,
தொழுதேன்,தொழுதேன்,விழி திறப்பாய்,
பிழைகள் பொறுத்தே பழி எறிப்பாய்...
இரு விழி,தரும் மொழி,
திறந்திடும் அருள்வழி...
காரணமின்றி கண்ணீர் வரும்,
உன் கருணை விழிகள் கண்டால்....
காரணமின்றி கண்ணீர் வரும்,....
கருக்குழி வழி தன்னை அடைக்கும் விழி...
கருவினில் திரு வந்து நிறைந்த விழி...
இரு விழி,தரும் மொழி,திறந்திடும் அருள்வழி...
காரணமின்றி கண்ணீர் வரும்,
உன் கருணை விழிகள் கண்டால்....
காரணமின்றி கண்ணீர் வரும்,....
பாடலை டவுன் லோடு செய்ய
http://www.suribaba.com/sb_IRAlbumsPgbyPgDisp.php?name=Ramanamalai&type=Mov_name&Lang=Tamil&type2=IRALBUM
0 Comments:
Post a Comment
வலை நண்பர்களே சான்றோர்களே சொன்னது பிடித்தால் ஓட்டு & கருத்து போட்டு ஊக்கம் கொடுங்கள்.
Subscribe to Post Comments [Atom]
<< Home