அருமை நண்பர் சுந்தர பாண்டியன் அவர்களுக்கு அமீரகம் வாழ் நண்பர்களின் இதயம் கனிந்த திருமண நல்வாழ்த்துக்கள்
திருமண வாழ்த்து...
கடவுள் வணக்கம்
உலகம் முழுவதும் உன்னில்
அடக்கம்
சிலம்பா முருகா சிவப்பா –
குலம்போற்ற
நண்பன் மணம்செய்ய நானும்
கவிபாட
தண்டாயு தாவருள் தா.
தாய் வணக்கம்
விண்ணவன் பொய்த்தாலும்
வேளை எதிர்த்தாலும்
எண்ணும் எதுவும் எளிதாகும்
- உண்மைகேள்
மன்னனோ மந்தியோ மாந்தர்
அனைவர்க்கும்
அன்னை அருள்வேண்டும் ஆம்.
தமிழ் வணக்கம்
பொதிகை மலைதோன்றி
பார்புகழ்ந்து போற்றி
துதிக்கும் படிவளர்ந்த
தமிழே – மதுரமாய்
நண்பன் புகழ்பாட நானும்
தொடங்கினேன்
வண்டமிழை வாரி வழங்கு.
சபை வணக்கம்
சந்தத் தமிழின்
சிறப்புரைக்கும்
பற்பலரும்
சந்த முரைப்பர் சிறப்பொடு
- சிந்தைக்குச்
சந்த மளித்துச்
சிறப்புறும் ஈதெலாம்
சந்த வசந்தச் சிறப்பு.
அவை அடக்கம்
சிலரை வணங்கிச் சிலரை
வாழ்த்தினேன்
புலனுடைக் குழுவில்
பணிந்து – புலவீர்
எந்தன் பிழைபொறுத்து ஏற்ற
வழிசொல்லி
தந்தருள வேண்டும் திரம்.
நூல் வரலாறு
ஆற்ற லுடையவன் அன்பன்
அறிவுடையோர்
போற்று மொருநண்பர்
சுந்தர பாண்டியன் - தேற்றமிகு
கட்டிடக்கலை வித்தகராம்
அண்ணியார்-சூரிய சுகன்யாவும்
மென்பொருளில் வித்தகராம்
பற்றிய கரங்கள் இனிது நிலைத்திருக்க
மதுரை மீனாட்சியை வேண்டுகிறேன்...
பார் போற்ற நடை போட பராசக்தியை வேண்டுகிறேன்...
சந்தானம் சிறக்க சந்தானலட்சுமியை வேண்டுகிறேன்...
க்ரஹம் சிறக்க க்ரஹலட்சுமியை வேண்டுகிறேன்...
ஐஸ்வர்யம் சிறக்க ஐஸ்வர்யலட்சுமியை வேண்டுகிறேன்...
மன்னும் அவர்பெருமை
என்பாவில் சொன்னேனாம்
இன்று.
மதுரையின் சிறப்பு
வைகைக் கரையில் வளமான
மாநகரின்
துங்க முரைப்பது எளிதாமோ -
தங்கம்போல்
மங்காத வாழ்வளிக்கும்
மண்ணோர்க்கு குன்றாது
மதுரை மீனாட்சியின் சிறப்பு...
0 Comments:
Post a Comment
வலை நண்பர்களே சான்றோர்களே சொன்னது பிடித்தால் ஓட்டு & கருத்து போட்டு ஊக்கம் கொடுங்கள்.
Subscribe to Post Comments [Atom]
<< Home