Saturday, March 14, 2009

சின்ன பையன் ஒருவன்

-----------------------

குரு ரமண கீதம் இசைஞானி இளையராஜாவின் ஆத்மார்த்தமான ஈடுபாட்டுடன் வெளிவந்த அற்புதமான தெய்வீக இசை கதம்பம்.

இதற்கு இசைஞானி அவர்கள் விளம்பரமே செய்யவில்லை, எவரெவருக்கு கேட்க கொடுத்து வைத்திருக்கிறதோ அவர்கள் தேடி அலைந்து தெரிந்து கொள்ளட்டும் என்னும் சித்தாந்தத்தின் படியே இதை மார்கெட்டிங் செய்ய வில்லை,இதன் சிடி ரிகார்டிங்கை ஏ.ஆர்.ரஹ்மானின் பஞ்சதன் ரெகார்டிங் தியேட்டரிலேயே செய்து அவருக்கும் இறைபணி செய்த பாக்கியத்தை வழங்கி இருக்கிறார்.அவர்கள் இருவரின் பெயரால் சண்டை இட்டுக் கொண்டிருக்கும் அன்பர்கள் இதை முதலில் உணர வேண்டும்.

இதில் சின்ன பையன் ஒருவன் பாடல் ,நம்மை ரமணர் தான் யார் என்று அறிய முற்பட்டு திருவண்ணாமலை வந்து சேர்ந்ததையும் ,அங்கு விருபாட்ச குகையில் , பல மாதக் கணக்கில் ஆழ் நிலை தியானம் இருந்து அவர் உடலில் புற்று கரையான் கட்டியதை,சேஷாத்ரி ஸ்வாமிகள் அவரை கண்டு பிடித்து வாழை இலையில் வைத்து மருத்துவம் செய்து காத்ததையும் ,அவர்  பின்னாளில் முற்றும் துறந்து முனிவனாய் ஆனதையும் ,மனம் இழந்தவர்களுக்கு அருள் பாலித்ததையும் மிக அழகாகச் சொல்லியிருக்கிறார்

நல்ல இசையும் ,அருமையான ராக ஆலாபனையும்,என ,இளையராஜாவின் இசையில் ,எழுத்தில்,காந்த சாந்த குரலில், இப்பாடலை  கேட்கையில் மனதில் உயர்ந்த ஞான பரவசத்தை நமக்கு அளிக்கிறார்,நீங்களும் ஆத்மார்த்தமாக அதை உணர்ந்து தான் பாருங்களேன்?

இதை நான் எங்கு தேடியும் டவுன்லோடு செய்ய முடியாமல் போய் ஊருக்கு போன நண்பரிடம் சொல்லி சிடி வங்கி வர சொல்லி கேட்டு ரசித்த அற்புத அனுபவம் வேறு இணைந்து கொண்டது,காத்திருத்தலுக்கு பின் கிடைத்த பொக்கிஷம்.குரு ரமணா எங்கள் ராகதேவன் இளைய ராஜாவுக்கு நீண்ட ஆயுளை,குரலை,ஞானத்தை மேலும் வாரிக் கொடு ..

அவரின் இசைப்பணி மென்மேலும் சிறக்கட்டும்,பல நாத்திக அன்பர்கள்  ஆத்திகராகட்டும்,

இவ்வுலகில் நம்மை படைத்த இறையை உணரச் செய்யும் இசை என்றால்  நம் இசை ஞானியின் இசையே.

சின்ன பையன் ஒருவன்,செய்த செயல் என்னைக் கலக்கிடுதே...
சின்ன பையன் ஒருவன்,செய்த செயல் என்னைக் கலக்கிடுதே...
அதை எண்ணத் தொடங்கி விட்டால்,என் பிறப்பு,ஏன் என்று தோன்றிடுதே...
சின்ன பையன் ஒருவன்,செய்த செயல் என்னைக் கலக்கிடுதே...
அதை எண்ணத் தொடங்கி விட்டால்,என் பிறப்பு,ஏன் என்று தோன்றிடுதே...
முன்னம் நிகழ்ந்ததெல்லாம் மனக்கண் முன்னாலே தோன்றிடுதே.. இன்னம் நினைந்திருந்து நெஞ்சம் அலை பாய்ந்து தவிக்கிறதே...ஏ
சின்ன பையன் ஒருவன்,செய்த செயல் என்னைக் கலக்கிடுதே...
அதை எண்ணத் தொடங்கி விட்டால்,என் பிறப்பு,ஏன் என்று தோன்றிடுதே...
(பால ரமணர் குரல்)
அருணாச்சலா...
அருணாச்சலா...
அருணாச்சலா...
அன்றொரு நாள் மரண பய சோதனையில்,
கொன்று விட்டான் ,தான் என்னும் தன்னை விசாரனையில்...
கட்டிய ஆடைகள்,சாதி குலத்தையும் தொட்டவிழ்த்தான்,
ஒட்டி வளர்ந்த தலை முடி தன்னை மொட்டையிட்டான்..
அண்ணாமலையாரை ஒட்டிக்கொண்டான்..........
அண்ணாமலையாரை ஒட்டிக்கொண்டான்.,
கண்ணீர் கயிற்றால் கட்டிக்கொண்டான்...
சின்ன பையன் ஒருவன்,செய்த செயல் என்னைக் கலக்கிடுதே...
அதை எண்ணத் தொடங்கி விட்டால்,என் பிறப்பு,ஏன் என்று தோன்றிடுதே... திண்ணை தெருக்களிலே தங்கி கொண்டான்,கைகளைப் போர்த்திக்கொண்டான்... உண்ணக்கிடைக்கைலே,உண்டு விட்டு உடம்பில் துடைத்துக் கொண்டான். பூதமும் போகாத பாதாள லிங்கத்துள் போயமர்ந்தான்...
ஒரு மாதம்,வருடமற்று,மனமற்று,தவத்தில் ஆழ்ந்துவிட்டான்.... பூரானும்,பூச்சியும் ஊர்ந்ததம்மா,இளம் தேகத்திலே,
புற்றுக்கறையான் அரித்ததம்மா,பல பாகத்திலே...
நவ முனி யோகத்திலே....

சின்ன பையன் ஒருவன்,செய்த செயல் என்னைக் கலக்கிடுதே...
அதை எண்ணத் தொடங்கி விட்டால்,என் பிறப்பு,ஏன் என்று தோன்றிடுதே...

ஷேஷாத்ரி ஸ்வாமிகள் காப்பாற்ற,நாம் செய்த புண்ணியம் என்றாச்சு...
ஆசா பாசத்துள் அல்லாடும் நமக்காசான் கிடைத்தான் நன்றாச்சு...
புற்றோடு புற்றாக போயிருந்தால் மனம் விற்றுப் போனவற்க்கு மருந்துண்டோ? முற்றும் அறிந்து முனிவனானவன்,
இல்லால் நம் பிறவிக்கு பயனுண்டோ?
இல்லால் நம் பிறவிக்கு பயனுண்டோ?
சின்ன பையன் ஒருவன்,செய்த செயல் என்னைக் கலக்கிடுதே...
அதை எண்ணத் தொடங்கி விட்டால்,என் பிறப்பு,ஏன் என்று தோன்றிடுதே...

மாங்கிளையில்,தூங்கி வாழ்ந்த மனிதர்கள் மண்ணில் உண்டோ?
பூங்குழவி கொட்டி,கால்கள் வீங்கத்தாங்கி கொண்டாருண்டோ?

த்யானித்திருப்பான்...சோரூட்டிப் போவார்கள்...தெரியாது....
நாலு நாள் ஆனாலும் வாயை விட்டு சோறு இறங்காது...

சிறு முனிக்கு மக்கள் கூடுவார்,சிலருக்கு பொறுக்காது..
உடலை மாய்த்திடப் போனானே ...விடவில்லை,ஈசனும் விதியா அது?
யாருக்கும் தெரியாது...
சின்ன பையன் ஒருவன்,செய்த செயல் என்னைக் கலக்கிடுதே...
அதை எண்ணத் தொடங்கி விட்டால்,என் பிறப்பு,ஏன் என்று தோன்றிடுதே...

உடம்போடு வாழ்ந்தாலும் உடம்பின்றி வாழ்ந்தவன் குரு ரமணன்..
உடம்பின்றி ஆன்மாவாய் உடன்வந்து உறைபவன் குரு ரமணன்..

புற்று நோயகற்ற கீறினாலும், அவன் தேகத்தில் இல்லை..
முற்றும் தேக வாழ்வு முடிந்தாலும் அவன் தேகி இல்லை..

ஒளி வெள்ளமாய்..மலை உச்சியில்,கலந்து விட்டான் ரமணன்,
கலியுகத்தில் களி ஒளிப்போன் அவனே குரு ரமணன்..
அவனே குரு ரமணன்..

சின்ன பையன் ஒருவன்,உலகத்தை சின்னதாய் ஆக்கிவிட்டான்.
இந்த சின்ன உலகினையும்,அன்பு கொண்டு,தன்னோடினைத்துக்கொண்டான்.. முன்னம் நிகழ்ந்ததெல்லாம் மனக்கண் முன்னாலே தோன்றிடுதே..
இன்னம் நினைந்திருந்து நெஞ்சம் அலை பாய்ந்து தவிக்கிறதே...ஏ
சின்ன பையன் ஒருவன்,செய்த செயல் என்னைக் கலக்கிடுதே...
அதை எண்ணத் தொடங்கி விட்டால்,என் பிறப்பு,ஏன் என்று தோன்றிடுதே...

chinna paiyan oruvan,seitha seyal ennaik kalakkidudhae...

chinna paiyan oruvan,seitha seyal ennaik kalakkidudhae...

adhai eNNath thodangi vittaal,en piRappu,aen endru thoanRiduthae...

chinna paiyan oruvan,seitha seyal ennaik kalakkidudhae...

adhai eNNath thodangi vittaal,en piRappu,aen endru thoanRiduthae...

munnam nigazhndhadhellaam manakkaN munnaalae thoanRiduthae..

innam ninaindhirundhu nenjam alai paaindhu thavikkiRathae...ae

chinna paiyan oruvan,seitha seyal ennaik kalakkidudhae...

adhai eNNath thodangi vittaal,en piRappu,aen endru thoanRiduthae...

(baala ramaNar kural)

aruNaachchalaa...

aruNaachchalaa...

aruNaachchalaa...

androru naaL maraNa baya soathanaiyil,

konRu vittaan ,thaan ennum thannai visaaranaiyil...

kattiya aadaigaL,saathi kulaththaiyum thottavizhththaan,

otti vaLarndha thalai mudi thannai mottaiyittaan..

aNNaamalaiyaarai ottikkondaan..........

aNNaamalaiyaarai ottikkondaan.,kaNNeer kayiRRaal kattikkondaan...

chinna paiyan oruvan,seitha seyal ennaik kalakkidudhae...

adhai eNNath thodangi vittaal,en piRappu,aen endru thoanRiduthae...

thiNNai therukkaLilae thangi kondaan,kaigaLaip poarththikkondaan...

uNNakkidaikkailae,uNdu vittu udambil thudaiththuk kondaan.

boodhamum poagaatha paadhaaLa lingaththuL poayamarndhaan...

oru maadham,varudamatru,manamaRRu,dhavaththil aazhndhuvittaan....

pooraanum,poochchiyum oorndhadhammaa,iLam thaegaththilae,

puRRukkaRaiyaan ariththathammaa,pala paagaththilae...

nava muni yoagaththilae....

chinna paiyan oruvan,seitha seyal ennaik kalakkidudhae...

adhai eNNath thodangi vittaal,en piRappu,aen endru thoanRiduthae...

shaeshaadhri swaamigaL kaappaaRRa,naam seitha puNNiyam enRaachchu...

aasaa paasaththuL allaadum namakkaasaan kidaiththaan nanRaachchu...

puRRoadu puRRaaga poayirundhaal manam viRRup poanavaRkku marundhuNdoa?

muRRum aRindhu munivanaanavan,illaal nam piRavikku payanundoe?

illaal nam piRavikku payanundoe?

chinna paiyan oruvan,seitha seyal ennaik kalakkidudhae...

adhai eNNath thodangi vittaal,en piRappu,aen endru thoanRiduthae...

maangiLaiyil,thoongi vaazhndha manidhargaL maNNil undoa?

poonguzhavi kotti,kaalgaL veengaththaangi koNdaarundoe?

dhyaaniththiruppaan...soaroottip poavaargaL...theriyaathu....

naalu naaL aanaalum vaayai vittu choaRu iRangaathu...

siRu munikku makkaL kooduvaar,silarukku poRukkaadhu..

udalai maaiththidap poanaanae ...vidavillai,eesanum vidhiyaa adhu?

yaarukkum theriyaadhu...

chinna paiyan oruvan,seitha seyal ennaik kalakkidudhae...

adhai eNNath thodangi vittaal,en piRappu,aen endru thoanRiduthae...

udamboadu vaazhndhaalum udambinRi vaazhndhavan guru ramaNan..

udambinRi aanmaavaai udanvandhu uRaibavan guru ramaNan..

puRRu noayagatra keeRinaalum, avan thaegaththil illai..

muRRum dhaega vaazhvu mudindhaalum avan dhaegi illai..

oLi veLLamaai..malai uchchiyil,kalandhu vittaan ramaNan,

kaliyugaththil kaLi oLippoan avanae guru ramaNan..

avanae guru ramaNan..

chinna paiyan oruvan,ulagaththai chinnadhaai aakkivittaan.

indha chinna ulaginaiyum,anbu kondu,thannoadinaiththukkondaan..

munnam nigazhndhadhellaam manakkaN munnaalae thoanRiduthae..

innam ninaindhirundhu nenjam alai paaindhu thavikkiRathae...ae

chinna paiyan oruvan,seitha seyal ennaik kalakkidudhae...

adhai eNNath thodangi vittaal,en piRappu,aen endru thoanRiduthae...

.

Labels:

1 Comments:

Blogger அகநாழிகை said...

அன்பிற்குரிய நண்பருக்கு, வணக்கம்.
உங்கள் பதிவுகள் வித்தியாசமாகவும், தனித்தும் சிறப்பாக உள்ளது.
வில் ஸ்மித் நடித்த “The Pursuit of Happiness” படம் பற்றிய எனது கருத்தினை பதிவு செய்துள்ளேன். படித்து தங்கள் கருத்தினை கூறுமாறு அன்புடன் கோருகிறேன். நன்றி.
www.aganaazhigai.blogspot.com

- பொன். வாசுதேவன்

March 15, 2009 at 9:44 AM  

Post a Comment

வலை நண்பர்களே சான்றோர்களே சொன்னது பிடித்தால் ஓட்டு & கருத்து போட்டு ஊக்கம் கொடுங்கள்.

Subscribe to Post Comments [Atom]

<< Home