Wednesday, May 3, 2023

TVS iqube எலக்ட்ரிக் வாகனம் வீல் பெண்ட் நீக்கும் பணி நிறைவு

ஒரு வழியாக என் EV ஹப் மோட்டார் அலாய் வீல் நேற்று புதிது போல  சரி செய்து விட்டேன்.

மெக்கானிக் சாதிக் பாட்ஷா என்பவர் இதற்கு உதவினார்,இவர் அலாய் வீல் பெண்ட் பழுது நீக்குவதில் நிபுணர், இந்த மூன்று  சகோதரர்களுக்கு பூந்தமல்லி மற்றும் பம்மலில் கடைகள் உண்டு.

நேற்று காலை 10-00 மணிக்கு பம்மலில் என் வண்டியை கொண்டு தந்தேன், சாதிக் பாட்ஷா நீங்கள் எப்படி வீட்டுக்கு போவீர்கள்? எனக் கேட்டார்,நடந்து போய்விடுவேன் என்றதும் கேட்காமல், நீங்கள் என் வண்டியை கொண்டு போங்கள் என்று தந்தார்(எத்தனை உயரிய பண்பு பாருங்கள்), என் வண்டியை பூந்தமல்லி கிளை கடையில் கொண்டு சென்று பழுது நீக்கி கொண்டு வந்தார், சரியாக மதியம் 1-30 மணிக்கு என் வண்டி கையில் கிடைத்து விட்டது, அத்தனை வேலை சுத்தம்,படங்கள் இணைப்பில்.

எல்லா வித மோட்டார் பைக் , ஸ்கூட்டர் ரிம், ரேஸர் பைக், கார் அலாய் வீல் என எதுவானாலும் அத்தனை அழகாக பழுது நீக்கி புதிது போல தருகிறார்கள், தேவைப்படுபவர் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

அவரின் விலாச அட்டை இணைப்பில்

Labels: , , ,