Sunday, May 31, 2009

நல்ல முதலாளியும் நொள்ளை தொழிலாளியும்

நான் முன்பு சென்னையில் வேலை பார்த்தது ஒரு தனியார் ஆர்கிடெக்ட் நிறுவனத்தில்,அது அனைவருக்கும் நல்ல சம்பளம் கொடுத்து (2006 ஆம் வருடம் ஆபிஸ் பாயின் சம்பளமே 12000,அவர்களுக்கு ப்ரீமியம் பைக்கும் உண்டு ,அது தவிர மொபைல் போன் ,லோன் ,இன்னும் பல ,அப்படிஎன்றால் ஒரு ஆர்கிடேக்டோ அல்லது இஞ்சினியரோ ,என் போன்ற டெக்நிஷியன்களோ எவ்வளவு வாங்குவர் ?என்று பார்த்துக்கொள்ளுங்கள். வருடத்திற்கு குறைந்த சம்பள உயர்வே 5000.அங்கிருந்து கழுத்தை பிடித்து வெளியில் தள்ளினாலும் யாரும் அடுத்த கம்பனிக்கு போக மாட்டர்கள்.(ஐடி கம்பெனிகள் காலூன்றும் முன்பிருந்தே இப்படி FANCY சம்பளமும் காரும் உணவும் 3 மாத போனசும் கொடுத்தவர் எங்க முதலாளி.
,பத்து வருடம் அங்கே பணிபுரிந்தவர்களுக்கு முதலில் மாருதி கார்,பிறகு சென் என்று மாறும்,போதாத குறைக்கு பெட்ரோல் கார்டு வேறு அங்கே ரிசெப்ஷனில் உண்டு,அதை கொண்டு போய்
பக்கத்து ரோட்டில் உள்ள பங்கில் பெட்ரோலோ டீசலோ நிரப்பி கையொப்பமிட்டு கொண்டு வந்து மேசை டிராயரில் வைத்தால் போதும். (அளவுகளோ வரைமுறையோ கிடையாது)
மதியம் சுடச்சுட மதராஸ் மீல்ஸ் ஹாட் பாக்ஸில் மொட்டை மாடியில் தயாராக இருக்கும்.சப்பாத்தியில் ஆரம்பித்து மில்க் சுவீட் வரை.
முதலாளி தொடங்கி கடைசி தொழிலாளி வரை அது தான் உணவு .
அங்கு வேலை கிடைப்பது என்பது அமெரிக்கன் தூதரக நேர்முக தேர்வில் பாஸாவது போன்று தான்.
அதிர்ஷ்டம் மற்றும் சிபாரிசு + திறமை.
வருடத்திற்கு கண்டிப்பாக குடும்பத்துடன் கூடிய சுற்றுலா ஒரு வாரத்திற்கு கூட்டி போவார்கள்.எல்லாம் அவர்கள் செலவு.
ஒரு முறை அனைவரையும் இலங்கை அழைத்துச் சென்றனர்.
(அங்கு மாமேதை ஜெப்ரீ பாபா -இந்த நூற்றாண்டின் தலை சிறந்த ஆர்கிடெக்ட் ,அவர் வடிவமைத்த கட்டிடங்களை காண அனைவரையும் இலவசமாக கூட்டிச் சென்றனர்.)
இதை எல்லாம் குறிப்பிட்டு விட்டபடியால் என் முதலாளியை பற்றி சொல்லவேண்டிய அவசியம் இல்லாமல் போகிறது.
இப்படி பட்ட அலுவலகத்தில் உலவும் எச்சைப்பயல்கலாய் சுரண்டல் பேய்கள் அலைந்தன,அலைந்து கொண்டு இருக்கின்றன.
1.தண்ணீர்.
அங்கு வேலை பார்க்கும் சூபர் சீனியர்களின் அடாவடி இருக்கிறதே? ..
வரும் போதே காரில் 2 அபோல்லோ தண்ணீர் காலி கேனுடன் வருவர்.
ஆபிஸ் விட்டதும் பேன்ட்ரி சென்று 2 கேனிலும் தண்ணீர் பிடித்துக் கொண்டு செல்வர்.இருக்கும் சீனி,பால் பவுடர் என சகலத்தையும் கபளீகரம் செய்வர்.
2. ஸ்டேஷநேரி.
இவர்கள் யாரும் தன் குழந்தைகளுக்கு தேவையான பென்சில் பேனா ஸ்கெட்சு,நோட்டு,அழி ரப்பர்,ஷார்பெநேர் ,கலர் பென்சில்,சார்ட்டு,இங்க் , பைல்கள்,டைரிகள் ,டேப்பு,பசை ,வெளியே வாங்குவதில்லை.எல்லாம் அலுவலகத்திலிருந்து திருட்டுத்தனமாகத்தான்.இதை புதியவர்கள் கண்டும் காணாமலும் போவது நலம் ,இல்லையேல் சீட்டு கிழிக்கப்படும்.
3.பெட்ரோல்
ஐயோ,இது ரொம்ப விலை உயர்ந்த வஸ்து வாயிற்றே
? என்ற கவலை இல்லாமல்.ஒவ்வொருவரும் இஷ்டத்திற்கு நிரப்பிக்கொண்டு,கையொப்பமிடாத வெற்று பில்களை வைத்துவிட்டு போய்விடுவர்.என்ன கொடுமை என்றால் அக்கா வண்டி,அண்ணன் தம்பி வண்டி என நாளொரு வண்டியில் வந்து பெட்ரோல் நிரப்பிச் செல்வார்கள்.

4.ஆபிஸ் பழைய ஏசி டிவி நாற்காலி,மேசை,கம்ப்யூடேர் என்று அவ்வப்பொழுது புதுப்பிக்கும்,அப்போது பழையவற்றை லாவகமாக சூறைத் தேங்காய் பொறுக்குவது போல பொறுக்கிச் சென்று விற்றோ, அல்லது வீட்டிலோ வைத்து விடுவர்.
5.கார் டயர்
கார் டயரைகூட இவர்கள் விடுவதில்லை,பல சமயங்களில் காரை கைகாசு போட்டு சர்வீஸ் செய்ததாய், மாற்றாத டயரை மாற்றியதை பில் வாங்கி வந்து ஏய்ப்பார்.
6.ஒருத்தர் மேல் ஒருத்தர் அவ்வளவு பொறாமையோடும் காய்ச்சலோடும் இருப்பார்,நாய் பல்லைக்காட்டிக்கொண்டு உறுமும் ,ஆனால் சண்டை போடாது.அது போல.நாளொரு கூத்து தான்.இவர்கள் எல்லா களவாணித்தனத்தையும் சேர்ந்தே செய்வதால் முதலாளிக்கு விஷயம் போகவே போகாது.இவர்கள் ஒரு விஷயத்தில் மட்டும் ஒற்றுமையாக செயல்படுவர்.புதியவர்களை ராக்கிங் செய்வது.முதலாளியிடம் போட்டுக்கொடுப்பது,சம்பள உயர்வு சமயத்தில் நன்கு போட்டுக்கொடுத்து சம்பளத்தை குறைத்தோ அல்லது எதுவுமோ இல்லாமல் செய்வது.தங்கள் பணிகளை குறிபார்த்து புதியவர் தலையில் வைத்துவிட்டு ஓடிவிடுவது.எதாவது பெரிய பிரச்சனை வந்தால் பழியை புதியவர் மேலும்,எதாவது பாராட்டுக்கள் வந்தால் குனிந்து தன கழுத்தை நீட்டிக்கொல்வதும் எக்ஸ்ட்ரா அசிங்கங்கள்.அதில் புதிய ஆண் ஊழியருக்கு தினமும் தரப்படும் இரவுப்பணி,(வாரத்தில் 4 நாள்)வராவிட்டாலோ மறுத்தாலோ போட்டுத்தருதல்.வேலைநீக்கம்.
முதலாளி தலை தென்பட்டால் குனிந்து குப்பையை பொறுக்குவது(அவர்களே போட்டுவிட்டு)ஒருவன் ஒருபடி மேலே போய் முதலாளியின் ரொம்ப சுத்தமான டாய்லெட்டை அவர் அறிய ஹார்பிக் போட்டு கிளீன் செய்தது,முதலாளி என்னப்பா இதெல்லாம் ?என்று பீல் பண்ணி கேட்க ..
எப்போவும் வரும் ஹவுஸ் கீபிங் ஆள் சரியாக க்ளீன் செய்யவில்லை என்றும் முதலாளி டாய்லெட்டை வாடிக்கையாளரும் உபயோகிப்பதால் தானே இறங்கி சுத்தம் செய்ததாய் பீற்ற.(முதலாளி பின் வரும் நாட்களில் யாருக்கேனும் உபதேசம் செய்ய ''அவனைப் பாருடா ...நான் சொன்னா அவன் என் கக்கூசைக்கூட கழுவுவான் என்று சொல்லுவார்.''
7. பிளஸ் 2 பெயிலான ஒருவன் தன சாமர்த்தியத்தாலும் குள்ள நரித்த்தனத்தாலும் அட்மின் டேமேஜராகி 70000 சம்பாதிப்பாநேன்றால் அது இங்கு தான்.
அதை விட கொடுமை என்றால் அவன் போடும் 15 ரூபாய் சென்ட்ரல் பிளாட்பார ஜெட்டியையும் மீறி அவன் புட்டமும் வெளியே தெரியும்படி பேன்ட் அணிவான்.பெல்ட் வாங்க மனமில்லாமல் சணல் கயிறு போட்டு கூட பேண்டை கட்டும் அந்த கபோதி.லீவு நாளில் கூட வீட்டு மனிதர்களோடு ஆபீஸ் வந்து ஓசி ஏசி ஓசி டிவி ஓசி டெலிபோன் கால்கள் ,ஓசி உணவு பண்டம் என குதூகளிப்பான்.
இதெல்லாம் விட ஒரு கொடுமை ஆபீஸ் விட்டு கிளம்பும் முன் வீட்டில் பொண்டாட்டிக்கு அவள் அம்மாவுடன் 3 மணி நேரம் பேசிக்குலாவ STD லைன் போட்டு லிங்க் கொடுத்து விட்டு தான் கிளம்புவான்.
என்ன தலை சுற்றுகிறதா?
8. இது எல்லாம் கடைந்தெடுத்த உண்மைகள்,இன்றும் நடப்பவை.
9.இவர்கள் பூர்வ புண்ணியஸ்தானம் நன்றாக இருப்பதால் திருடினாலும் மாட்டாமல் ,எங்கள் நல்ல முதலாளியின் பூர்வ புண்ணியஸ்தானம் நன்றாக இருப்பதால் ஆபீஸ் இன்னும் போண்டியாகாமலும் ஓடிக்கொண்டிருக்கிறது.
10.இதில் ஒரு சில கழிசடைகள் சம்பளத்தை ஆபீஸ் இலும் உழைப்பை தன் சொந்த கட்டுமான வடிவமைப்பு செய்யவும் உபயோகிக்கும்.எல்லோரும் சொந்தமாக வேறு ப்ராஜெக்ட் எடுத்து அதிலும் லாபம் பார்ப்பார்.எல்லாம் ஆபீஸ் நேரத்தில்.
அன்றாடம் அலுவலகத்தில் பேப்பர், குண்டூசி, ஸ்டேப்ளர் பின்,டாய் லேட் பேப்பர்,ஹார்பிக்,பாச்சா உருண்டை,ஒடோனில்,hand வாஷ் லிக்விட் சோப்பு போன்றவற்றையும், காபி இயந்திர ரெடிமெட் காபித்தூள், சர்க்கரை போன்றவற்றையும், குடிப்பதற்கு வைத்திருக்கும் மினரல் வாட்டரையும், "ஆட்டை'யைப் போடும் இதுபோன்ற அல்பங்கள் எப்போது தான் திருந்துமோ?

அதிகாரம்,ஜாதிவெறி,பணத்தாசை,இல்லாத அந்த மனிதர் எங்க முதலாளி ஒரே குறியுடன் தான் இயங்குகிறார்.அது தன்னிடம் வேலை பார்ப்பவன் தன்னைப்போலவே வசதியுடன் வாழ வேண்டும் என்பது தான்.அதை இவர்கள் என்றாவது புரிந்துகொண்டு ஊழலில் இருந்து வெளிவந்தால் அதுவே இந்த கட்டுரைக்கு கிடைத்த வெற்றி.

Labels:

Saturday, May 30, 2009

quotes of George Carlin























IF YOU DON'T READ THIS TO THE VERY END, YOU HAVE LOST A DAY IN YOUR LIFE. AND WHEN YOU HAVE FINISHED, DO AS I AM DOING AND SEND IT ON.

George Carlin's Views on Ageing

Do you realise that the only time in our lives when we like to get old is when we're kids? If you're less than 10 years old, you're so excited about ageing that you think in fractions.

'How old are you?' 'I'm four and a half!' You're never thirty-six and a half. You're four and a half, going on five! That's the key

You get into your teens, now they can't hold you back. You jump to the next number, or even a few ahead.

'How old are you?' 'I'm gonna be 16!' You could be 13, but hey, you're gonna be 16! And then the greatest day of your life .... . You become 21. Even the words sound like a ceremony. YOU BECOME 21. YESSSS!!!

But then you turn 30. Oooohh, what happened there? Makes you sound like bad milk! He TURNED; we had to throw him out. There's no fun now, you're Just a sour-dumpling. What's wrong? What's changed?

You BECOME 21, you TURN 30, then you're PUSHING 40. Whoa! Put on the brakes, it's all slipping away. Before you know it, you REACH 50 and your dreams are gone.

But wait!!! You MAKE it to 60.. You didn't think you would!

So you BECOME 21, TURN 30, PUSH 40, REACH 50 and MAKE it to 60.

You've built up so much speed that you HIT 70! After that it's a day-by-day thing; you HIT Wednesday!

You get into your 80's and every day is a complete cycle; you HIT lunch; you TURN 4:30 ; you REACH bedtime. And it doesn't end there Into the 90s, you start going backwards; 'I Was JUST 92.'

Then a strange thing happens. If you make it over 100, you become a little kid again. 'I'm 100 and a half!'
May you all make it to a healthy 100 and a half!!

HOW TO STAY YOUNG

1. Throw out nonessential numbers. This includes age, weight and height. Let the doctors worry about them. That is why you pay 'them'

2. Keep only cheerful friends. The grouches pull you down.

3. Keep learning. Learn more about the computer, crafts, gardening, whatever. Never let the brain idle. 'An idle mind is the devil's workshop.' And the devil's name is Alzheimer's.

4. Enjoy the simple things.

5. Laugh often, long and loud. Laugh until you gasp for breath.

6. The tears happen.. Endure, grieve, and move on. The only person, who is with us our entire life, is ourselves. Be ALIVE while you are alive.

7. Surround yourself with what you love , whether it's family, pets, keepsakes, music, plants, hobbies, whatever. Your home is your refuge.

8. Cherish your health: If it is good, preserve it. If it is unstable, improve it. If it is beyond what you can improve, get help.

9. Don't take guilt trips. Take a trip to the mall, even to the next county; to a foreign country but NOT to where the guilt is.

10. Tell the people you love that you love them, at every opportunity..

AND ALWAYS REMEMBER :
Life is not measured by the number of breaths we take, but by the moments that take our breath away.

Labels:

Friday, May 29, 2009

Caution on Car A/C

Have a Good Day!!!


Do not turn on A/C immediately as soon as you enter the car!




Please open the windows after you enter your car and do not turn ON the
air-conditioning immediately. According to a research done, the car dashboard,
sofa, air freshener emits Benzene, a Cancer causing toxin
(carcinogen- take note
of the heated plastic smell in your car). In addition to causing
cancer, it poisons
your bones, causes anemia, and reduces white blood cells. Prolonged exposure
will cause Leukemia, increasing the risk of cancer may also cause miscarriage.


Acceptable Benzene level indoors is 50 mg per sq. ft. A car parked indoors with
the windows closed will contain 400-800 mg of Benzene. If parked outdoors
under the sun at a temperature above 60 degrees F, the Benzene level goes up
to 2000-4000 mg, 40 times the acceptable level... & the people inside
the car will
inevitably inhale an excess amount of the toxins.


It is recommended that you open the windows and door to give time for
the interior to air out before you enter. Benzene is a toxin that affects your
kidney and liver, and is very difficult for your body to expel this
toxic stuff.



"When someone shares something of value with you and you benefit from it,
you have a moral obligation to share it with others"

Labels:

Thursday, May 28, 2009

மளிகை பொருட்கள் கடும் விலை உயர்வு-எங்கே போய் முடியும்?

லக்கி லுக் பதிந்தது போல ஆயிரம் ருபாய் சம்பள உயர்வு கிடைத்தால் மூவாயிரம் ருபாய்க்கு கூடுதல் செலவுகள் பல வகைகளில் வருகிறது.
நல்ல அரிசி (குமட்டாமல் உள்ளே போகின்ற அரிசி) 38 ருபாய் முதல் 42 ருபாய் வரை ,சர்க்கரை-24ருபாய் முதல்-27 ருபாய்வரை .
காய்கறிகள் எதுவும் வாங்கும் படி இல்லை.
காபித்தூள் -280ருபாய் முதல் 300 ருபாய்
இந்த விலைவாசி நேரடியாக பாதித்தது ,நம் நாட்டில் பெரும்பான்மையாக இருக்கும் மிடில் கிளாஸ் மக்களைத்தான்.எங்கும் குடிநீர் வராததால் எல்லோரும் 25 ரூபாய் முதல் 40 ருபாய் வரை விற்கும் தண்ணீர் கேன் களையே வாங்குகின்றனர்.(அதன் தரம் தரித்திரம் )இதற்க்கு தனி பதிவு போடுவேன்.
அதுவும் இந்த 5000 முதல் 10000 வரை சம்பளம் வாங்கும் மக்கள் விளக்கில் விழுந்த விட்டில் பூச்சிகளாய் தவிக்கும் நிலை மிகவும் பரிதாபம்,
நான் மேல்தட்டு மக்களை பற்றியோ ,கீழ்த்தட்டு மக்களை பற்றியோ பேசவரவில்லை.
முதலாமவருக்கு விளைவாசியை பற்றி கவலை இல்லை இரண்டாமாமவர் அன்றாடம் காய்ச்சிகள் அன்று உழைத்தால் மட்டுமே அன்று உண்ண முடியும் .
அய்யா மாபெரும் அரச எந்திரங்களே ஆன்லைன் வர்த்தகத்தை அறவே ஒழியுங்கள் ,உங்களுக்கு சேவை வரி கிடைக்கிறது என்று பஞ்ச மகா பாதகத்தை செய்யாதீர்கள்.யாரையும் சோற்றுக்கு லாட்டரி அடிக்க விடாதீர்கள்.பட்டினிச்சாவுகள் இனி வேண்டாம்.
(நீங்கள் தரும் இலவசங்கள் பெரும்பாலும் அதற்க்கு தகுதியானவருக்கு போவதில்லை. மாறாக விலை பொருட்களாக பல சமயம் மாறிவிடும் அபாயமும் உண்டு) பாத்திரம் அறிந்து பிச்சை போடுங்கள்.கனவான்களே...


அரிசி, பருப்பு, எண்ணெய், எல்லா விலையும் உயர்வு தான் : விழிபிதுங்கி மக்கள் தவிப்பு

மே 28,2009,00:17

செய்தி நன்றி:-தினமலர்


பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் மளிகைப் பொருட்களில் புளி, தனியாவைத் தவிர மற்ற அனைத்துபொருட்களும் விலைஏற்றத்தை சந்தித்துள்ளன. சமீப காலமாக தமிழகத்தில் வெளிமாநிலங்களில் இருந்து வரத்து குறைவு, தமிழகத்தில் விளைச்சல் குறைவு போன்ற காரணங்களால் 19 ரூபாய்க்கு விற்று வந்த அரிசி கூட 34 லிருந்து 38 ரூபாய் வரையில் விற்கப்பட்டு வருகிறது. அரிசி விலை அதிகரிக்கப்படவில்லை என்று மில் உரிமையாளர்களும், அரசும் மாறி மாறி அறிக்கை வெளியிட்டாலும், அரிசி விலையில் சரிவு ஏதும் ஏற்படவில்லை. தற்போது, சராசரியாக 30 ரூபாய்க்கு அதிகமான விலை கொடுத்தே அரிசியை வாங்கி பொதுமக்கள் பெருமளவில் பயன்படுத்தி வருகின்றனர். அரிசி தான் பிரதான உணவு என்றாலும், குழம்பு, ரசம், பொரியல் போன்ற ' சைடு டிஷ்' கள் உருவாக்க தேவையான காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்களின் விலையும் கடந்த ஓராண்டாக கடுமையாக உயர்ந்துள்ளது. இந்தவிலை உயர்வு நடுத்தர மக்களை விரக்தியின் விளிம்பிற்கு செல்ல வைத்துள்ளது.

மளிகைப் பொருட்களை பொறுத்தவரையில் புளி மற்றும் தனியா ஆகிய இரண்டின் விலை மட்டுமே அதிகப்படியான வரத்தின் காரணமாக குறைந்துள்ளது. மற்ற பொருட்களின் விலையில் ஏற்றமே காணப்படுகிறது. சென்னைக்கு கர்நாடக மாநிலத்தில் இருந்துதான் புளி வருகிறது.

இந்தாண்டில் தமிழகம் மற்றும் கர்நாடகாவில் புளி அதிகளவு விளைந்துள்ளது. இதனால், கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் ஒரு கிலோ 65 முதல் 70 ரூபாய் வரையில் விற்கப்பட்டு வந்த புளி தற்போது ஒரு கிலோ 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பழைய புளி அதாவது கடந்தாண்டில் விளைந்த புளி ஒரு கிலோ 40 ரூபாயிலிருந்து 25 ரூபாயாக தற்போது விற்கப்படுகிறது. தனியா தமிழகத்தில் முன்பு விளைவிக்கப்படுவதில்லை. ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம் மாநிலங்களிலிருந்து மட்டுமே தருவிக்கப்பட்டது. இதனால், விலை குறையாமல் அப்படியே இருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் விருதுநகர், சாத்தூர், சங்கரன்கோவில், கோவில்பட்டி மற்றும் நெல்லை மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தனியா பயிரிடப்பட்டு, இந்தாண்டில் நல்ல விளைச்சல் கிடைத்துள்ளது. இதையடுத்து தனியா விலை தற்போது குறைந்துள்ளது. ஒரு கிலோ தனியா 65 லிருந்து 70 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது 55 ரூபாயாக குறைந்துள்ளது. இந்தாண்டில் குண்டு மிளகாய் விளைச்சல் அதிகரித்துள்ளது. தமிழகம், ஆந்திராவில் புதிய மிளகாய் வரும்பட்சத்தில் விலைஅதிகளவு குறையும். இந்த வகையில் தற்போது கடந்த மாதம் ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்கப்பட்ட குண்டு ரகம், 120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இரண்டாம் ரகம் 90 ரூபாயிலிருந்து 100 ரூபாய் முதல் 110 ரூபாய் வரையில் விற்கப்படுகிறது. ஆந்திராவிலிருந்து வரும் நீளமான மிளகாய் ரகத்தின் விலை ஒரு கிலோ 50 ரூபாயிலிருந்து 60 ரூபாயாக உயர்ந்துள்ளது. உணவுப் பொருட்களில் மருத்துவ குணத்தை கொண்ட பூண்டு கிலோ ரூ25 வரை குறைந்த நிலை மாறி தற்போது கிலோ 55 ரூபாய்க்கும், சிறிய பூண்டு 15 ரூபாயிலிருந்து 40 ரூபாய் வரை விற்கப்படுகிறது. துவரம் பருப்பு முதல் ரகம் கிலோ 58 ரூபாயிலிருந்து 62 ரூபாய் வரையில் விற்கப்படுகிறது. இரண்டாம் ரகம் 45 ரூபாயிலிருந்து 53 ரூபாய் வரையில் விற்கப்படுகிறது. கடந்த மாதம் 50 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒருகிலோ உளுந்து தற்போது 53 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பர்மாவிலிருந்து அதிகளவில் இறக்குமதி செய்யப்படும் உளுந்து கடந்தமாதம் ஒரு கிலோ 45 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது 52 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆனால், தற்போது ரேஷன் கடைகளில் பருப்பு விற்பனை அதிகரித்துள்ளதால் மளிகை கடையில் பருப்பு விற்பனை மந்தமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. வெளிமார்க்கெட்டில் 50 ரூபாய்க்கு மேல் கொள்முதல் செய்யும் பருப்பு வகைகளை குறைந்த விலையில் ரேஷன் கடைகளில் அரசு விற்பனை செய்து வருகிறது. மேலும், வெல்லம் மற்றும் சர்க்கரை விலையும் தற்போது உயர்ந்துள்ளது.

ஒரு கிலோ வெல்லம் கடந்த மாதம் 25 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது 30 முதல் 32 ரூபாய் வரையில் விற்கப்படுகிறது. சர்க்கரையை பொறுத்தவரையில் தற்போது ஆன்லைன் வர்த்தகத்திலிருந்து மத்திய அரசு விலக்களித்துள்ளது. பதுக்கலை தடுப்பதும், விலை உயர்வை கட்டுப்படுத்துவதுமே இதில் மத்திய அரசிற்குள்ள நோக்கம். தமிழகத்திற்கு இந்தாண்டு மத்திய அரசு 16.5 லட்சம் டன் சர்க்கரை ஒதுக்கியுள்ளது. ரேஷனிலும் வினியோகிக்கப்படுவதால், அத்யாவசியப் பொருட்களில் ஒன்றாகவும் சர்க்கரை சேர்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒட்டு மொத்தமாக கரும்பு உற்பத்தியில் ஒரு கோடி டன் அளவிற்கு குறைந்துள்ளதால் இம்மாதம் சர்க்கரை விலை ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்குமுன்னர் 22 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ சர்க்கரை 24 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பாக்கெட்டில் அடைக்கப்பட்ட சர்க்கரை ஒரு கிலோ 27 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், மைதா, ரவை மற்றும் கோதுமை விலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் ஒருகிலோ 19 ரூபாய்க்கு விற்கப்பட்ட மைதா இம்மாதம் 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

மளிகைப் பொருட்கள் விலை உயர்வு குறித்து தமிழ்நாடு அனைத்து மளிகை வியாபாரிகள் சங்க தலைவர் சொரூபன் கூறியதாவது: ஆன்லைன் வர்த்தகத்தில் இருந்து தற்போது சர்க்கரை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் உள்ள அனைத்து உணவுப்பொருட்களையும் எடுக்க வேண்டும். சேவை வரி கிடைப்பதாக மத்திய நிதி அமைச்சராக இருந்த சிதம்பரம் ஏற்கனவே தெரிவித்திருந்தார். சேவை வரி கிடைக்கிறது என்பதற்காக பதுக்கலையும், கடும் விலை உயர்வையும் ஊக்குவிக்க வேண்டாம். விலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு சொரூபன் கூறினார்.

-நமது சிறப்பு நிருபர்-

Labels:

Wednesday, May 27, 2009

இசையராஜாவின் விசிறிகளின் சங்கமத்தில் நானும் .......

இசையராஜாவின் விசிறிகளின் சங்கமத்தில் நானும் .......
அய்யா நம் ராஜாவுக்கு வியாபாரம் தெரியாது,900 திரைப்படங்கள்,4500 க்கும் அதிகமான பாடல்கள்,12000 க்கும் அதிகமான பின்னணி இசை சேர்ப்புகள்.இவரின் வேகம் எந்த புயலையும் மிஞ்சும்.இவ்வளவு செய்தும் அதன் பாடல் உரிமை,ஆடியோ உரிமை,ஹிந்தி உரிமை,தெலுகு உரிமை,பின்னணி இசை உரிமை ,மியூசிக் பள்ளி என்று எதிலும் பரிணாமிக்க மனம் ஒப்பாதவர்,இன்று ராஜாவின் பழைய பாடல்களை அப்படி கொலை செய்து வரும் சினிமாகாரர்களைகூட இவர் ஒன்றும் சொல்வதில் என்பதே ஒரு சான்று.
அவரால் பயனடைந்த நடிகர்கள்,தயாரிப்பாளர்கள் தாம் எத்தனை? கமல்ஹாசன்,ரஜினி ,மோகன் ,
பாலச்சந்தர்,பாரதிராஜா,ராஜ்கண்ணு,தாணு,ராஜ்கிரண்,ராமராஜன்,ஜீவீ
,மணிரத்னம்,சங்கிலி முருகன்,ஏவீஎம்,என சொல்லிக்கொண்டே போகலாம்எத்தனை பேருக்கு இரவு பகல் பார்க்காமல் அலுக்காமல் பணி புரிந்திருப்பார்,?1985 ஆம் ஆண்டு மட்டும் எத்தனை ஹிட் பாருங்கள்
சிந்து பைரவி,முதல் மரியாதை,சிப்பிக்குள் முத்து என ..
,அவர் ஏதாவது படத்துக்கு அநியாய கொள்ளை அடித்ததாக யாராவது கேட்டதுண்டா?அப்படி செய்திருந்தால் தான் இவ்வளவு படங்கள் செய்திருப்பாரா?
ஒரே வித்தியாசம் சொல்லவா?சக்கரைக்கட்டி படத்திற்கு இசை அமைக்க ஐந்து கோடி ருபாய் தரப்பட்டதாம்..நான் கடவுள் படத்தில் இசைஞானிக்கு கொடுக்கப்பட்ட தொகையை நான் சொல்ல விரும்பவில்லை,மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்.இசைஞானி பணத்திற்காக இசை அமைப்பதில்லை இசைக்காக இசை அமைக்கிறார்.
அவர் மேல் காழ்ப்புணர்ச்சி கொண்டோர் ஆயிரம் சொல்வார்,அதை நாமெல்லாம் கேட்போமா?
கண்டிப்பாக மாட்டோம்..
நம் ராஜாவின் குரலில் தெய்வத்தை உணரலாம்..
ஒரு ரமண மாலை,ஒரு குரு ரமண கீதம் போதும்..
இத படிங்க முதல்ல
சிம்பொனி ஜான் ஸ்காட் ராஜாவை பற்றி இப்படி விவரிக்கிறார்.
http://webhome.idirect.com/~rlevy/current_question.html


Q & A Dear John

John Scott's Column

As time permits, John Scott will answer your questions and have the answer posted here. This question comes from Anbu Ramasamy:

Mr. Scott,

I think you are one of the best composers around & my mission now is to go out and get all your CDs. Please keep composing & keep releasing your music.

The question I have is somewhat involving you and another person. I was thrilled when I heard that you were going to conduct the symphony for Mr. Ilayaraja from India when he was commissioned to write a symphony. Mr. Ilayaraja is my favorite Indian composer & I couldn't believe my ears when I came to know another one of my favorite composers (you!) was going to conduct it. There was a huge celebration for him in India with all the top personality & you honoring Mr. Ilayaraja. This was shown in the tele & I was ecstatic to see you on stage. As you were being garlanded on stage, I also happened have your CD 'John Scott's Favorites' gracing my glass cupboard with you in front. I so excitingly pointed out to my family members 'there that's him' & they really couldn't believe as well.

But till now, this symphony has not been released & there hasn't any news about it. I hope you can enlighten about its release & the work of Mr. Ilayaraja.

Anbu(Singapore)

Dear Anbu (Singapore),

Thank you for your very kind comments. I am a very lucky person because I spend my life doing what I like, which is composing music.

It was very interesting to hear that you witnessed the Ilayaraja honoring ceremony on TV. I was flown from London to Madras specially for it. It was an incredible experience and I shall never forget it. Ilayaraja and I became very close friends and I have tried to encourage him to get his symphony released. I believe he was hurt by a critics review, and this is the reason it has not been released. I had the privilege of conducting the recording sessions with the Royal Philharmonic Orchestra, in London, and we all believe it deserves to be released. The trouble is that critics are capable of destroying sensitive artists and have done it throughout the history of music. The more one knows a piece of music the more one loves it, and the stupid critics are incapable of judging anything they have never heard before. They have seldom been right. There is a wonderful book by Nicolas Slonimsky entitled LEXICON OF MUSICAL INVECTIVE. It is a history of musical criticism since Beethoven's time. It shows how the critics have crucified every great composer without exception! I will contact Illayaraja and tell him about your kind remarks and that he owes it to us all to make his symphony available.

I send you my best wishes,

John Scott

Previous Questions





Last Updated: 12/12/2006 11:08:18
© Copyright 1997-2006 Randy Levy

Labels:

Thursday, May 21, 2009

இனி கருணா என்றால் ஆள்காட்டி என்று பொருள் கொள்வீர்...



கருணா...
உனக்கு என்னவொரு அருமையான பதவி... கொடுத்திருக்கிறது... சிங்கள அரசு பிரபாகரன் இருக்கும்போதும் காட்டிக் கொடுக்க உன்னைத்தான் அழைத்தது... இறந்ததாகக் கருதப்பட்ட பின்னும் காட்டிக் கொடுக்க உன்னைத்தான் அழைக்கிறது... பிரபாகரன் இறந்து போனது உண்மையானால்... உனது தேவை சிங்கள அரசுக்கு தேவைப்படாது... அடுத்த சில நாள்களில் உனது பதவி சிங்களத்தை நேசிக்கும் ஒரு சிங்களனுக்கு கொடுக்கப்படும்... உனது உயிர் தமிழை நேசிக்கும்... தமிழனை நேசிக்கும்... பிரபாகரனை தலைவனாக எண்ணும் ஒருவரால் பறிக்கப்படும்... தமிழனாக பிறந்ததில் பெருமைப்படுகிறேன், பிரபா ஒரு தமிழன் என்பதால் அதே சமயம் வேதனைப்படுகிறேன் ஒரு சில தமிழ் அரசியல்வாதிகளும்,கருணாவும் தமிழன் என்று கூறிக்கொள்வதால். பிரபாகரன் புதைக்கபடவில்லை விதைக்கப்பட்டு இருக்கிறார். பிரபாகரன் தேர்ந்தெடுத்த வழி(வன்முறை) வேண்டுமானால் தவறாக இருக்கலாம். ஆனால் அவருடைய நோக்கம் மிக சரியானது. ஒரு கட்டத்தில் விடுதலை புலிகள் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறி இருக்க வேண்டும். பிரபாகரன் செய்த ஒரே தவறு ராஜீவின் படுகொலை. அது மட்டும் நிகழ்ந்திரா விட்டால் இந்நேரம் தமிழ் ஈழம் மலர்ந்திருக்கும் இந்திய அரசின் உதவியோடு. கருணா இலங்கை அரசால் கொல்லப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை. ராஜ பக்ஷே வின் நாட்களும் எண்ணப்படும். ஒரு கட்டுக்கொப்பான இயக்கத்தை வளர்த்ததர்க்காகவும் ஒரு தமிழனாகவும் பிரபாகரனுக்கு ஒரு ராயல் சல்யூட் பிரபாகரன் என்னும் ஒரு சகாப்தம் அழிக்கப்பட்டாலும், அவருடைய நினைவுகளும், கொள்கை உறுதிப் பிடிப்பும் அவரை வரலாற்றில் நீங்கா இடம் பிடிக்க வைத்து விட்டது. இந்த நூற்றாண்டின் இணையற்ற மாவீரன் மாவீரன் பிரபாகரனை உயிருடன் இருக்கையிலும் காட்டிக் கொடுத்து, இறந்த பிறகும் காட்டிக்கொடுத்த ''கருணா'' எட்டப்பனையும் மிஞ்சி விட்டான். கற்றுக் கொடுக்கும் இனம் தமிழ் இனம் என்பது அன்று. பணம், பதவி, புகழுக்காக காட்டிக்கொடுக்கும் இனம் தமிழ் இனம் என்பது இன்று. அதிலும் ''கருணா'' என்றால் காட்டிக்கொடுப்பவன் என்று இனி சரித்திரம் கூறும். வாரிசுகளின் வாழ்வு வளம் பெற கடமை கண்னியம் கட்டுப்பாட்டு என்னும் கொள்கையை அடகுவைத்து அள்ள அள்ள குறையாத குன்று போல் செல்வம் ஈட்டும் அரசியல்வாதிகளுக்கிடையில் வாழ்நாள் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு இறுதியில் தன் உயிர் மட்டுமன்றி மனைவி, மகன், மகள் என்று தன் குடும்பத்தையே தமிழர்கள் உரிமைக்காக அர்ப்பணித்த பிரபாகரனின் தியாகத்தை நினைத்தால் இவர் வாழ்ந்த காலத்தில் நாமும் இருந்தோம் என்கிற நினைப்பே பெருமையாக உள்ளது. இந்திய- சிங்கள அரசுகள் அவிழ்த்து விடும் பொய்களில் இதுவும் ஒன்றாகத்தான் இருக்கும். ஒரு வேளை இது உண்மையாக இருந்தாலும் இதனால் தமிழ்த் தேசிய ஞாலத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் பெருமைதான் ஓங்குமே தவிர இ-சி அரசுகள் எண்ணுவதுபோல் சிறுமை அடையமாட்டார்கள். மேலும் உலகத்தமிழர்கள் சொல்லொண்ணா வேதனையுற்றாலும் இன்னும் வேகம் கொண்டு- கருணாக்களின் துரோகங்களையும் புரிநது கொண்டு - தங்கள் தலைவர் வழியிலேயே சென்று தமிழ் ஈழத்தை வென்றெடுப்பார்கள். அதே நேரம் இது கட்டுக்கதை என்னும் பொழுது இ-சி அரசுகள் இது குறித்து வெட்கப்படப் போவதில்லை. கற்பனையாகச் சில நாள் மகிழ்ந்ததிலேயே பெருமை பட்டுக் கொள்ளும். மேதகு பிரபாகரன அவரக்ளும் அவர் குடும்பத்தினரும் பிற தளபதிகளும் படைஞர்களும் ஈழத் தமிழர்களும் நீடூழி வாழட்டும்! விரைவில் இ - சி சதிகளை வெல்லட்டும்! மலர்க தமிழ் ஈழம்

Labels:

துபாய் மெட்ரோ புகைப்படங்கள்















































































































































சமீபத்தில் முடிக்கப்பட்டு வெள்ளோட்டம் விடப்பட்டுக்கொண்டிருக்கும் துபாய் (durl)பறக்கும் ரயில் பாதை புகைப்படங்கள்.உங்களுக்காக ....


















Labels:

Tuesday, May 19, 2009

தனி ஈழம் அமைப்போம் -ஜெ

"பங்களாதேசுக்கு இந்திரா காந்தி படை அனுப்பிய தர்மத்தின் அடிப்படையில் இலங்கைக்கு நான் படை அனுப்பி ஈழம் அமைப்பேன்!": மீண்டும் வலியுறுத்துகின்றார் ஜெயலலிதா
செய்தி நன்றி:-புதினம்

[புதன்கிழமை, 29 ஏப்ரல் 2009, 06:42 பி.ப ஈழம்] [தமிழ்நாடு நிருபர்]
"இந்தியாவின் சில அரசியல்வாதிகள் இலங்கைத் தமிழர்களைப் பகடைக் காய்களாக்கி அரசியல் சூதாட்டம் நடத்துகின்றனர். ஆனால், இந்திரா காந்தி எந்த அனைத்துலக சட்டத்தை பின்பற்றி பங்களாதேசிற்கு விடுதலை வாங்கிக் கொடுத்தாரோ, அதே அனைத்துலக சட்டத்தை பின்பற்றி - அதே தர்ம நியாயங்களை பின்பற்றி - நான் சொல்வதை கேட்கும் மத்திய அரசு அமைந்தால், இலங்கைக்கு இந்தியப் படையை அனுப்பி அங்கே 'தனி ஈழம்' அமைக்க நடவடிக்கை எடுப்பேன்" என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் செல்வி ஜெ. ஜெயலலிதா மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள நாமக்கல்லில் இன்று புதன்கிழமை நடைபெற்ற கூட்டம் ஒன்றில் ஜெயலலிதா ஆற்றிய உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட, உண்ணாவிரத நாடகம் நடத்தி; தான் உண்ணாவிரதம் இருந்ததால், உடனே இலங்கை அரசு, போர் நிறுத்தம் என்று அறிவித்துவிட்டது; எனவே தனது உண்ணாவிரதத்திற்கு வெற்றி கிடைத்துவிட்டது என்று அறிவித்துவிட்டு, வந்த வேகத்தில் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டு, வீடு திரும்பிவிட்டார் கருணாநிதி.

ஆனால் உண்மையில் போர் நிறுத்தம் ஏற்பட்டதா? அப்படி அறிவிக்கவே இல்லை, என்று இலங்கை அரசு மறுப்பு வெளியிட்டுள்ளது. "போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது" என்று கருணாநிதி அறிவித்துவிட்டு, வீடு போய் சேருவதற்குள்ளாகவே, "போர் நிறுத்தம் செய்வதாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை" என்று இலங்கை அரசு திட்டவட்டமாக அறிக்கை வெளியிட்டது.

இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் இராணுவம் மேற்கொண்டிருக்கும் தாக்குதல் இடைவிடாது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இராணுவத்தின் தொடர் தாக்குதலில் எண்ணற்ற தமிழர்கள் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள் என்று அங்கிருந்து வருகின்ற செய்திகள் கூறுகின்றன.

முள்ளிவாய்க்கால் என்ற தமிழர் கிராமத்தில், நேற்று மட்டும், இலங்கை விமானப் படை 23 முறை வானத்தில் இருந்து குண்டு வீசியதாக இணையத்தள செய்திகள் தெரிவிக்கின்றன.

முள்ளிவாய்க்காலை சுற்றியுள்ள தமிழர் பகுதிகள் மீது இலங்கை இராணுவத்தின் கடற்படை, பீரங்கிகள் பொருத்தப்பட்ட படகுகளைக் கொண்டு தாக்குதல் நடத்தி இருக்கிறது.

Multi Barrel Rocket Launcher என்ற பல ரொக்கெட்டுகளை ஒரே நேரத்தில் வீசித் தாக்கும் கருவியைக் கொண்டு இராணுவத்தின் தரைப்படை, முள்ளிவாய்க்காலின் வடக்குப் பகுதியில் இருந்து தமிழர்களைத் தாக்கி இருக்கிறது.

இந்தத் தாக்குதல்கள் எல்லாம் எந்த நேரத்தில் நடைபெற்றது தெரியுமா?

தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி மெரினா கடற்கரையில் நேரடி ஒளிபரப்பு வசதியோடு உண்ணாவிரத நாடகத்தை அரங்கேற்றி முடித்த அந்த நேரத்தில்.

கருணாநிதி காலை உணவை முடித்துவிட்டு, மதிய உணவை உட்கொள்வதற்கு முன்பாக, இடைப்பட்ட மூன்று மணி நேரம், உண்ணாவிரதம் இருந்ததற்காக, கருணாநிதியின் தொண்டர்கள், ஊர் முழுவதும் பேருந்துகளை அடித்து, நொறுக்கி, கடைகளை சூறையாடி, பொதுமக்களை அச்சுறுத்தி, அராஜக ஆட்டம் போட்ட அந்த நேரத்தில் தான், இலங்கையில் தமிழர்கள் இத்தகைய கொடூரத் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

பகடைக் காய்கள்


என்றைக்கு ஓயும் எங்கள் தமிழர் துயரம் என்று நாம் நினைக்காத நாளில்லை. வேண்டாத தெய்வமில்லை. இத்தகைய துயரமான சூழ்நிலையில், இந்தியாவில் இருக்கக்கூடிய அரசியல்வாதிகள் சிலர், தேர்தல் தோல்வி உறுதி என்று ஆகிவிட்ட நிலையில், இலங்கைத் தமிழர்களை பகடைக் காய்களாகப் பயன்படுத்தி, அரசியல் சூதாட்டத்தில் காய்கள் நகர்த்துகின்றனர்.

இந்தக் கயமையை நாம் அனைவரும் ஒட்டுமொத்தமாகக் கண்டிக்க வேண்டும்.

மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதி, நாடாளுமன்றத் தேர்தலில் தனது கூட்டணி பெறப் போகின்ற அவமானகரமான தோல்வியை எண்ணி அஞ்சுகிறார். அதன் எதிரொலி தான் அண்ணா சமாதியில் உண்ணாவிரத நாடகம்.

தனது நாடகம் வெற்றி பெற்றுவிட்டதாக உலகுக்கு அறிவிக்க முயற்சித்து அதில் மீண்டும் தோல்வியுற்றிருக்கிறார் கருணாநிதி. உண்மை தோற்றதில்லை; பொய் ஒருபோதும் வென்றதில்லை என்பதற்கு இந்த ஒரு எடுத்துக்காட்டு போதும்.

"கெட்டிக்காரனின் பொய்யும், புரட்டும் எட்டு நாளில் தெரிந்துவிடும்" என்பது தமிழ்நாடே அறிந்த பழமொழி.

தன்னை கெட்டிக்காரன் என்று நினைத்துக் கொண்டிருக்கும் கருணாநிதி, அரங்கேற்றிய பொய் நாடகம், புரட்டு வசனம் எட்டு மணி நேரம் கூட தாங்கவில்லை. வேடம் கலைந்தது. தமிழர்களின் வேதனை தொடர்கிறது.

தமிழர் போராட்டங்கள்

இலங்கைத் தமிழர்களின் துயரத்தைப் போக்க, சென்னையில் 13 நாட்களாக உண்ணாவிரதம் இருந்தார்கள் பெண்கள்.

தென் ஆப்பிரிக்காவில், மருத்துவமனையில் சேர்க்கப்படும் நிலை வரும் வரை உண்ணாவிரதம் இருக்கிறார் ஒரு தமிழர்.

பிரிட்டனில் உண்ணாவிரதம் இருந்தவரின் உயிர் ஊசலாடுகிறது. உலகெங்கும் தமிழர்கள் அறிவிக்கப்படாத உண்ணாவிரதங்களை தங்கள் வீடுகளில் மேற்கொண்டுள்ளனர்.

ஆனால், உலகத்திலேயே மிகக்குறுகிய நேரம், அதாவது 3 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்த ஒரே நபர் இந்தக் கருணாநிதி தான்.

தேவையான ஊட்டச் சத்துக்களைப் பெற்றுக்கொண்டு, ஊரை ஏமாற்ற உண்ணாவிரதம் உட்கார்ந்தார் கருணாநிதி.

தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு ஆரம்பித்ததும் படுத்துக்கொண்டார். அவரது குடும்ப உறுப்பினர்கள் எல்லாம், தங்கள் தொழில்களை ஒத்திவைத்தனர்.

முகத்தில் சோகம் வழிய வழிய கருணாநிதியை சுற்றி சுற்றி வந்து நாடகத்தை சுவாரஸ்யமாக்க முயற்சித்தனர்.

ஊட்டச்சத்துக்கான அடுத்தவேளை வந்தவுடன், உள்துறை அமைச்சர் சிதம்பரத்தின் அலுவலகத்தில் இருந்து ஒரு தகவல் வந்ததாக நாடகத்தை அடுத்த காட்சிக்கு நகர்த்தினார்கள்.

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது என்று கருணாநிதி அறிவித்தார். மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நாடகத்தில் தனது கதா பாத்திரத்திற்கு ஒதுக்கப்பட்ட வசனங்களை ஒப்பித்தார்.

நேரடி ஒளிபரப்பு முடிவடைந்தது. அடுத்த வேளை உணவுக்கு எல்லோரும் புறப்பட்டுச் சென்றார்கள். இலங்கைத் தமிழர்களின் துயரம் தீர்ந்தது.

இனிமேல் இலங்கை ராணுவம் தமிழர்களை வாழ வைக்கும் பணிகளில் ஈடுபடும் என்று இலங்கை இராணுவத்தின் அறிவிக்கப்படாத செய்தியாளராக மாறினார் கருணாநிதி.

வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகைகள், Internet, SMS - இவையெல்லாம் நொடிக்கு நொடி உலகெங்கும் இருந்து செய்திகளை பரப்புகின்ற இந்த 21ஆம் நூற்றாண்டில், ஓடாத ரயில் முன் தலை வைத்துப் படுத்தவரின் அந்தக் கால நாடகம் எடுபடவில்லை.

போர் நிறுத்தம்

போர் நிறுத்தம் இல்லை என்று இலங்கை அரசு திட்டவட்டமாகக் கூறுகிறது. இலங்கை அதிபர் செயலகத்தில் இருந்து போர் நிறுத்தம் என்ற ஒரு அறிவிப்பு வந்ததாக பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் கூறப்படுவது தவறான செய்தி என்று இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் கூறி இருக்கிறது.

இலங்கையில் தமிழர் பகுதிகளில் தாக்குதல் தொடர்கிறது. ப.சிதம்பரம் இயக்கத்தில் கருணாநிதி நடிப்பில் அரங்கேற்றப்பட்ட உண்ணாவிரத நாடகம் நடைபெற்ற சில மணி நேரத்திலேயே, இலங்கை இராணுவத்தின் முப்படைகளும் தமிழர்கள் மீது தாக்குதலைத் தொடர்ந்தன.

இரட்டைவாய்க்கால், வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால் போன்ற இடங்களில், 272 தமிழ் உயிர்கள் பலியாயின. நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயமுற்றனர்.

இது எல்லா பத்திரிகைகளிலும் ஏப்ரல் 28 ஆம் நாள் காலையில், முதல் பக்க செய்தியாக வெளிவந்துள்ளது.

உண்மை இப்படி இருக்க, கருணாநிதி, சிதம்பரம் போன்றவர்கள் தங்கள் முயற்சியால் போர் நிறுத்தமே ஏற்பட்டுவிட்டதாக நாடகம் ஆடுகிறார்களே! அதை நாம் நம்ப வேண்டும் என்றும் சொல்லுகிறார்களே! அதற்கு பொய் சாட்சி கூற தில்லியில் இருந்து தொலைபேசியில் செய்தி வந்தது என்று சொல்லுகிறார்களே!

இவர்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா? தமிழ்நாடு என்றால் அவ்வளவு இளக்காரமாக நினைத்துவிட்டார்களா?
தமிழக மக்கள் இவர்களுக்கு, அவ்வளவு கேவலமாகப் போய்விட்டார்களா?

நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக, பொய்யிலும், புரட்டிலும் ஈடுபட்டிருக்கும், தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியினரின் இத்தகைய மோசடி நடவடிக்கைகள், தேர்தல் களத்தில் அவர்களுக்கு எந்தப் பயனையும் தராது.

ஆனால், இவர்களது இத்தகைய மனிதாபிமானமற்ற, நகைப்புக்குரிய ஏமாற்று வேலைகளால், அண்டை நாடு என்ற பொறுப்பிலும், சொந்த சகோதரர்கள் என்ற கடமையிலும், இலங்கைத் தமிழர்களுக்கு செய்திருக்க வேண்டிய அடிப்படை உதவிகளை இந்தியா செய்யவில்லை.

அதற்குக் காரணம், நாடகம் ஆடுவதிலும், அரசியல் ஆதாயம் தேடுவதிலும் காட்டுகின்ற அக்கறையை, தமிழர்களின் துயரத்தைப் போக்குவதில் காட்டவில்லை என்பது தான்.

திமுக-காங்கிரசின் கவனம் எல்லாம், தங்கள் சுய லாபத்திற்காக, இலங்கைத் தமிழர் பிரச்சினையை பயன்படுத்துவதில் தான் இருக்கிறது.

ஆட்சியில், அதிகாரத்தில், செயல்பட வேண்டிய இடத்தில் இருக்கின்றவர்கள் செய்யக்கூடிய பணிகளை நிறைவேற்றுவதில், அவர்களுக்கு சிறிதளவும் அக்கறை இல்லை.

திமுக-விற்கும், காங்கிரசுக்கும், எல்லாமே அரசியல் தான்.

பதவி, பணம், அந்தஸ்து என்பதை நோக்கித் தான், அவர்களுடைய நாடகங்கள் எல்லாம் என்று, தமிழக மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

இந்தக் குற்றச்சாட்டின் விளைவாக வரப் போவது தான், அவர்களுடைய தேர்தல் தோல்வி; மக்களின் தேர்தல் வெற்றி.

இலங்கைத் தமிழர் மீது உண்மையான அக்கறை கொண்ட புதிய ஆட்சி அடுத்து மலரப் போகிறது. அதற்கான முன் அறிவிப்பு தான் இங்கே அலைகடலெனக் கூடியிருக்கும் மக்கள் கூட்டம்.

ஈழத் தமிழர் நலன் காக்க, மோசடி அரசியல்வாதிகளின் முகத்திரைகளைக் கிழிக்க, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணிக்கே வாக்களியுங்கள். எனது கரத்தை வலுப்படுத்துங்கள்.

நாம் அமைக்கப் போகும் புதிய மத்திய அரசு, தமிழர் உரிமைகளை காப்பாற்றும் அரசாக அமைவது உறுதி, உறுதி, உறுதி.

சர்வதேச சட்டம்

காங்கிரஸ் தேய்ந்து கொண்டே வருகிறது என்பதற்கு அடையாளமாகத் தான் அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள் பேசுகின்ற பேச்சுக்கள் எல்லாம் அமைந்து இருக்கின்றன.

அந்த அளவிற்கு வரலாறு தெரியாதவர்களும், விவரம் புரியாதவர்களும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்களாக இருக்கின்றார்கள்.

எங்களுடைய சொல்லைக் கேட்கும் புதிய மத்திய அரசு அமைந்தால், தனி ஈழம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று அண்மையில் சொல்லி இருந்தேன்.

இதற்கு ஒரு காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர், "இந்த அம்மாவுக்கு சர்வதேச சட்டம் (International Law) தெரியவில்லை. எப்படி இலங்கையில் தனி ஈழம் அமைக்க முடியும்? இலங்கை என்ன இந்தியாவின் மாவட்டமா? காலனியா?" என்று வினவியிருக்கிறார். இதிலிருந்து இவர் தான், விவரம் புரியாத ஒரு மனிதர் என்பது தெரிகிறது.

இந்திரா காந்தி அவர்கள் பிரதமராக இருந்த போது, கிழக்கு பாகிஸ்தான் மீது படையெடுத்து பங்களாதேசுக்கு விடுதலை வாங்கித் தரவில்லையா! இந்திரா காந்திக்கு சர்வதேச சட்டம் புரியவில்லை என்று சொல்கிறாரா காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்? 1971 ஆம் ஆண்டு இந்திய - பாகிஸ்தான் போரை காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மறந்துவிட்டார் போலும்! இனவெறியை தடுப்பதற்காகத் தான் இந்தப் போரை இந்திரா காந்தி நடத்தினார் என்பதை இந்தத் தருணத்தில் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

பிறகு, இந்திரா காந்தியின் மகன் ராஜிவ் காந்தி இந்திய நாட்டின் பிரதமாக இருந்த போது, இலங்கைக்கு இந்திய இராணுவத்தை அனுப்பவில்லையா? அவருக்கும் சர்வதேச சட்டம் புரியவில்லை என்று சொல்கிறாரா காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்?

இந்திரா காந்தி எந்த சர்வதேச சட்டத்தை பின்பற்றி, பங்களாதேசிற்கு விடுதலை வாங்கிக் கொடுத்தாரோ, ராஜீவ் காந்தி எந்த சர்வதேச சட்டத்தை பின்பற்றி இலங்கைக்கு இந்திய இராணுவத்தை அனுப்பினாரோ; அதே சர்வதேச சட்டத்தை பின்பற்றித் தான், அதே தர்ம நியாயங்களை பின்பற்றித் தான், நான் சொல்வதை கேட்கும் மத்திய அரசு அமைந்தால், இலங்கைக்கு இந்திய இராணுவத்தை அனுப்பி அங்கே தனி ஈழம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று நான் சொல்கிறேன்.

தேசத் துரோகம்

இலங்கையில் தனி ஈழம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று நான் சொன்னது தேசத் துரோகச் செயல் என்று மற்றொரு காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அண்மையில் கருத்து தெரிவித்து இருந்தார்.

இந்தியாவை துண்டாட நினைப்பது தான் தேசத் துரோகச் செயலே தவிர, இலங்கையில் தனி ஈழம் அமைப்பேன் என்று சொல்வது தேசத் துரோகச் செயல் அல்ல என்று நான் தெளிவுபடுத்தினேன்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பை முற்றிலுமாக புறக்கணித்து, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும் மதிக்காமல், இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த கச்சத்தீவை தாரை வார்த்தது தான் தேசத் துரோகச் செயல்! இதைச் செய்தது காங்கிரஸ் கட்சியும், தி.மு.க.வும் தான். இதிலிருந்து யார் தேசத் துரோகி என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

கபடச் சதி

இப்போது ஒரு முக்கியமான விடயத்தை சொல்லப் போகிறேன். கவனமாக கேளுங்கள். கருணாநிதி - ராஜபக்சவின் சதித் திட்டத்தைப் பற்றி கிடைத்த தகவலை, நான் உங்களுக்கு தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.

தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கருணாநிதி ராஜபக்சவுடன் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து எனக்கு தகவல்கள் வந்துள்ளன.

அதாவது கருணாநிதி ராஜபக்சவுடன் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். "இந்தத் தேர்தலில் ஜெயலலிதாவுக்கு மிகவும் சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. தனி ஈழம் அமைப்பேன் என்று அவர் தெரிவித்து விட்டதால், ஜெயலலிதாவுக்கு வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக இருக்கிறது. நாளைக்கு அவர் சொல்கிறபடி கேட்கும் மத்திய அரசு அமைந்து விட்டால், இலங்கைக்கு இராணுவத்தை அனுப்புவார் ஜெயலலிதா.

ஜெயலலிதா சொன்னால் செய்து விடுவார். அவர் உறுதியான முடிவை எடுக்கக் கூடியவர். பிறகு உங்களுக்குத் தான் பிரச்சினை. எனவே அப்படி நடக்காமல் இருக்க நான் சொல்வதை கேளுங்கள். தேர்தல் நடக்கும் நாளான மே மாதம் 13 ஆம் நாள் வரை உண்மையாகவே போர் நிறுத்தம் செய்யுங்கள். அப்பொழுது தான் நான் வெற்றி பெற முடியும். நான் வெற்றி பெற்று என்னுடைய தயவில் மீண்டும் மத்திய அரசு அமைந்தால், நீங்கள் இலங்கைத் தமிழர்களை உங்கள் விருப்பம் போல் எளிதாக ஒழித்துக் கட்டிவிடலாம். நீங்கள் எனக்கு உதவினால், நான் உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன்.

"எனவே, உங்களுக்குப் பிரச்சினை வராமல் தடுக்க, மே மாதம் 13 ஆம் நாள் வரை, போர் நடத்தாமல் பொறுத்து இருங்கள். இங்கே தேர்தல் முடிந்த உடன், உங்கள் விருப்பப்படி செய்யுங்கள்" என்று கருணாநிதி ராஜபக்சவிடம் பேசி இருப்பதாக நம்பகமான தகவல்கள் வந்துள்ளன.

தன் பதவி பறிபோகிறது என்றால் எதையும் துணிவுடன் செய்வார் கருணாநிதி. கருணாநிதியின் தன்னலம் குறித்து நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

எனவே, வருகின்ற தேர்தலில் தமிழினத் துரோகி கருணாநிதிக்கு மீண்டும் எழுந்திருக்க முடியாதபடி மறுபடியும் தலைதூக்க முடியாதபடி நீங்கள் சம்மட்டி அடி கொடுக்க வேண்டும் என்று உங்களை எல்லாம் இரு கரம் கூப்பி, வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.

செய்வீர்களா?... நீங்கள் செய்வீர்களா?... என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Labels:

Sunday, May 17, 2009

நண்பரிடமிருந்து வந்த ஈ மெயிலில் இருந்து

What I need...

What i asked my Consultant for...

What my HR Promised...

What i felt it as .....

What i have got...(Before Tax)

What i have got...(After Tax)


நண்பரே ...

எல்லாம் சரிதான்...

உங்கள் கம்பெனி முகவரியோடு உங்கள் பெயர்,டிபார்ட்மென்ட் ,மொபைல் போன் எண்ணுடன் , இது போன்ற ஈ மெய்ல்களை அனுப்புவது மிகவும் ஆபத்து,கடைசியில் உங்கள் கம்பெனி ஹெச் . ஆர் ஐடிக்கே போக வாய்ப்பு உள்ளது,ஆகவே உஷார்.

Labels:

Dialysis appeal













































Dialysis appeal

In India, every year, an estimated 100,000 patients develop kidney failure.. The only treatment is replacement of kidney function by dialysis or kidney transplantation. Less than one in every ten is able to undergo this treatment successfully, because of the cost. The patient entering dialysis treatment is faced with a lifelong struggle with an incurable disease that slowly eats away at his family’s economic resources and future. The recurring costs of dialysis treatment, is anywhere between Rs 9000.00 and Rs. 25,000.00 a month and is interminable and often reduces a family to abject poverty.. Many patients are at risk of under dialysis as they are desperately trying to downscale the financial burden – poorly done dialysis slowly and inexorably eats away at a persons physical and mental health, making him vulnerable to many life th reatening complications, not to speak of the emotional and psychological consequences. The lifespan of a poorly dialyzed patient is a few months to years, starkly shorter than many aggressive cancers nowadays.
Financial help is often the only barrier that stands between a dialysis patient and his wellbeing. Every small contribution can build the pool of money needed to assuage the suffering of these unfortunate individuals.

Murugan an auto driver and father of 2 young children came to know that one of his kidneys was not developed due to congenital abnormality. He was married at the age of 22 & when at the age of 24 he was waiting at the hospital lounge for his first child’s arrival into this world, his world collapsed! Sitting there at the hospital he felt giddy & sick & he was pushed in to the doctors room who pronounced that he had only one kidney functioning & he should start taking his BP tablets. As his BP was high, in a couple of years his good kidney also stopped functioning. Thus his ordeal of regular dialysis started. He needed to have dialysis thrice a week!! Each dialysis costs him Rs 600! Every 4th one will cost Rs1250 and this is the situation in a charitable hospital !

So on the average he has to organise approx Rs 9 to 10 thousand a month to get his blood stream purified!!
He says he gets his dialysis done only when he starts feeling breathless and this discomfort happens once a week.
Where can he go for that kind of money?

Selvam 20, is another victim of similar fate and the list is endless & growing. You may think they could go for a transplant but that option is like jumping from the frying pan to fire!
The minimum cost of surgery is Rs 2 lacs & getting a matching kidney is another ordeal after one crosses all these hurdles & goes through the surgery one will have to be on drugs for life costing 6 to 10 thousands a month ! These are the stark realities of a transplant.

The story of 14 year old Kala is even more pathetic. At an age when she should be going to school & running around & playing with her friends she was lying down in the hospital bed for hours together & getting her dialysis. Her mother died when she was just 22days old. Her father, a drunkard disowned her and disappeared. Her aunt & uncle who already had 3 children took the responsibility of bringing her up. Luckily for her, her adopted parents sent her to school. Kala was studying in the 10th standard when bad luck struck on Pongal Day this year. As she was preparing to celebrate, she was rushed to the hospital where she joined the dialysis patients….
Here I am forced to share the sad news of her demise as I am preparing this appeal.

Do any of us pause a while to know what these people & their families go through just to keep the hearts of their kin beating? Aren’t we lucky that we are sailing in a different boat?

Don’t you think we can do something especially when we can. We can definitely do something to keep their boat afloat? We could make a contribution in whatever way we chose. We could pay for one patient’s dialysis for a week or one month. They could share our special days like birthdays and wedding anniversaries and have their dialysis sponsored by us. We could even pay homage to our dear departed kin by contributing on their death anniversary for one patient, for couple of months and lastly you could coax your colleagues to contribute a day's salary towards a dialysis.
The possibilities are many if only you have the will.
Though these are but a drop in the ocean, this drop will be like ‘the straw that will be clutched by a drowning man’.
Please come forward to help, extend a helping hand to them. Any amount that you can spare is welcome to them.

Please send your contributions to DR V N K MEMORIAL TRUST

Contact Details

Dr V N K Rao Memorial Trust
C/o mrs indumathi rao
Cottage no 8
VHS Hospital Campus
Tharamani raoad
Chennai 600 113

PH NOS
Land line: (044) 2254 2264
Mobile: 94448 56648

Thank you

Labels:

பெங்களுரு இஸ்கான் ஸ்ரீனிவாச கோவிந்தாவின் அரிய தரிசனம்

Not everyone is blessed with this gift and if you do, pls share it with your liked ones.

DSC06009.jpg
DSC06016.jpg
DSC06019.jpg
DSC06042.jpg
DSC06068.jpg
DSC06073.jpg



DSC06077.jpg



DSC06082.jpg



DSC06097.jpg



DSC06101.jpg



DSC06111.jpg



DSC06152.jpg



A1.jpg



2009_2VE_SG copy.jpg

Labels: