மண்ணில் புதையும் விழிகளை பிறர் கண்ணில் புதைப்போம்
கண் தானம் செய்வோம்,பிறரையும் செய்ய வைப்போம்
Saturday, March 28, 2009
ராமநவமி சொல்லுங்கள் ராம ராம
ஏப்., 3 ராமநவமி
நவமி திதியில் அவதரித்தவர் ஸ்ரீராமபிரான். அவரது வாழ்க்கை வரலாற்றை விளக்கும் நூல் ராமாயணம். ராமன் + அயணம் என்று இதைப் பிரிப்பர். இதற்கு, ராமனின் வழி என்பது பொருள். ராமனின் வழியில் நடப்பவர்கள் நற்கதி அடைவர்.மனிதன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என் பதற்கு உதாரணமாக நடந்து கொண்டவர் அவர். பட்டாபிஷேகத்துக்கு தயாராகிக் கொண்டிருந்த அவரை வரவழைத்த தந்தை, "நீ பதினான்கு வருஷம் காட்டுக்குப் போ...' என்று சொன்னவுடன், காரணம் கேட்காமல், கிளம்பியவர்.ராமாயணம் தெய்வ காவியமாகவும், ஸ்ரீராமன் நம் உள்ளம் கவர்ந்தவராகவும் இருக்கிறார். எனவே தான், "ஸ்ரீராம ஜெயம்' என்று நம்பிக்கையுடன் சொன்னால் போதும், நம்மிடம் உள்ள பயம் நீங்கி, எதையும் சாதிக்கும் ஆற்றல் பிறக்கும். ராமனின் கதை வால்மீகியால் சம்ஸ்கிருதத்திலும், கம்பரால் தமிழிலும் எழுதப்பட்டுள்ளது. இதுதவிர, பல்வேறு மொழிகளிலும் ராமாயணம் எழுதப்பட்டிருக்கிறது.துளசிதாசர் இந்தியில் எழுதிய ராமாயணம், "துளசி ராமாயணம்' எனப்படுகிறது. துளசி ராமாயணத்தை ஆங்கிலத்தில் அட்கின்ஸ் என்ற பாதிரியார் எழுதியுள்ளார். ரஷ்ய மொழியிலும் ராமாயணம் எழுதப்பட்டிருக்கிறது.ராமாயணம் கர்ப்பிணிப் பெண்களுக்கு கைகண்ட மருந்து. கர்ப்ப காலத்தில் ராமாயணம் படித்தால், பிறக்கும் குழந்தைகள் பக்தி, தைரியத்துடன் விளங்குவர்; நன்றாகப் படிக்கவும் செய்வர் என்பது நம்பிக்கை.
"ராம' என்ற மந்திரம், "ஓம் நமோ நாராயணாய' என்ற எட்டெழுத்து மந்திரத்திலுள்ள (ஓம் என்பது ஒரே எழுத்து) "ரா' மற்றும் "நமசிவாய' என்ற ஐந்தெழுத்து மந்திரத்திலுள்ள, "ம' என்ற பீஜாக்ஷரங்களை இணைத்து உருவாக்கப்பட்டது. பீஜாக்ஷரம் என்றால், உயிர்ப்புள்ள எழுத்து என்று பொருள்."ராம' மந்திரம் சொன்னால், பட்டமரமும் தளிர்க்கும் என்பதால் அதை, "உயிர்ப்பு மந்திரம்' என்பர். இந்த மந்திரத்தைச் சொல்லத் தெரியாமல், "மரா' என மாற்றி உச்சரித்த வால்மீகி தான், ராமாயணத்தின் ஆசிரியரானார் என்பது குறிப்பிடத்தக்கது. காசியில் இறப்பவர்களின் காதில் சிவபெருமான், "ராம' மந்திரத்தைச் சொல்லி, அவர்களுக்கு பிறப்பற்ற நிலையை அருளுவதாக ஐதீகம்.
ராமநவமி நன்னாளில் இருந்து தினமும், "ராம ராம' என்ற தாரக மந்திரத்தைச் சொல்லப்பழகுங்கள். "தாரகம்' என்றால் கண்மணி. இம்மந்திரத்தைச் சொல்வோரை கண்மணி போல் பாதுகாப்பான் ஸ்ரீராமன்.
4.என்னை கவர்ந்திழுத்த ரமணன் குரு ரமண கீதம் தொகுப்பிலிருந்து
மனிதன் தானே எல்லாவற்றையும் செய்வதாகஎண்ணிக் கொள்கிறான். பிரச்னையே இங்குதான் தொடங்குகிறது. நம்மையும் மீறிய ஒரு சக்தியால் நாம் இயக்கப்படுகிறோம் . நாம் அச்சக்தியின் ஒரு கருவியே என்பதை மனிதன் புரிந்து கொள்ள வேண்டும். அதைப் புரிந்து கொண்ட பின் பல துன்பங்களிலிருந்து மனம் விடுபட்டு விடும். அந்த எண்ணம் தோன்றாதவரைக்கும் நமக்கு நாமே துன்பங்களை வரவழைத்துக் கொள்கிறோம் என்பதே உண்மை. மரணத்திற்குப் பிறகு என்ன என்பதைப் பற்றி எண்ணி இப்போதே விடை தேட வேண்டாம். எதிர்காலத்தைப் பற்றி எதிர்காலமே கவனித்துக் கொள்ளும். எனவே, அந்தக் கவலையை விடுத்து நிகழ்காலத்தில் நிறைவாக வாழ முற்படுங்கள். ஒருவன் தன்னைப் பற்றி முதலில் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும். தன்னைப் பற்றியே சரியாகவும், முறையாகவும் அறிந்து கொள்ள முடியாத ஒருவனால் உலகத்தைப் பற்றி அறிந்து கொள்வது முடியாத செயல். அப்படி அறிந்து கொண்டதாக ஒருவன் எண்ணினால், அது அஸ்திவாரம் இல்லாமலேயே சுவர் எழுப்பியது போன்றதாகும். உடுத்தும் உடையை மாற்றிக் கொள்வதும், வீட்டைத் துறப்பதும் மட்டும் சந்நியாசமன்று. மனதில் உள்ள ஆசாபாசங்களையும், பந்தங்களையும் துறப்பதே உண்மையான சந்நியாசம்.
பகவான் ரமணர்
குரு ரமண கீதம் தொகுப்பிலிருந்து இசைஞானியின் எழுத்தில்,இசையில்,உருக்கும் குரலில் இப்பாடல்.. இதில் நமக்கு அவர் ரமணர் பால் ஈர்க்கப்பட்டதையும்,அவரின் தேஜஸை,கருணை விழிகளை,அவர் அமர்ந்த இடத்தை,மிதித்த மண்ணை,அவரின் கருணை உள்ளத்தை போற்றி இசைஞானி மனமுருக பாடுகையில் நமக்கு மெய்சிலிர்த்து,கண்ணீர் பொங்குகின்றது...
4.என்னை கவர்ந்திழுத்த ரமணன் என்னை கவர்ந்திழுத்த ரமணன் இங்கே தான் இருந்தான்.. என்னை கவர்ந்திழுத்த ரமணன் இங்கே தான் இருந்தான்.. பொன்னை பழிக்கும் மேனியடி...ஈ ஈ பொன்னை பழிக்கும் மேனியடி மிண்ணை ஒளிர்க்கும் விழிகளடி. மகேசன் அவனே மனித உடல் தாங்கி மண்ணில் வந்து. கண்கள் கொண்டு... என்னை...ய்ய்...என்னை...ய்ய் என்னை கவர்ந்திழுத்த ரமணன் இங்கே தான் இருந்தான்.. அமர்ந்த இடத்தைப் பார்க்கையிலே.. அமைதி அலை வந்து பாய்கிறதே அவன் அமர்ந்த இடத்தைப் பார்க்கையிலே.. அமைதி அலை வந்து பாய்கிறதே நடந்த நிலத்தில் நடக்கையிலே.. நகராது மன அலை ஓய்கிறதே .. மொழிந்த நல்வாசகம் படிக்கையிலே.. மோனம் இதுவென்று விளங்கிடுதே.. அழியினும் ஒழியாப் பிறப்பினுக்கே அழியா நிலையளித்த அருள் தந்து ஆட்கொண்டு.. என்னை...ய்ய்....என்னை...ய்ய் என்னை கவர்ந்திழுத்த ரமணன் இங்கே தான் இருந்தான்.. விருப்பு வெறுப்பற்று வீற்றிருந்த நல் விருபாட்ச குகை கண்டாயோ? விருப்பு வெறுப்பற்று வீற்றிருந்த நல் விருபாட்ச குகை கண்டாயோ? விரும்பி நெருங்கிவிடில் வேதம் விளங்குகின்ற பெரிதிருந்த நிலை அறிந்தாயோ? கையில் ஏதுமற்ற கந்தன் தந்த காணிக்கை ஸ்கந்தாஸ்ரமம் கண்டாயோ? மெய்பரம் பொருள் மலையோடிணைந்தது பொய்யறுத்து போக்கறுத்து வேறெங்கும் போகவிடாதென்னை... என்னை...ய்ய் என்னை கவர்ந்திழுத்த ரமணன் இங்கே தான் இருந்தான்..
சிறு பருவத்தில் தவமுனியான ஒருவரையும் நான் கண்டதில்லை... அருந்தவ வாழ்வில் அருட்சோதியாகி அருணை கலந்ததையும் கேட்டதில்லை. காக்கைக்கும் மயிலுக்கும் மோட்சம் அளித்த கருணைக் கரங்களே எங்கும் இல்லை.. இந்த யாக்கைக்குள் நுழைந்ததன் போக்கினை மாற்றிவைத்து காத்து நிற்க்கும் தாள் தந்து என்னை...ய்ய்...என்னை...ய்ய் என்னை கவர்ந்திழுத்த ரமணன் இங்கே தான் இருந்தான்.. பொன்னை பழிக்கும் மேனியடி...ஈ ஈ பொன்னை பழிக்கும் மேனியடி மிண்ணை ஒளிர்க்கும் விழிகளடி. மகேசன் அவனே மனித உடல் தாங்கி மண்ணில் வந்து. கண்கள் கொண்டு என்னை கவர்ந்திழுத்த ரமணன் எங்கும் உறைகின்றான்.
குரு ரமண கீதம் இசைஞானி இளையராஜாவின் ஆத்மார்த்தமான ஈடுபாட்டுடன் வெளிவந்த அற்புதமான தெய்வீக இசை கதம்பம்.
இதற்கு இசைஞானி அவர்கள் விளம்பரமே செய்யவில்லை, எவரெவருக்கு கேட்க கொடுத்து வைத்திருக்கிறதோ அவர்கள் தேடி அலைந்து தெரிந்து கொள்ளட்டும் என்னும் சித்தாந்தத்தின் படியே இதை மார்கெட்டிங் செய்ய வில்லை,இதன் சிடி ரிகார்டிங்கை ஏ.ஆர்.ரஹ்மானின் பஞ்சதன் ரெகார்டிங் தியேட்டரிலேயே செய்து அவருக்கும் இறைபணி செய்த பாக்கியத்தை வழங்கி இருக்கிறார்.அவர்கள் இருவரின் பெயரால் சண்டை இட்டுக் கொண்டிருக்கும் அன்பர்கள் இதை முதலில் உணர வேண்டும்.
இதில் சின்ன பையன் ஒருவன் பாடல் ,நம்மை ரமணர் தான் யார் என்று அறிய முற்பட்டு திருவண்ணாமலை வந்து சேர்ந்ததையும் ,அங்கு விருபாட்ச குகையில் , பல மாதக் கணக்கில் ஆழ் நிலை தியானம் இருந்து அவர் உடலில் புற்று கரையான் கட்டியதை,சேஷாத்ரி ஸ்வாமிகள் அவரை கண்டு பிடித்து வாழை இலையில் வைத்து மருத்துவம் செய்து காத்ததையும் ,அவர் பின்னாளில் முற்றும் துறந்து முனிவனாய் ஆனதையும் ,மனம் இழந்தவர்களுக்கு அருள் பாலித்ததையும் மிக அழகாகச் சொல்லியிருக்கிறார்
நல்ல இசையும் ,அருமையான ராக ஆலாபனையும்,என ,இளையராஜாவின் இசையில் ,எழுத்தில்,காந்த சாந்த குரலில், இப்பாடலை கேட்கையில் மனதில் உயர்ந்த ஞான பரவசத்தை நமக்கு அளிக்கிறார்,நீங்களும் ஆத்மார்த்தமாக அதை உணர்ந்து தான் பாருங்களேன்?
இதை நான் எங்கு தேடியும் டவுன்லோடு செய்ய முடியாமல் போய் ஊருக்கு போன நண்பரிடம் சொல்லி சிடி வங்கி வர சொல்லி கேட்டு ரசித்த அற்புத அனுபவம் வேறு இணைந்து கொண்டது,காத்திருத்தலுக்கு பின் கிடைத்த பொக்கிஷம்.குரு ரமணா எங்கள் ராகதேவன் இளைய ராஜாவுக்கு நீண்ட ஆயுளை,குரலை,ஞானத்தை மேலும் வாரிக் கொடு ..
அவரின் இசைப்பணி மென்மேலும் சிறக்கட்டும்,பல நாத்திக அன்பர்கள் ஆத்திகராகட்டும்,
இவ்வுலகில் நம்மை படைத்த இறையை உணரச் செய்யும் இசை என்றால் நம் இசை ஞானியின் இசையே.
சின்ன பையன் ஒருவன்,செய்த செயல் என்னைக் கலக்கிடுதே...
சின்ன பையன் ஒருவன்,செய்த செயல் என்னைக் கலக்கிடுதே...
அதை எண்ணத் தொடங்கி விட்டால்,என் பிறப்பு,ஏன் என்று தோன்றிடுதே...
சின்ன பையன் ஒருவன்,செய்த செயல் என்னைக் கலக்கிடுதே...
அதை எண்ணத் தொடங்கி விட்டால்,என் பிறப்பு,ஏன் என்று தோன்றிடுதே...
முன்னம் நிகழ்ந்ததெல்லாம் மனக்கண் முன்னாலே தோன்றிடுதே.. இன்னம் நினைந்திருந்து நெஞ்சம் அலை பாய்ந்து தவிக்கிறதே...ஏ
சின்ன பையன் ஒருவன்,செய்த செயல் என்னைக் கலக்கிடுதே...
அதை எண்ணத் தொடங்கி விட்டால்,என் பிறப்பு,ஏன் என்று தோன்றிடுதே...
(பால ரமணர் குரல்)
அருணாச்சலா...
அருணாச்சலா...
அருணாச்சலா...
அன்றொரு நாள் மரண பய சோதனையில்,
கொன்று விட்டான் ,தான் என்னும் தன்னை விசாரனையில்...
கட்டிய ஆடைகள்,சாதி குலத்தையும் தொட்டவிழ்த்தான்,
ஒட்டி வளர்ந்த தலை முடி தன்னை மொட்டையிட்டான்..
அண்ணாமலையாரை ஒட்டிக்கொண்டான்..........
அண்ணாமலையாரை ஒட்டிக்கொண்டான்.,
கண்ணீர் கயிற்றால் கட்டிக்கொண்டான்...
சின்ன பையன் ஒருவன்,செய்த செயல் என்னைக் கலக்கிடுதே...
அதை எண்ணத் தொடங்கி விட்டால்,என் பிறப்பு,ஏன் என்று தோன்றிடுதே... திண்ணை தெருக்களிலே தங்கி கொண்டான்,கைகளைப் போர்த்திக்கொண்டான்... உண்ணக்கிடைக்கைலே,உண்டு விட்டு உடம்பில் துடைத்துக் கொண்டான். பூதமும் போகாத பாதாள லிங்கத்துள் போயமர்ந்தான்...
ஒரு மாதம்,வருடமற்று,மனமற்று,தவத்தில் ஆழ்ந்துவிட்டான்.... பூரானும்,பூச்சியும் ஊர்ந்ததம்மா,இளம் தேகத்திலே,
புற்றுக்கறையான் அரித்ததம்மா,பல பாகத்திலே...
நவ முனி யோகத்திலே....
சின்ன பையன் ஒருவன்,செய்த செயல் என்னைக் கலக்கிடுதே...
அதை எண்ணத் தொடங்கி விட்டால்,என் பிறப்பு,ஏன் என்று தோன்றிடுதே...
ஷேஷாத்ரி ஸ்வாமிகள் காப்பாற்ற,நாம் செய்த புண்ணியம் என்றாச்சு...
ஆசா பாசத்துள் அல்லாடும் நமக்காசான் கிடைத்தான் நன்றாச்சு...
புற்றோடு புற்றாக போயிருந்தால் மனம் விற்றுப் போனவற்க்கு மருந்துண்டோ? முற்றும் அறிந்து முனிவனானவன்,
இல்லால் நம் பிறவிக்கு பயனுண்டோ?
இல்லால் நம் பிறவிக்கு பயனுண்டோ?
சின்ன பையன் ஒருவன்,செய்த செயல் என்னைக் கலக்கிடுதே...
அதை எண்ணத் தொடங்கி விட்டால்,என் பிறப்பு,ஏன் என்று தோன்றிடுதே...
மாங்கிளையில்,தூங்கி வாழ்ந்த மனிதர்கள் மண்ணில் உண்டோ?
பூங்குழவி கொட்டி,கால்கள் வீங்கத்தாங்கி கொண்டாருண்டோ?
த்யானித்திருப்பான்...சோரூட்டிப் போவார்கள்...தெரியாது....
நாலு நாள் ஆனாலும் வாயை விட்டு சோறு இறங்காது...
சிறு முனிக்கு மக்கள் கூடுவார்,சிலருக்கு பொறுக்காது..
உடலை மாய்த்திடப் போனானே ...விடவில்லை,ஈசனும் விதியா அது?
யாருக்கும் தெரியாது...
சின்ன பையன் ஒருவன்,செய்த செயல் என்னைக் கலக்கிடுதே...
அதை எண்ணத் தொடங்கி விட்டால்,என் பிறப்பு,ஏன் என்று தோன்றிடுதே...
உடம்போடு வாழ்ந்தாலும் உடம்பின்றி வாழ்ந்தவன் குரு ரமணன்..
உடம்பின்றி ஆன்மாவாய் உடன்வந்து உறைபவன் குரு ரமணன்..
புற்று நோயகற்ற கீறினாலும், அவன் தேகத்தில் இல்லை..
முற்றும் தேக வாழ்வு முடிந்தாலும் அவன் தேகி இல்லை..
ஒளி வெள்ளமாய்..மலை உச்சியில்,கலந்து விட்டான் ரமணன்,
கலியுகத்தில் களி ஒளிப்போன் அவனே குரு ரமணன்..
அவனே குரு ரமணன்..
சின்ன பையன் ஒருவன்,உலகத்தை சின்னதாய் ஆக்கிவிட்டான்.
இந்த சின்ன உலகினையும்,அன்பு கொண்டு,தன்னோடினைத்துக்கொண்டான்.. முன்னம் நிகழ்ந்ததெல்லாம் மனக்கண் முன்னாலே தோன்றிடுதே..
இன்னம் நினைந்திருந்து நெஞ்சம் அலை பாய்ந்து தவிக்கிறதே...ஏ
சின்ன பையன் ஒருவன்,செய்த செயல் என்னைக் கலக்கிடுதே...
அதை எண்ணத் தொடங்கி விட்டால்,என் பிறப்பு,ஏன் என்று தோன்றிடுதே...