இலங்கை தமிழர் குறித்து ரிச்சர்ட் டிக்சன் என்னும் வெள்ளையரின் கருத்துக்கள் கட்டுரைகள்
என்ன தான் நாம் கழுதையாக கத்தினாலும் கூட ,தேர்தல் தான் முடிந்து விட்டதே என்ன இப்போ இலங்கை பிரச்சனை?,
மக்கள் தான் அதை மறந்து விட்டனரே?
அப்படின்னா?
அடுத்த வாரம் ராஜபக்சே ஸ்பெஷல் தரிசனம் செய்ய திருப்பதி வர்ராருய்யா ,அதற்கு ஏற்பாடு செய்யுங்க என்று நம் மாநில மத்திய அரசுகளும் சகஜ நிலைக்கு திரும்பி விட்டனர்.
படித்த,மேல்தட்டு மக்களுக்கு இலங்கையில் தமிழர் நிலை குறித்தோ அவர்களின் வாழ்வுரிமை குறித்தோ சரியான தெரிதல் இல்லை.
ஏனென்றால் வட மாநில ஊடகங்கள்.பொய்யையும் புரட்டயுமே நம்பி பிழைப்பை நடத்துகின்றன.தமிழர் என்றால் இந்தி எதிர்ப்பாளர்கள் தான் இன்னும்.(அது மிகவும் பிரபலம்)ஒருவர் ஒரு படி மேலே போய்
என்னிடம் "மலையாளத்தானுக்கும் தெலுங்கனுக்கும் பீகாரிக்கும் கன்னடன்,குஜராத்திக்கும் இல்லாத மொழி பற்றா உன்கிட்ட இருக்கு?"
அவன் ஒருத்தனுக்கு இந்தி தெரியாதுன்னு சொல்ல சொல்லு.பார்ப்போம்?
ஏன் யா ?உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்கிறீர்கள் ? என்று கேட்க.
நான் வெட்கித் தலை குனிந்தேன்.
அவனிடம் நான் இந்திய தமிழருக்கு கருணாநிதி செய்த துரோகத்தையும் ,இவர்களின் இந்தி எதிர்ப்பு நாடகத்தையும் சொல்லி ,சப்பை கட்டு கட்டினேன்.
அதில் என்ன கொடுமை என்றால்
நான் பயணிக்க பாகிஸ்தானி டாக்ஸி தான் கிடைக்கும்.
அவன் ஒரு நக்கலடிப்பான் ,பாருங்கள் ?தேசிய மொழி ...
நீ இந்தியன் தானே?உனக்கு இந்தி தெரியாதா?என்று. பலூச்சியான
நான் கூட உருதுவுவை தவிர இந்தியும் படித்திருக்கிறேன் ,அப்போது தான் உன்னிடம் பேச முடியும் என்று.
(இப்போது தான் ஒன்று விளங்கு கிறது வட மாநில ஊடகங்களின் ஈழ தமிழர் காழ்புணர்ச்சிக்கு முக்கிய காரணம் .அவர்கள் இந்தியத் தமிழர்களை பழி வாங்குவதாக நினைத்துக் கொண்டு ஈழத் தமிழரை பழி வாங்குகின்றனர்.)
இங்கே துபாயில் என் லைன் மேனேஜருக்கு,ஜஸ்டீன் கூபர். (இங்கிலாந்து)என்னை தமிழ் என்று தெரியும்,ஆனால் என்னையும் அந்த இலங்கை போராளி கும்பலாக ,அகதிகள் கும்பலாகவே நினைத்திருக்கிறான்.
ஒரு நாள் திடீரென்று விவாதம் ஈழம் பற்றி திரும்ப
அவனுக்கு அவன் படித்தால் விளங்கிக் கொள்ள ஏதுவாக ..
இங்கிலாந்து எழுத்தாளர். ரிச்சர்ட் டிக்சன் எழுதிய ஈழம் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளை படத்துடன் பிரிண்ட் எடுத்தும் சுட்டிகளை அவன் தளத்திற்கு அனுப்பியும் விட,அவன் மிக தீவிரமாக படிக்க ஆரம்பித்து விட்டான்.தன் ஊடக புகைபடகார மனைவியிடமும் காட்ட.அவளும் உண்மை நிலையை உணர்ந்துள்ளனர்.அவன் மேலும் என்னிடம் பின் ஏன் ? நீங்கள் அவர்களுக்கு உதவ வில்லை என்று கேட்க.
மீண்டும் கருணாநிதி கதை ,அவருக்கு இந்தி படம் பார்க்க பிடிக்காது,புரியாது என்பதையும் விளக்க .அவன் நகைக்க ..
தன்னால் முடிந்த உதவிகளை தமிழருக்காக செய்வதாய் சொல்லியிருக்கிறான்.நீங்கள் கூட யாரேனும் வேற்று நாடவருக்கோ அல்லது வேற்று மொழி இந்தியர்களுக்கோ இந்த சுட்டிகளை பரிந்துரை செய்யலாம்.
நம் சென்னை வாசிகள் (30 வயதுகளில் இருக்கும்)பலருக்கு தமிழ் படிக்கத் தெரியாது.சிலருக்கு தன் பெயர் மட்டும் எழுதவும் படிக்கவும் தெரியும்.(cbsc- உபயம்)அது போன்ற குடி தாங்கிகளுக்கும் இது உதவும்.
அந்த ஹை க்ளாஸ் பிஸ்த்துகள் என்னவோ ஈழ தமிழர் மேல் தான் தவறு உள்ளதாக "பட்டி மன்றமே"நடத்து கிறார்கள்(ஆங்கிலத்தில்)
http://my.telegraph.co.uk/richarddixons/blog/2009/05/20/lies_and_deceptions_comical_alis_of_sri_lanka
http://my.telegraph.co.uk/richarddixons/blog/2009/05/20/sri_lanka_a_paradise_turned_into_kingdom_of_vultures
http://my.telegraph.co..uk/richarddixons/blog/2009/05/20/the_real_culprits_behind_sri_lankan_war
Labels: ஈழம், ரிச்சர்ட் டிக்ஸ்ன்.
0 Comments:
Post a Comment
வலை நண்பர்களே சான்றோர்களே சொன்னது பிடித்தால் ஓட்டு & கருத்து போட்டு ஊக்கம் கொடுங்கள்.
Subscribe to Post Comments [Atom]
<< Home