தமிழின தலைவருக்கு பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.
தமிழின தலைவருக்கு பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.
அய்யா மிக்க மகிழ்ச்சி தாங்கள் 85 ஆம் அகவையில் அடியெடுத்து வைத்திருக்கிறீர்கள்,அந்த பகவான் சத்திய சாய் பாபாவின் பூரண ஆசிகளினால் கடந்த ஆண்டு தங்களுக்கு ஏற்ப்பட்ட பல சோதனைகளையும் வேதனைகளையும் ஏன் மிக சிக்கலான முதுகு அறுவை சிகிச்ச்சையையும் வென்று விட்டீர்கள்.தங்கள் மனைவிக்கும் துணைவிக்கும் நீண்ட மாங்கல்ய பாக்கியமும் கிடைத்துவிட்டது.எதிர் பாராத வெற்றியும் லோக்சபா தேர்தலில் கிடைத்தும் விட்டது.
தாங்கள் கூடிய விரைவில் பீஷ்ம சாந்தியும் , ஆயுஷ் ஹோமமும் செய்து கொள்ள வேண்டும்.
நாங்கள் அந்த சத்ய சாய் பாபாவை தரிசிக்க வேண்டுமென்றால் 1 நாள் முழுக்க ரயில் பயணம் செய்து, புட்டப்பர்த்தி சென்று இரண்டு நாளாவது வரிசையில் அமர்ந்து உருகி பிரார்த்தனை செய்தால் தான் முடியும்,அப்போதும் கூட அவரின் கடைக்கண் பார்வை கிடைக்க புண்ணியம் செய்திருக்க வேண்டும்.அப்படிப்பட்ட பகவானே உங்கள் வீட்டுக்கு வந்து அனைவருக்கும் அருள் பாலித்து ,உணவருந்தி சென்றது உங்கள் பூர்வ ஜென்ம புண்ணியமே..
இனிமேலாவது இந்து மத நிந்தனையில் இறங்கி ராமன் பொறியியல் படித்தானா?எந்த பல் கலை கழகத்தில்?மேல் படிப்பு எங்கே படித்தான்?அவன் குடிகாரன்(ஆனால் டாஸ்மாக்கில் குடிக்க மாட்டான்)என்று கடவுள் நிந்தனை செய்யாமல் இருத்தலும் உண்மையான சிறுபான்மையான பிராமண இனத்தை துவேஷம் செய்யாமல் இருந்தால் உங்களை இன்னும் பல படிகள் உயர்த்துவான் அந்த பரமாத்மா.
ஒரு வேண்டுகோள்:-அந்த அறுபது தமிழ் வருடங்களின் பெயர்களையும் மாற்றும் திட்டம் இன்னும் இருக்கிறதா? அப்படி இருந்தால் சிறு பான்மையினரின் வேண்டுகோளாக அதை கைவிட்டு விடுங்கள்.எங்களுக்கு இலவசங்கள் வேண்டவே வேண்டாம்.இருப்பதே போதும்.
0 Comments:
Post a Comment
வலை நண்பர்களே சான்றோர்களே சொன்னது பிடித்தால் ஓட்டு & கருத்து போட்டு ஊக்கம் கொடுங்கள்.
Subscribe to Post Comments [Atom]
<< Home