அன்னையின் அருள்வாக்கு: இன்று
ஓம் சக்தி ! பரா சக்தி !
குருவடி சரணம் ! திருவடி சரணம்!
அன்னையின் அருள்வாக்கு:
உலகத்தில் லாபத்தை பார்க்கிறவர்கள்
தர்மத்தை பார்ப்பதில்லை..
அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:
ஆன்மிகம்:
குப்பையும், கோபுரமும்:
" குப்பையில் இருந்தவனெல்லாம் குபேரனாக மாறுவான். ஆனால் அந்த வாழ்வு நிலைக்காது. ஆன்மிகத்தில் உனக்குக் கிடைக்கிற புகழ் தான் நிலையானது."
ஆன்மா ஆட்டுவிக்கிறபடி.....
" அழிவது அழிந்து கொண்டு தான் இருக்கும். பொறாமைக்குணம் கொண்டவன் பொறாமைப்பட்டுக் கொண்டு தான் இருப்பன். சிறைக்குச் செல்ல வேண்டியவன் சென்று கொண்டு தான் இருப்பான். அவனவனை ஆன்மா எப்படி ஆட்டுவிக்கிறதோ அதுபோலத் தான் நடக்கும்."
ஆன்மா காட்டிக் கொடுத்துவிடும்:
" கண்ணாடி முன் நின்றால் அது உன் முகத்தைக் காட்டிக் கொடுத்து விடும். அதுபோல ஆன்மா ஒருவன் நல்லவனா? கொலைகாரனா? இவன் எந்த நோக்கம் கொண்டவன் என்பதைக் காட்டிக் கொடுத்துவிடும்."
-"பத்து ரூபாய் தருமம் செய்துவிட்டு உடனே நமக்குப் பலன் கிடைக்கவேண்டும் என்று நீங்களெல்லாம் நினைக்கீறீர்கள். அந்தப் பத்து ரூபாய் தருமம் செய்வதற்கு முன்பே பத்து வினைகள் உன்னிடம் திரண்டிருக்கின்றன என்பதை மறந்துவிடக்கூடாது." - அன்னையின் அருள்வாக்கு
Labels: அன்னையின் அருள்வாக்கு: இன்று
0 Comments:
Post a Comment
வலை நண்பர்களே சான்றோர்களே சொன்னது பிடித்தால் ஓட்டு & கருத்து போட்டு ஊக்கம் கொடுங்கள்.
Subscribe to Post Comments [Atom]
<< Home