அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:
ஓம் சக்தி ! பரா சக்தி !
குருவடி சரணம் ! திருவடி சரணம்!
அன்னையின் அருள்வாக்கு:
உன் ஆன்மா என்னும் பாத்திரத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
ஆன்மிகம்:
வளர்ச்சி பெற்ற ஆன்மாக்களின் எண்ணிக்கை:
"ஆலயம் வளரவில்லை. ஆன்மா தான் வளர்கிறது.ஆணவத்தைக் குறைத்து ஆன்மாவை வளர்க்கவேண்டும்.
யானை போல உருவம் இருந்து பயனில்லை. யானையின் வலிமை போல ஆன்மாவை உருவாக்க வேண்டும். மக்கள் எண்ணிக்கை பெருகினால் மட்டும் போதாது. வளர்ச்சி பெற்ற ஆன்மாக்களின் எண்ணிக்கை பெருகவேண்டும்."
எதையும் தாங்கும் சக்தி:
" ஆன்மிகத்தில் ஈடுபட்டுள்ள உங்களுக்குப் பொறுமையும் தைரியமும் இருக்கவேண்டும்.
பற்றக்குரையினால் தான் ஆசைகள் ஏற்படுகின்றன. அதன் காரணமாகவே மக்களுக்கு வலிகள் ஏற்படுகின்றன. வயிற்றுவலி, தலைவலி, புகல்வலி என்ற பல வலிகளுக்கு ஆசையே காரணம்!
ஆசைகள் குறையக்குறைய ஆன்மா அமைதி பெரும்! எதையும் தாங்கும் சக்தி பெரும். அப்போது கல் போல நிலைத்து நிற்க முடியும்."
ஆன்மாவைச் சுத்தமாக வைத்துக்கொள்!
" அன்றும் சொன்னேன்; இன்றும் சொல்கிறேன்; நாளையும் சொல்வேன்! ஆன்மாவைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்."
0 Comments:
Post a Comment
வலை நண்பர்களே சான்றோர்களே சொன்னது பிடித்தால் ஓட்டு & கருத்து போட்டு ஊக்கம் கொடுங்கள்.
Subscribe to Post Comments [Atom]
<< Home