Sunday, June 14, 2009

ரமணர் வாக்கு ஞானத்தின் சாவி



மனிதன் தானே எல்லாவற்றையும் செய்வதாக எண்ணிக் கொள்கிறான். பிரச்னையே இங்குதான் தொடங்குகிறது. நம்மையும் மீறிய ஒரு சக்தியால் நாம் இயக்கப்படுகிறோம் . நாம் அச்சக்தியின் ஒரு கருவியே என்பதை மனிதன் புரிந்து கொள்ள வேண்டும். அதைப் புரிந்து கொண்ட பின் பல துன்பங்களிலிருந்து மனம் விடுபட்டு விடும். அந்த எண்ணம் தோன்றாதவரைக்கும் நமக்கு நாமே துன்பங்களை வரவழைத்துக் கொள்கிறோம் என்பதே உண்மை. மரணத்திற்குப் பிறகு என்ன என்பதைப் பற்றி எண்ணி இப்போதே விடை தேட வேண்டாம். எதிர்காலத்தைப் பற்றி எதிர்காலமே கவனித்துக் கொள்ளும். எனவே, அந்தக் கவலையை விடுத்து நிகழ்காலத்தில் நிறைவாக வாழ முற்படுங்கள். ஒருவன் தன்னைப் பற்றி முதலில் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும். தன்னைப் பற்றியே சரியாகவும், முறையாகவும் அறிந்து கொள்ள முடியாத ஒருவனால் உலகத்தைப் பற்றி அறிந்து கொள்வது முடியாத செயல். அப்படி அறிந்து கொண்டதாக ஒருவன் எண்ணினால், அது அஸ்திவாரம் இல்லாமலேயே சுவர் எழுப்பியது போன்றதாகும். உடுத்தும் உடையை மாற்றிக் கொள்வதும், வீட்டைத் துறப்பதும் மட்டும் சந்நியாசமன்று. மனதில் உள்ள ஆசாபாசங்களையும், பந்தங்களையும் துறப்பதே உண்மையான சந்நியாசம்.
இன்னும் வரும் .

Labels:

2 Comments:

Blogger ஷண்முகப்ரியன் said...

நம்மையும் மீறிய ஒரு சக்தியால் நாம் இயக்கப்படுகிறோம்.//

வெளியே ஒரு சக்தி என்பதே நமது முதல் அறியாமை.
இரண்டு அல்ல,ஒன்றே என்பதே அனைத்து வேதமும்.
மூலசக்தியே தன்னை ‘நான்’ என்று பிரித்துப் பார்த்து விளையாடிக் கொள்கிறது,குழந்தைகள் தங்கள் நிழல்களோடவே விளையாடுவதைப் போல.

June 16, 2009 at 6:50 AM  
Blogger geethappriyan said...

ஐயா
அற்புதமான கருத்துக்கள்.
மிக்க நன்றிகள்.என்னமாய் எழுகிறீர்கள்.?
பின்னூட்டம் எழுதுவதில் கூட ஆழ்ந்து ,சூட்சமாய் ,பொருள் பிரித்து எழுதுகிறீர்கள்.சின்ன விஷயங்களுக்கு கூட எவ்வளவு முக்கியத்துவம் தந்து படிக்கிறீர்கள் ?.ஐயா,வளரும் கலைஞர்களை ஊக்குவிக்க நீங்கள் வலைப் பூவில் இருப்பது நாங்கள் செய்த பேரே....
இப்பிறப்பில் என்ன செய்தேன் என்று பார்த்தால் கணக்கில் ஏதும் இல்லை.
(குரு ரமண கீதம் )
பாடல் வரிகள் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
"தீமையென தெரிந்திருந்தும் செய்த செயல் விட்டதில்லை.
நன்மைதனைக் கண்டிருந்தும் நாடிநின்று தொட்டதில்லை"
எத்தனையோ பாவங்களை ஏற்று நான் செய்த போதும்.
முற்பிறப்பில் செய்த வினை முன்பு வந்து சுட்ட போதும்
இக்கரையில் என்னையுமே ஏற்க்க வந்தான்-என் ரமணன்
செத்ததம்மா தப்பிதங்கள் -இப்பிறப்பின் புண்ணியம்

இசைஞானி எழுதி இசைஅமைத்து பாடியது
(ஐயா நான் குடி ,புகை பழக்கத்திலிருந்து வெளியே வர எனக்கு ஆன செலவு 75 ருபாய் கொடுத்து இந்த அரு மருந்தை வாங்கியது)இதை கேட்கையில் எனக்கு நல்லதையே பெரும்பாலும் நினைக்க செய்ய தோற்றுவிக்கிறது.
இதை தினமும் கேட்க ஏதோ ஒரு அற்புத சக்தி பிறப்பதை உணர்கிறேன்.
உங்களுடன் பகிர வேண்டும் என தோன்றியதால் சொன்னேன்.

June 16, 2009 at 11:34 PM  

Post a Comment

வலை நண்பர்களே சான்றோர்களே சொன்னது பிடித்தால் ஓட்டு & கருத்து போட்டு ஊக்கம் கொடுங்கள்.

Subscribe to Post Comments [Atom]

<< Home