அன்னையின் அருள்வாக்கு:Mon, Jun 29, 2009
ஓம் சக்தி ! பரா சக்தி !
குருவடி சரணம் ! திருவடி சரணம்!
அன்னையின் அருள்வாக்கு: கருவிலேயே ஆன்மிக உணர்வு ஏற்படுவதற்கு விழாக்கள் வழி வகுக்கும்.
அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:
ஆன்மிகம்:
சித்தன் யார்?
" ஆன்மிகத்தில் முழுப்பைத்தியம் கொண்டவனே சித்தன் ஆகிறான். நீங்களெல்லாம் அரைகுறைப் பைத்தியங்கள். நீங்கள் அப்படியும் இருப்பதில்லை. இப்படியும் இருப்பதில்லை."
பாவனையால் பயன் கிடையாது:
"பசை இருந்தால் தான் ஒரு பொருள் இன்னொரு பொருளுடன் ஒட்டும். அதுபோல உங்கள் ஆன்ம உணர்வுக்கும் ஆன்மிகத் தொண்டிற்கும் தொடர்பு இருந்தால் தான் பயன் உண்டாகும். தொண்டு செய்வது போலவும், ஆன்மிகத்தில் நாட்டம் இருப்பது போலவும், என்னிடம் பாவனை செய்வதால் பலன் இல்லை."
ஆன்மிகவாதிகளின் போலி வேடம்:
" வெறும் பானையை அடுப்பில் வைத்துச் சூடேற்றினால் பானை தான் வெடிக்கும். தண்ணீர் வைத்துச் சூடேற்றினால் அது கொதித்து ஆவியாகும். எதிலும் ஒரு பக்குவம் வேண்டும். கொதிநீர் பொங்கி, ஆவியாகி வெளிப்படுவது போல பொய்வேடம் போடும் ஆன்மிகவாதிகளின் வேடமும் கலைந்து போகும்."
"நாம் தவறு செய்துவிட்டுத் தீய நோக்கத்துடன் தான் வந்து கொண்டிருக்கிறோம். இருந்தும் அம்மா நம்மைத் தண்டிக்கவில்லையே என்று நினைத்துக் கொள்ளாதே! எல்லாவற்றுக்கும் சேர்த்து உனக்குச் சாட்டையடி கொடுத்தால் உன்னால் தாங்க முடியாது. அகல்விளக்கில் அகப்பட்ட விட்டில் பூச்சி போல ஆகிவிடுவாய். என்னுடைய வழிகாட்டுதலைத் தவறாக மதிப்பிட்டுத் தவறாகப் பயன் படுத்த முயலாதே!" - அன்னையின் அருள்வாக்கு
“Do not think that Mother has not punished you through you have sinned and proceed with evil intention! If I whip you for all your sins put together, you will not be able to bear. You will be like a moth caught in the flame of a lamp. Do not wrongly estimate My guidance and try to make use of it in a wrong manner.” – Mother Goddess Adhiparasakthi’s Oracle
Labels: 2009, Jun 29, அன்னையின் அருள்வாக்கு:Mon
1 Comments:
WOW, it's a great article.
Post a Comment
வலை நண்பர்களே சான்றோர்களே சொன்னது பிடித்தால் ஓட்டு & கருத்து போட்டு ஊக்கம் கொடுங்கள்.
Subscribe to Post Comments [Atom]
<< Home