Monday, June 22, 2009

அன்னையின் அருள்வாக்கு:Mon, Jun 22, 2009

ஓம் சக்தி ! பரா சக்தி !

குருவடி சரணம் ! திருவடி சரணம்!


அன்னையின் அருள்வாக்கு:

ஆன்மா வளர வேண்டுமானால்

தொண்டும், பக்தியும் தேவை.

அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:

ஆன்மிகம்:

ஆன்மாதான் சக்தி!

" தாய் தந்தையர் மூலம் தான் உருவம் உண்டாகிறது. அந்த உடலுக்குச் சக்தி கொடுப்பது எதுவோ அதுவே ஆன்மா! அந்த ஆன்மாதான் சக்தி! ஆன்மா இல்லையென்றால் இங்கே எந்தப் பொறுப்பும் இல்லை. மனிதனின் ஆன்மாவைப் விட மிருகத்தின் ஆன்மா வைரம் பாய்ந்தது.

மனிதனின் ஆன்மா பக்குவம் அடையவேண்டும். அதற்கு ஒரு நாளைக்கு 10 நிமிடமாவது தியானம் இருக்கவேண்டும். எதிலும் மௌனத்தைக் கடைபிடிக்க வேண்டும்."

ஆணவம் கூடாது:

" ஆன்மா ஆன்மாவாக இருக்கவேண்டும். அதில் ஆணவம் இருக்கக் கூடாது. ஆணவம் சேர்ந்தால் அனாதையாக வேண்டியிருக்கும்."

Labels: , ,

0 Comments:

Post a Comment

வலை நண்பர்களே சான்றோர்களே சொன்னது பிடித்தால் ஓட்டு & கருத்து போட்டு ஊக்கம் கொடுங்கள்.

Subscribe to Post Comments [Atom]

<< Home