Wednesday, July 1, 2009

அன்னையின் அருள்வாக்கு:Wednesday, July 01, 2009

ஓம் சக்தி ! பரா சக்தி !

குருவடி சரணம் ! திருவடி சரணம்!

அன்னையின் அருள்வாக்கு:

ஆன்மிகத்தின் உச்சியை அடையும் திறமை

பெண்களுக்கு உண்டு.

அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:

ஆன்மிகம்:

ஆன்மாவிற்கு அவசியம்:

" விழா, அருள், தெய்வம், மனம் என்னும் இவைகளெல்லாம் எதற்காக? உங்கள் வளர்ச்சிக்காக! உடலுக்கு உணவு அவசியம்! ஆன்ம வளர்ச்சிக்கு ஆன்மிகம் அவசியம்!"

ஏவல், பில்லி, சூன்யம்:

" மனிதன் ஆன்மிகத்தை விட்டு நாயாகவும், பேயாகவும் மாறி அக்கிரமங்கள் செய்யும் போது வைப்பு, சூன்யம் என்பன எல்லாம் உண்டு."

இருப்பவன், இல்லாதவன்:

" இருப்பவனும் ஆன்மிகத்தில் ஈடுபட வேண்டும். இல்லாதவனும் ஈடுபட வேண்டும். ஆன்மிகத்தில் தொண்டு தான் முக்கியம். இருப்பவன் இல்லாதவனுக்குக் கொடுத்து உதவ வேண்டும். இல்லாதவன் தொண்டு செய்வதன் மூலம் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்."

Labels: , ,

அன்னையின் அருள்வாக்கு:Tue, Jun 30, 2009

ஓம் சக்தி ! பரா சக்தி !

குருவடி சரணம் ! திருவடி சரணம்!

அன்னையின் அருள்வாக்கு:

தூய உணர்வோடும், பய பக்தியோடும் தாழ்வு

மனப்பான்மை இல்லாமலும் தொண்டு செய்ய வேண்டும்.

அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:

ஆன்மிகம்:

பந்தபாசம் ஆன்ம முன்னேற்றத்துக்குத் தடைகள்:

" உன் உள்ளம் வெள்ளையாக இருந்தால் நீ செய்யும் காரியமும் நன்றாக அமையும். உள்ளத்தில் கருமை இருந்தால் செய்யும் காரியத்தில் செழுமை இருக்காது.

நெஞ்சில் கோழை இருந்தால் மூச்சுவிட முடியாது. அதுபோல உள்ளத்தில் பந்தபாசம் சேரும்போது ஆன்மிகத்தில் முன்னேற்றம் இருக்காது."

தரும சிந்தனை:

" ஆன்மிகத்தில் தரும சிந்தனை இருக்கவேண்டும். பிறர் நோயைத் தன்நோய் போல நினைத்து வாழவேண்டும். அந்தக்கால மக்களிடம் இத்தகைய சிந்தனை இருந்தது."

அந்த ஒரு ஆன்மா தான்:

" அம்மா! அன்னை என்பதெல்லாம் என்ன? அந்த ஒரு ஆன்மா தான் (பரமாத்மா!).

Labels: , ,

Monday, June 29, 2009

அன்னையின் அருள்வாக்கு:Mon, Jun 29, 2009

ஓம் சக்தி ! பரா சக்தி !

குருவடி சரணம் ! திருவடி சரணம்!

அன்னையின் அருள்வாக்கு:

கருவிலேயே ஆன்மிக உணர்வு ஏற்படுவதற்கு

விழாக்கள் வழி வகுக்கும்.

அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:

ஆன்மிகம்:

சித்தன் யார்?

" ஆன்மிகத்தில் முழுப்பைத்தியம் கொண்டவனே சித்தன் ஆகிறான். நீங்களெல்லாம் அரைகுறைப் பைத்தியங்கள். நீங்கள் அப்படியும் இருப்பதில்லை. இப்படியும் இருப்பதில்லை."

பாவனையால் பயன் கிடையாது:

"பசை இருந்தால் தான் ஒரு பொருள் இன்னொரு பொருளுடன் ஒட்டும். அதுபோல உங்கள் ஆன்ம உணர்வுக்கும் ஆன்மிகத் தொண்டிற்கும் தொடர்பு இருந்தால் தான் பயன் உண்டாகும். தொண்டு செய்வது போலவும், ஆன்மிகத்தில் நாட்டம் இருப்பது போலவும், என்னிடம் பாவனை செய்வதால் பலன் இல்லை."

ஆன்மிகவாதிகளின் போலி வேடம்:

" வெறும் பானையை அடுப்பில் வைத்துச் சூடேற்றினால் பானை தான் வெடிக்கும். தண்ணீர் வைத்துச் சூடேற்றினால் அது கொதித்து ஆவியாகும். எதிலும் ஒரு பக்குவம் வேண்டும். கொதிநீர் பொங்கி, ஆவியாகி வெளிப்படுவது போல பொய்வேடம் போடும் ஆன்மிகவாதிகளின் வேடமும் கலைந்து போகும்."

"நாம் தவறு செய்துவிட்டுத் தீய நோக்கத்துடன் தான் வந்து கொண்டிருக்கிறோம். இருந்தும் அம்மா நம்மைத் தண்டிக்கவில்லையே என்று நினைத்துக் கொள்ளாதே! எல்லாவற்றுக்கும் சேர்த்து உனக்குச் சாட்டையடி கொடுத்தால் உன்னால் தாங்க முடியாது. அகல்விளக்கில் அகப்பட்ட விட்டில் பூச்சி போல ஆகிவிடுவாய். என்னுடைய வழிகாட்டுதலைத் தவறாக மதிப்பிட்டுத் தவறாகப் பயன் படுத்த முயலாதே!" - அன்னையின் அருள்வாக்கு

“Do not think that Mother has not punished you through you have sinned and proceed with evil intention! If I whip you for all your sins put together, you will not be able to bear. You will be like a moth caught in the flame of a lamp. Do not wrongly estimate My guidance and try to make use of it in a wrong manner.” – Mother Goddess Adhiparasakthi’s Oracle

Labels: , ,

Friday, June 26, 2009

அன்னையின் அருள்வாக்கு: Fri, Jun 26, 2009

ஓம் சக்தி ! பரா சக்தி !

குருவடி சரணம் ! திருவடி சரணம்!

அன்னையின் அருள்வாக்கு:

உன் ஆன்மாவே கடவுள். உன் ஆன்மா

தான் சக்தி. சக்தி தான் ஆன்மா.

அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:

ஆன்மிகம்:

ஆன்ம பரிபக்குவம் ஏற்படவேண்டும்:

" பாலை நன்றாகக் காய்ச்சிப் பக்குவமான சூட்டில் அதனோடு புளிப்புப் பொருளைச் சேர்க்கும் போது அது தயிராக மாறுகிறது. அந்தத் தயிரிலிருந்து வெண்ணெய் கிடைக்கிறது. அது தண்ணீரிலும் மிதக்கிறது.

அதுபோல மனித உடலுக்கு ஆன்மா என்ற புளிப்புப் பொருள் சேர்ந்தால் தான் மனம் பக்குவம் அடையும்.

மோரான பிறகு அது பாலாக மாற முடியாது. அதுபோல மனிதனின் ஆன்மா பக்குவம் அடைந்துவிட்டால் அவன் கெட்ட வழிக்கு மாற முடியாது.

ஆன்மா பக்குவம் அடைய வேண்டுமானால் உலகத்து உயிர்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும். தருமம் செய்யவேண்டும். விரதங்களை மேற்கொள்ள வேண்டும்."

மெய் விளையாட்டும் பொய் விளையாட்டும்:

" ஒரு புறம் இங்கே ஆன்மிகம் வளர்கிறது. இன்னொருபுறம் அழிவுகள் வளர்ந்து வருகின்றன. இங்கு நடப்பவை தான் மெய் விளையாட்டு. அங்கு நடப்பவையெல்லாம் பொய்விளையாட்டு.

வேள்வி, வழிபாடு, இருமுடி, தியானம், தொண்டு, விரதம், பூசை, அங்கவலம், பாதயாத்திரை, முதலிய தெய்வீகம், ஆன்மிகம் தொடர்பான செயல்பாடுகள் மெய்விளையாட்டு.

ஆன்மிகம் தொடர்பான மெய்விளையாட்டில் கலந்துகொண்டால் ஆன்ம முன்னேற்றம் பெறலாம். மற்ற பொய் விளையாட்டுகளில் கலந்து கொண்டால் அழிவு தான் மிஞ்சும்."
“It is best for you to come here once or twice a month. It is not enough if you just come and go or perform the ritual worship. Whenever you come here you should spend atleast two or three minutes in meditation.” – Mother Goddess Adhiparasakthi’s Oracle

"மாதத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை இங்கே (மேல்மருவத்தூர் ஆலயத்திற்கு) வந்து செல்வது உனக்கு நல்லது. ஏதோ வந்தோம் போனோம் என்று இருக்கக்கூடாது. எனக்கு அர்ச்சனை செய்துவிட்டால் மட்டும் போதாது. இங்கே வரும்போதெல்லாம் இரண்டு அல்லது மூன்று நிமிட நேரம் தியானம் செய்துவிட்டுச் செல்!" - அன்னையின் அருள்வாக்கு

Labels: , ,

Tuesday, June 23, 2009

அன்னையின் அருள்வாக்கு:Wed, Jun 24, 2009

ஓம் சக்தி ! பரா சக்தி !

குருவடி சரணம் ! திருவடி சரணம்!

அன்னையின் அருள்வாக்கு:

"ஆசைகள் குறையக் குறைய ஆன்மா அமைதி பெரும்

எதையும் தாங்கும் சக்தி பெரும்."

அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:

ஆன்மிகம்:

ஆன்மிகம்: தொப்புள்கொடி!

" தொப்புள்கொடி என்ற குழாய் மூலமே தாயின் கருவிலுள்ள குழந்தை வளருகிறது. அதுபோல ஆன்மிகம் என்ற குழாய் மூலமே மனித இனம் வளர்ச்சி அடைகிறது."

ஆன்ம வளர்ச்சி:

" செடி, கொடிகள் அடர்ந்து வளர்ந்தால் தான் காடு வளரும். காடு வளர்ந்தால் தான் உலகிற்கு மழை வரும். அதுபோல உங்களிடம் ஆன்மா வளர்ந்தால் தான் உலகில் ஆன்மிகமும் வளரும்."

ஆன்மிகத்தின் சக்தி:

" இரும்பை ஈர்க்கும் சக்தி காந்தத்திற்கு உண்டு. அதுபோல எதையும் இழுக்கும் சக்தி ஆன்மிகத்திற்கு உண்டு."

Labels: , ,

அன்னையின் அருள்வாக்கு:tue, Jun 23, 2009

ஓம் சக்தி ! பரா சக்தி !

குருவடி சரணம் ! திருவடி சரணம்!

அன்னையின் அருள்வாக்கு:

“When you begin to utter the letters in Language you can not understand its importance. But this training is the base for your future education. Similarly you can not understand the importance of my training. This training forms the base for your future progress in spirituality. You would understand its importance later in the course of time.” – Mother Goddess Adhiparasakthi’s Oracle

"அ- - என்ற எழுத்துக்கள் ஆரம்பத்தில் எழுதிப்படிக்கும் போது அதனருமை தெரியாது. ஆனால் அந்தப் பயிற்சி தான் உங்கள் பிற்காலப் படிப்பிற்கு அடிப்படை. அதுபோல இங்கே நான் தருகிற இந்தப் பயிற்சிகளின் அருமை இப்போது உங்களுக்குத் தெரியாது. உங்களின் பிற்கால ஆன்மிக முன்னேற்றத்திற்கு இந்தப் பயிற்சி தான் அடிப்படை. இவற்றின் அருமைகள் காலப்போக்கில் பின்னால் தான் தெரியும்." - அன்னையின் அருள்வாக்கு


“Even if you starve, you must feed ten hungry persons. It will be beneficial to your body to starve on the one hand, and you will also gain the blessings of those people on the other hand. A mother is unburdened when she feeds her child. The child is happy too! Similarly the burden of your sin is reduced by the free distribution of food. At the same time the people who are fed become happy.” – Mother Goddess Adhiparasakthi’s Oracle


"பட்டினியாக இருந்தாலும் பத்து பேருக்கு அன்னதானம் செய்ய வேண்டும்.அப்படிப் பட்டினி கிடப்பதால் உன் உடலுக்கு ஒருபுறம் நன்மை. இன்னொருபுறம்உன்னால் பயன் பெற்றவர்கள் வாழ்த்துகின்ற வாழ்த்துக்களால் நன்மை. தாய்குழந்தைக்குப் பால் கொடுப்பதால் அவளது பாரமும் குறைகிறது. குழந்தைக்கும்மகிழ்ச்சி ஏற்படுகிறது. அதுபோல, அன்னதானத்தால் உன் வினைப்பாரமும்குறைகிறது. மற்றவர்களுக்கும் மகிழ்ச்சி விளைகிறது." - அன்னையின்அருள்வாக்கு



Labels: , ,

Monday, June 22, 2009

அன்னையின் அருள்வாக்கு:Mon, Jun 22, 2009

ஓம் சக்தி ! பரா சக்தி !

குருவடி சரணம் ! திருவடி சரணம்!


அன்னையின் அருள்வாக்கு:

ஆன்மா வளர வேண்டுமானால்

தொண்டும், பக்தியும் தேவை.

அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:

ஆன்மிகம்:

ஆன்மாதான் சக்தி!

" தாய் தந்தையர் மூலம் தான் உருவம் உண்டாகிறது. அந்த உடலுக்குச் சக்தி கொடுப்பது எதுவோ அதுவே ஆன்மா! அந்த ஆன்மாதான் சக்தி! ஆன்மா இல்லையென்றால் இங்கே எந்தப் பொறுப்பும் இல்லை. மனிதனின் ஆன்மாவைப் விட மிருகத்தின் ஆன்மா வைரம் பாய்ந்தது.

மனிதனின் ஆன்மா பக்குவம் அடையவேண்டும். அதற்கு ஒரு நாளைக்கு 10 நிமிடமாவது தியானம் இருக்கவேண்டும். எதிலும் மௌனத்தைக் கடைபிடிக்க வேண்டும்."

ஆணவம் கூடாது:

" ஆன்மா ஆன்மாவாக இருக்கவேண்டும். அதில் ஆணவம் இருக்கக் கூடாது. ஆணவம் சேர்ந்தால் அனாதையாக வேண்டியிருக்கும்."

Labels: , ,