அன்னையின் அருள்வாக்கு: Jun 24, ௨009
ஓம் சக்தி ! பரா சக்தி !
குருவடி சரணம் ! திருவடி சரணம்!
அன்னையின் அருள்வாக்கு:
கோயில் சிலையை விட ஆன்மாவிற்குத் தான் சக்தி உண்டு.
உனக்குள் உள்ள அந்த ஆன்மா தான் ஆதிபராசக்தி.
அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:
ஆன்மிகம்:
உடலும் ஆன்மாவும்:
" உடம்பு தான் கோயில். உன் உள்ளேயிருக்கும் ஆன்மாதான் சிலை!"
உங்களைப் பதப்படுத்த...
" வெள்ளிக்குத் தங்க முலாம் பூசினாலும், செம்புக்குத் தங்க முலாம் பூசினாலும் காலப்போக்கில் வெளுத்துவிடும். நெல்லில் பதர் உண்டு. அதுபோல ஆன்மிகத்திலும் பதர்கள் உண்டு. உங்களையெல்லாம் ஆன்மிகத்தில் பதப்படுத்திக் கொண்டு வருகிறேன்."
நாளும் சிந்தனை செய்!
" எதற்காக வாழ்வு? எதற்காகப் பாசம்? எதற்காகச் சுகம்? எதற்காக மதி? எதற்காகப் பதவி?எதற்காக நினைக்கும் தன்மை? எதற்காக ஏற்றுக்கொள்ளும் தன்மை? எதற்காகத் தாய் தந்தை? எதற்காகத் தருமம்? ஆன்மா என ஒன்று இருக்கிறதா? அது ஏன் இருக்கிறது? - என்றெல்லாம் சிந்தித்துச் சிந்தித்து உண்மையை உணரவேண்டும்."
“If you earn a little money in the wrong way, it will goad you to lead a luxurious life. It will subsequently lead to the condition of becoming a slave for the sake of that little money.” – Mother Goddess Adhiparasakthi’s Oracle
"தவறான முறையில் நான்கு காசு சம்பாதித்தால் அதைப் கொண்டு ஆடம்பரமாக வாழத் தோன்றும். பிறகு அந்த நான்கு காசுக்காக அடிமையாகும் நிலை ஏற்படும்." - அன்னையின் அருள்வாக்கு
Labels: ௨009, அன்னையின் அருள்வாக்கு: Jun 24
1 Comments:
"தவறான முறையில் நான்கு காசு சம்பாதித்தால் அதைப் கொண்டு ஆடம்பரமாக வாழத் தோன்றும். பிறகு அந்த நான்கு காசுக்காக அடிமையாகும் நிலை ஏற்படும்." - அன்னையின் அருள்வாக்கு//
இன்றைய கன்ஷுமர் உலகத்துக்கு சரியான வாக்கு.
Post a Comment
வலை நண்பர்களே சான்றோர்களே சொன்னது பிடித்தால் ஓட்டு & கருத்து போட்டு ஊக்கம் கொடுங்கள்.
Subscribe to Post Comments [Atom]
<< Home