Sunday, July 5, 2009

அன்னையின் அருள்வாக்கு:Sunday, July 05, 2009

ஓம் சக்தி ! பரா சக்தி !

குருவடி சரணம் ! திருவடி சரணம்!

அன்னையின் அருள்வாக்கு:

சிறிய அணுக்குண்டு பெரிய பெரிய காரியங்களைச் செய்கிறது..

நீ செய்யும் சின்னஞ்சிறிய தொண்டிற்கும் அணுகுண்டிற்குள்ள சக்தி உண்டு.

அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:

ஆன்மிகம்:

தடுமாறும் மனிதன்:

"இன்றைய மனிதனுக்குத் பாதை, செவி, உள்ளம், அழகு, முகம், கை எனும் இவை எல்லாமே தடுமாறுகின்றன. எனவே ஒவ்வொருவனும் தானாக ஆன்மிகத்தை நாடி வந்து தான் தன்னை வளர்த்துக் கொள்ள வேண்டும்."

அழுக்குகள் நீங்கவே ஆன்மிகம்:

" அழுக்குகள் சேரச் சேர அழுகல் நிலை தான் ஏற்படும். ஆன்மிகத்தில் ஈடுபட்டு அழுக்கைப் போக்கிக் கொள்ள வேண்டும். ஆன்மிகம் தான் உள்ளத்து அழுக்குகளை அகற்ற வல்லது."

சித்தன் ஆகலாம்:

" ஆன்மிகத்தால் மட்டுமே ஆனந்தம் கிடைக்கும். ஒவ்வொருவனும் சிந்தனையைத் திருத்தினால் சித்தன் ஆகலாம். பணப்பைத்தியமாகவும் , காமப் பைத்தியமாகவும் இருக்கக் கூடாது. ஆன்மிகப் பைத்தியமாக இருக்க வேண்டும்."

ஓம் சக்தி ! பரா சக்தி !

குருவடி சரணம் ! திருவடி சரணம்!

அன்னையின் அருள்வாக்கு:

எவ்வளவுக்கெவ்வளவுப் பெண்கள் ஆன்மிகத்தில் ஈடுபடுகிறார்களோ

அவ்வளவுக்கவ்வளவு உலகம் அழிவுகளிலிருந்து காப்பாற்றப் படுகிறது

அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:

ஆன்மிகம்:

உனக்கு நீயே பகை:

"உன் எண்ணமே உனக்கு எமனாக மாறும். உன் செய்கையே நாளை செய்தியாக மாறும். உன் உருவமே உன்னை உருள வைக்கும். உனது காதே உனக்குக் கேடு விளைவிக்கும். உனது நாக்கே உனக்குச் சண்டையை உண்டாக்கிக் கொடுக்கும்.

எனவே தான் கட்டுப்பாடு தேவை. கட்டுப்பாட்டை வளர்த்துக் கொள்ள ஆன்மிகம் தேவை.

கட்டுப்பாடு குலைந்து போனதால் தான் இன்று எங்கும் கொலை! கொள்ளை! கற்பழிப்பு! என்பன பெருகிவருகின்றன. இவற்றையெல்லாம் ஆன்மிகம் ஒன்றால் தான் கட்டுப்படுத்த முடியும். இயற்கைச் சக்திகள் அனைத்தையும் ஆன்மிகம் ஒன்றால் தான் கட்டுப்படுத்த முடியும்."

ஆன்மா ஒன்று தான் !

"தெய்வம் மனிதன் ஆகலாம்; மனிதன் தெய்வம் ஆகலாம். ஆன்மா ஒன்று தான்; ஆக்கப்படும் உருவங்கள் தான் வேறுவேறு!"

ஆன்மிகமே புகலிடம்:

"நீருபூத்த நெருப்பின் மேல் கை வைக்கும்போது சுடாது. ஆனால் அடியில் உள்ள நெருப்பு சுடும். எரிந்து கொண்டிருக்கும் நெருப்பில் கை வைத்தால் உடனே சுடும். இன்று உலகமே நெருப்பாக மாறிவருகிறது. எங்கும் எதிலும் சுடுகிறது. ஆன்மிகம் ஒன்று தான் சிறந்த புகலிடம். ஆன்மிகத்தில் ஈடுபடுவதால் உன் ஊழ்வினைகள் குறைந்து கொண்டு வரும்."


“Meditation is useful for relaxation and fasting is helpful in exercising control over the intake of food. The menstrual cycle of women is also meant for relaxation. Relaxation does not imply laziness.” – Mother Goddess Adhiparasakthi’s Oracle

"ஓய்விற்காகத் தியானமும் உணவுக் கட்டுப்பாட்டுக்காக விரதமும் பயன்படுகின்றன. பெண்களுக்கு வீட்டு விலக்கு ஏற்படுவதும் ஓய்வு பெறுவதற்காகத்தான்! ஓய்வு என்பதற்குச் சோம்பேறித் தனமாக இருப்பது என்று பொருள் அல்ல!" - அன்னையின் அருள்வாக்கு

"கஷ்டங்கள் வரும்போது தியானத்தை மேற்கொள்ள வேண்டும். ஐந்து நிமிடம் மௌனம் இருக்க வேண்டும்." - அன்னையின் அருள்வாக்கு

“When you face troubles, you should mediate. You should be silent for 5 minutes.” – Mother Goddess Adhiparasakthi’s Oracle


Labels: ,

0 Comments:

Post a Comment

வலை நண்பர்களே சான்றோர்களே சொன்னது பிடித்தால் ஓட்டு & கருத்து போட்டு ஊக்கம் கொடுங்கள்.

Subscribe to Post Comments [Atom]

<< Home