Wednesday, July 1, 2009

அன்னையின் அருள்வாக்கு:Tue, Jun 30, 2009

ஓம் சக்தி ! பரா சக்தி !

குருவடி சரணம் ! திருவடி சரணம்!

அன்னையின் அருள்வாக்கு:

தூய உணர்வோடும், பய பக்தியோடும் தாழ்வு

மனப்பான்மை இல்லாமலும் தொண்டு செய்ய வேண்டும்.

அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:

ஆன்மிகம்:

பந்தபாசம் ஆன்ம முன்னேற்றத்துக்குத் தடைகள்:

" உன் உள்ளம் வெள்ளையாக இருந்தால் நீ செய்யும் காரியமும் நன்றாக அமையும். உள்ளத்தில் கருமை இருந்தால் செய்யும் காரியத்தில் செழுமை இருக்காது.

நெஞ்சில் கோழை இருந்தால் மூச்சுவிட முடியாது. அதுபோல உள்ளத்தில் பந்தபாசம் சேரும்போது ஆன்மிகத்தில் முன்னேற்றம் இருக்காது."

தரும சிந்தனை:

" ஆன்மிகத்தில் தரும சிந்தனை இருக்கவேண்டும். பிறர் நோயைத் தன்நோய் போல நினைத்து வாழவேண்டும். அந்தக்கால மக்களிடம் இத்தகைய சிந்தனை இருந்தது."

அந்த ஒரு ஆன்மா தான்:

" அம்மா! அன்னை என்பதெல்லாம் என்ன? அந்த ஒரு ஆன்மா தான் (பரமாத்மா!).

Labels: , ,

0 Comments:

Post a Comment

வலை நண்பர்களே சான்றோர்களே சொன்னது பிடித்தால் ஓட்டு & கருத்து போட்டு ஊக்கம் கொடுங்கள்.

Subscribe to Post Comments [Atom]

<< Home