Thursday, June 25, 2009

ஐக்கிய அரபு நாட்டில் ஒன்றான அபுதாபியில் 221வது பிரதோஷ பூஜை

அபுதாபியில் 221வது பிரதோஷ பூஜை

செய்தி நன்றி :-தினமலர்

ஜூன் 25,2009,13:03 IST

அபுதாபி: அபுதாபியில் பிரதோஷக் குழுவினரால் 221வது பிரதோஷ பூஜை வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இது சனிப்பிரதோஷம் என்பது இப்பூஜைக்கு கூடுதல் சிறப்பைத் தந்தது. கணபதி பூஜையுடன் துவங்கிய இந்நிகழ்ச்சியில் பூர்வங்க பூஜை, கும்ப ஆவாகணம், மகன்யாச ஜபம், ஸ்ரீ ருத்ர அபிஷேகம், நந்தி அஷ்டோத்திரம், சிவ அஷ்டோத்திரம் ஆகியன நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிவ பெருமானுக்கு நல்லெண்ணை, பஞ்சவ்யம், பஞ்சாமிர்தம், நெய், பால், தயிர், தேன், கரும்புச்சாறு, இளநீர், எலுமிச்சை சாறு, சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. இப்பூஜைகள் அனைத்தும் வேத அமைப்பைச் சேர்ந்த குமார் என்பவரால் நடத்தி வைக்கப்பட்டது. இந்த சிறப்பு மிகுந்த சனிப் பிரதோஷத்தில் நந்திகேஸ்வரருக்கு நந்திகேஸ்வர அஷ்டோத்திரம் பாராயணம் செய்யப்பட்டது. மேலும் சிவபெருமானுக்கு பொங்கல், காப்பரிசி, தேங்காய் சாதம், தயிர் சாதம், வடை, சுண்டல், பஞ்சாமிர்தம் ஆகியன நைவேத்தியம் செய்யப்பட்டு, பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் விநியோகிக்கப்பட்டது. தொடர்ந்து நடத்தப்பட்டு வரம் இந்த பிரதோஷ பூஜையில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Labels: