அன்னையின் அருள்வாக்கு:
ஓம் சக்தி ! பரா சக்தி !
குருவடி சரணம் ! திருவடி சரணம்!
அன்னையின் அருள்வாக்கு:
வாழ்க்கை என்பது ஒரு மின்னல் போல்
மறையும் அனுபவம் தான் என்பதை மறவாதே.
அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:
ஆன்மிகம்:
உலகியல் வாழ்க்கை: ஆன்மிக வாழ்க்கை:
" உலகப் பற்றுகளோடு வாழும் உலகியல் வாழ்க்கைக்கும் ஆன்மிக வாழ்க்கைக்கும் வேறுபாடு உண்டு. உலகியல் வாழ்க்கையில் கிடைக்கிற அடி தாங்க முடியாததாக இருக்கும். ஆன்மிகத்தைப் பற்றிக் கொண்டு வாழ்கிறபோது உனக்கு அடி விழுந்தாலும் வலிக்காது. உலகியலுக்காக நீ ஓடி அலைகிறபோது உன் மூச்சு இறைக்கும். ஆன்மிக வாழ்வில் மூச்சு இறைக்காது"
சிறைப்பட்ட ஆன்மா:
"ஆன்மா உடம்பில் சிறைப்பட்டு கொண்டிருக்கும்வரை அடியும் தொல்லையும் இருக்கவே செய்யும். அவை குறைய வேண்டுமானால் தர்மம் செய்யவேண்டும்."
ஆன்மீக வாழ்வின் ஆரம்பத்தில்...
"புத்தம் புதிய ஓரிடத்தில் படுத்து உறங்க முயல்கிறபோது சிலருக்குத்
தூக்கம் வருவதில்லை. பழகிவிட்ட பிறகு நன்றாகத் தூக்கம் வருகிறது. அதுபோல் ஆன்மீகத்துறையிலும் முதன் முதலில் கஷ்டமாகத் தெரியும், நாட்பட நாட்பட எல்லாம் பழகிவிடும்."
Labels: அன்னையின் அருள்வாக்கு:
1 Comments:
ஆன்மா உடம்பில் சிறைப்பட்டு கொண்டிருக்கும்வரை அடியும் தொல்லையும் இருக்கவே செய்யும். அவை குறைய வேண்டுமானால் தர்மம் செய்யவேண்டும்."
இது எனக்குப் புரியவில்லை.
நான் புரிந்த வரையில் வாழ்க்கை என்ற முழுமையில் இருந்து ஆன்மீகத்தையும் லௌகீகத்தையும் பிரிப்பது எதற்கு என்றே தோன்றுகிறது,கார்த்திகேயன்.
Post a Comment
வலை நண்பர்களே சான்றோர்களே சொன்னது பிடித்தால் ஓட்டு & கருத்து போட்டு ஊக்கம் கொடுங்கள்.
Subscribe to Post Comments [Atom]
<< Home