அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:
ஓம் சக்தி ! பரா சக்தி !
குருவடி சரணம் ! திருவடி சரணம்!
அன்னையின் அருள்வாக்கு:
உன் ஆன்மா என்னும் பாத்திரத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
ஆன்மிகம்:
வளர்ச்சி பெற்ற ஆன்மாக்களின் எண்ணிக்கை:
"ஆலயம் வளரவில்லை. ஆன்மா தான் வளர்கிறது.ஆணவத்தைக் குறைத்து ஆன்மாவை வளர்க்கவேண்டும்.
யானை போல உருவம் இருந்து பயனில்லை. யானையின் வலிமை போல ஆன்மாவை உருவாக்க வேண்டும். மக்கள் எண்ணிக்கை பெருகினால் மட்டும் போதாது. வளர்ச்சி பெற்ற ஆன்மாக்களின் எண்ணிக்கை பெருகவேண்டும்."
எதையும் தாங்கும் சக்தி:
" ஆன்மிகத்தில் ஈடுபட்டுள்ள உங்களுக்குப் பொறுமையும் தைரியமும் இருக்கவேண்டும்.
பற்றாக் குறையினால் தான் ஆசைகள் ஏற்படுகின்றன. அதன் காரணமாகவே மக்களுக்கு வலிகள் ஏற்படுகின்றன. வயிற்றுவலி, தலைவலி, புகழ் வலி என்ற பல வலிகளுக்கு ஆசையே காரணம்!
ஆசைகள் குறையக்குறைய ஆன்மா அமைதி பெரும்! எதையும் தாங்கும் சக்தி பெரும். அப்போது கல் போல நிலைத்து நிற்க முடியும்."
ஆன்மாவைச் சுத்தமாக வைத்துக்கொள்!
" அன்றும் சொன்னேன்; இன்றும் சொல்கிறேன்; நாளையும் சொல்வேன்! ஆன்மாவைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்."
4 Comments:
First define exactly what is Aanmaa,Karththikeyan.
ஐயா இந்த சிறியேன் அறிந்த வரையில்.ஆன்மா(அ)ஆத்மா
உலக மதங்கள் பலவற்றில் உயிர் என்பது, உயிரினம் ஒன்றின் "பொருள் தன்மை" அற்ற பகுதியைக் குறிக்கும். ஆன்மா, ஆவி போன்ற வேறு பல பெயர்களாலும் குறிப்பிடப்படும் இதிலேயே சிந்தனை, ஆளுமை முதலியன அடங்கியிருப்பதாகக் கருதப்படுகிறது. இறையியலில், பொதுவாக உயிர் ஒரு உயிரினத்தின் இறப்பிற்குப் பின்னரும் தொடர்ந்து இருப்பதாக நம்பப்படுகிறது. சில மதங்கள், உயிர்கள் இறைவனால் படைக்கப்பட்டன என்கின்றன. வேறு சில மதங்களில் உயிர் எவராலும் படைக்கப்படாத நிலையானவற்றுள் ஒன்றாகக் கருதப்படுகின்றது. இறப்பின் போது உடலை விட்டு நீங்கும் உயிர் இன்னொரு உடல் எடுத்து உலகில் மீண்டும் பிறக்கின்றது என்கின்றன மறுபிறவியில் நம்பிக்கை கொண்ட சில மதங்கள். உடல் உயிர்களுக்கான தற்காலிகத் தங்குமிடம் என்றும், இறுதியில் இறைவனைச் சென்றடைவதற்கான செயல்களில் ஈடுபடுவதற்காக உயிர்களுக்கு இறைவன் உடலைக் கொடுக்கிறான் என்பதும் சில மதங்களின் கொள்கை.
ஐயா அறியாது ஒன்றும் இல்லை.
நான் எனக்கு வரும் ஆதிபராசக்தி சித்தர்பீட அருள் வாக்குகளை எல்லோரும் பயனடையும் படியும்,நானே அவற்றை திரும்ப திரும்ப படிக்கவும் இங்கு வெளியிடுகிறேன்.
மற்றபடி நான் ஒரு கத்துக்குட்டி.
தங்கள் மேலான ஆதரவுக்கு நன்றிகள்.
ஐயா நீங்கள் இந்த பதிவர் சந்திப்புகளுக்கு செல்லுவீர்களா?
ஐயா நீங்கள் இந்த பதிவர் சந்திப்புகளுக்கு செல்லுவீர்களா?//
இங்கே சென்னையில் ஆர்வத்தில் இரண்டு முறை சென்றேன்,கார்த்திகேயன்.
அவை பதிவர் சந்திப்புக்களாக இல்லை.பதிவர் கலவரங்களாக இருந்தன.எல்லோரும் ஒரே நேரத்தில் பேசி விட்டுக் கலைந்தனர்.
கேட்பதை விடப் பேசுவதிலேயே ஆர்வமாக இருந்தார்கள் அனைவரும்.
யதேச்சையாக உங்கள் பக்கத்தில் உட்கார்ந்தவரை மட்டும் நீங்கள் அடையாளம் தெரிந்து கொள்ளலாம்.
எழுத்துக்கள் மனிதர்களின் முகங்களை மாற்றும் மிகப் பெரிய ஒப்பனை என்ற எனது கருத்து மீண்டும் மீண்டும் உறுதிப் பட்டது.
மற்ற ஊர்களைப் பற்றி எனக்குத் தெரியாது.
ஐயா
முற்றிலும் உண்மை
இன்று நான் பார்த்தவரையில் பதிவர்களிடம் இருப்பது
அகங்காரம்.தற்ப்பெருமை,என் தளத்தை பற்றி யூத் பூல் விகடனில் பார்.நான் பார் விஜயகாந்தை ,விஜயை,விஷாலை ,கஞ்சா கருப்பை பற்றி புத்தகம் எழுதியுள்ளேன்.நான் என் தளத்தில் 12 லட்சம் ஹிட்களை கொடுத்துள்ளேன்.(ஐயா இது சாத்தியமா?)ஒரு நாளைக்கு 1000 பேர் பார்த்தாலும் கூட அது சாத்தியமா?
இதை விட கொடுமை எழுத்தாளர் ஒருவரை சக பதிவர் ஒருவர் போனிலோ மெயிலிலோ அழைக்க கூடாதாம்.அவர் கேட்கிறார் ,ரஜினியும் வந்தால் தான் இவர் வருவாராம்.அப்போது தான் இவருக்கு கவுரதியாம்.
இந்த படாடோப உலகில் எளிமையானவர்கள் பாடு திண்டாட்டமே.
நிறைய உள்ளூர் பதிவர்கள் அயல்நாட்டில் பஞ்சம் பிழைக்க போன பதிவர்களைப் பார்த்து ஒத்தா,ஒம்மா என்று சாடுவதைப் பார்க்க முடிகிறது.இவர்கள் எல்லாம் முதலில் "MATURITY" அடைய வேண்டும்.நான் பத்து வருடங்கள் இந்தியாவில் வேலை பார்த்து விட்டே இங்கு வந்தேன்.இந்த மண்ணில் விதைத்தது என் உழைப்பு.பலனோ பத்து மடங்கு.
உங்கள் மோசமான பதிவர் சந்திப்பு அனுபவத்துக்கு வருத்தங்கள்,பகிர்வுக்கு நன்றி.
Post a Comment
வலை நண்பர்களே சான்றோர்களே சொன்னது பிடித்தால் ஓட்டு & கருத்து போட்டு ஊக்கம் கொடுங்கள்.
Subscribe to Post Comments [Atom]
<< Home