"Downtown Burj Dubai"
துபாயின் இரண்டு சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட "Downtown Burj Dubai" என்னும் ஒருங்கிணைந்த கட்டுமானங்கள் ,உலகின் மிக உயரமான கட்டிடம் புர்ஜ் டவர்,தி அட்ரஸ் ஹோட்டேல் ,உலகின் பெரிய துபாய் மால் ,புர்ஜ்ஓல்டு டவுன் ,மற்றும் நடன நீரூற்றுகள்,அழகிய செயற்கை ஏரி என பூலோக சொர்கமாக காட்சி தருகின்றது. ஒரு கார் மட்டும் இருந்தால் போதும் காலையில் இந்த துபாய் மாலுக்குள் நுழைந்தால் இரவு பனிரெண்டு மணி வரை சுற்ற விஷயம் இருக்கிறது. கார் பார்க்கிங் இலவசம்,அதுவும் எக்கச்சக்கமாக கிடைக்கிறது. வீட்டில் அனைவரும் கண்டு வியக்க உலகின் பெரிய அக்வாரியம் ரொம்ப ரொம்ப பெரிசு,உள்ளே திமிங்கிலம் முதல் கடல் பசு,நீர் நாய் என அனைத்து கடல் வாழ் உயிரினமும் காணலாம்.வெளியே இருந்து காண இலவசம். உள்ளே செல்ல ஒருவருக்கு 50 திர்காம்கள்.(WORTHTH IT ) வெளியே இருந்து பார்க்கையிலேயே அவ்வளவு ஆனந்தம் பொங்குகிறது.உள்ளே இருக்கும் "அண்டர் வாட்டர்"ZOO விற்கு சென்றால் அபார ஆனந்தம்.கொடுத்து வைத்தவர்கள் ஆகின்றோம். கண்ணாடி கணம் மட்டும் 2 அடியாம் ,இவ்வளவு பெரிய கண்ணாடியை எப்படி இணைத்தார்கள்?ஒரு தடயமும் இல்லை. எங்கு பார்த்தாலும் வியப்பு தான்.உலகின் மிகப்பெரிய "lcd" டிவி திரை ,மிக பிரம்மாண்டம். அப்புறம் ஐஸ் ரிங்க் ,இதுவும் உலகின் மிகப்பெரிய ஐஸ் ஸ்கேடிங் செய்யும் மைதானம். யார் வேண்டுமானாலும் போய் சறுக்கி பழகலாம். முதலில் 15 நிமிடம் பயிற்சி மட்டும் தேவை,அதற்க்கு என்று தனி "TRACK" உண்டு. அதற்க்கு உரிய உபகரணங்கள் நுழைவாயிலிலேயே தருகின்றனர்.ஒரு மணி நேரம் விளையாட 50 திர்காம்கள்.(WORTHTH IT ) அப்படி விளையாட பயமாக உள்ளதா?சும்மா வேடிக்கை பாருங்கள் ,நினைத்து பாருங்கள் . சுமார் முன்னூறு பேர் சறுக்கி விளையாடும் ஒரு ஐஸ் மைதானம்.குளு குளு காட்சிகள் என.நகரவே மனமிருக்காது.பார்வையாளர் அரங்கமும் உண்டு. அப்புறம் நான் நுழைவாயிலிலேயே ரொம்ப ரசித்து பார்த்தது அந்த "INDOOR FOUNTAIN" தான் சுமார் இருநூறு அடி உயரத்திலிருந்து நீர் கொட்டுகிறது.அதில் நிர்மாணிக்கப்பட்ட கைகளை விரித்த ஆண்களின் தலைகீழாக குதிக்கும் மெட்டாலிக் பொம்மைகள் ,எப்படி பொருத்தியிருக்கிறார்கள் என்று பார்த்தால்? ஆண் குறியை அந்த நீர் விழும் பள்ளத்தாக்கு பகுதியில் பொருத்திவிட்டனர்.என்ன ஒரு கலை?கற்பனை. இதையெல்லாம் எழுத ஒரு கட்டுரை போதாது. அப்படியே பின்னால் சென்று செயற்கை ஏரிக்கு சென்றால்.புர்ஜ் டவரின் கம்பீரம் ,இந்த பக்கம் பார்த்தால் தி அட்ரெஸ் ஹோடெலின் கொள்ளை அழகு. அப்படியே அங்கு அமர்ந்து ஒவ்வொரு வினாடிக்கும் மாறி மாறி வளைந்து நெளிந்து காற்றில் கோலம் போட்டு.பாய்ந்து,துள்ளும் அந்த நீர் ஊற்றுக்கள் . இந்த வெயில் காலத்திலும் அவ்வளவு கூடம் வருகிறது.வர்ணஜாலம் காட்டுகிறார்கள் (மாலை ஆறு மணிக்கு ஆரம்பித்து இரவு பனிரண்டு மணிக்கு முடிகிறது) நல்ல காமிரா கொண்டு போகவும். அப்புறம் வருந்துவீர்கள். நான் அந்த கடைகளை பற்றியெல்லாம் சொல்வது அவசியமில்லை.ஏனென்றால் துபாய் என்றாலே ஷாப்பிங் தான் .அது பாட்டுக்கு ஆயிரம் கடைகள் உள்ளது.எவ்வளவு உணவகங்கள்?நகைகடைகள், சம்மர் ஷாபிங் (25 சதம் தள்ளுபடி)செய்யும் மக்கள் ஆர்வமாக செலவு செய்வதை பார்க்க முடிகிறது. எல்லாமே பார்க்க இலவசமே. நான் "DEISEL" என்னும் ஷோரூமின் வித்தியாசமான வடிவமைப்பை (பழைய தேய்ந்து போன டையரை குவித்திருந்தனர்-டயர் தேயுமாம்,வீணாகுமாம் ,அனால் இவர்கள் ஜீன்ஸ் அப்படி உழைக்குமாம்) உள்ளே சென்று ஒரு ஜீன்ஸ் பேண்டின் விலை பார்த்தேன் 2000 திர்காம் என போட்டிருந்தது. எனக்கு தலையே சுற்றியது(26000 ரூபாய்கள்)எழுத்தாளர் சாரு நிவேதிதா கூட அவ்வளவு கொடுத்து வாங்குவாரா ? என சந்தேகமே.நம்மூரில் அந்த பிராண்டை சீனாக்காரர்கள் காப்பி அடித்து தெருவில் தொப்பிகளாய்,வாட்சுகளாய்,செண்டு ,சட்டை ,டெனிம் ,ஸ்கூல் பேக்,கண்ணாடிகள் என 80 மடங்கு விலை குறைத்து உலகமயமாக்கம் செய்ததை எண்ணி புளங்காகிதம் அடைந்தேன். இன்னும் தொடரும்.
Labels: "Downtown Burj Dubai"
2 Comments:
சொர்கம் மாதிரி இருக்குங்க.. நீங்க குடுத்து வெச்சவங்க
ஒரு சின்ன யோசனை. உங்க பதிவை, சிறு சிறு பத்தி (para) வாக பிரித்தால், படிக்க இன்னம் வசதியாக இருக்கும்.
Post a Comment
வலை நண்பர்களே சான்றோர்களே சொன்னது பிடித்தால் ஓட்டு & கருத்து போட்டு ஊக்கம் கொடுங்கள்.
Subscribe to Post Comments [Atom]
<< Home