Saturday, July 25, 2009

உலகில் மக்கள் சந்தோஷமாக வாழத் தகுந்த 10 நாடுகள்

லகில் மக்கள் சந்தோஷமாக, நீண்ட ஆயுளுடன் வாழ ஏற்ற நாடு எது? இதைக் கண்டுபிடிக்க சந்தோஷமான பூமி என ஒரு புதிய பட்டியலைத் தயாரித்துள்ளனர். அதன்படி 143 நாடுகளைப் பட்டியலிட்டு அதில் மக்கள் சந்தோஷமாக வாழத் தகுந்த நாடு என சிலவற்றைப் பரிந்துரைத்துள்ளனர்.

1. கோஸ்டா ரிகா

இங்குதான் மக்கள் அதிகபட்ச சந்தோஷம், நிமதியான வாழ்க்கை மற்றும் அதிக ஆயுளுடன் வசிப்பதாக புதிய ஆய்வுகள் கூறுகின்றன. அமெரிக்க கண்டத்தில் அமைந்துள்ள இதன் தலைநகர் சான் ஜோஸ்.


2. டொமினிக்கன் குடியரசு

உலகில் மக்கள் அதிக சந்தோஷத்துடன் வாழும் இரண்டாவது நாடு டொமினிக்கன் குடியரசு. கரீபிய தீவுக்கூட்டங்களைச் சேர்ந்தது. தலைநகர் சாண்டோ டொமினிகா.


3.ஜமைக்கா

இன்னமும் பிரிட்டிஷ் அரசியின் தலமையில் இயங்கும் நாடுகளில் ஒன்று ஜமைக்கா. உலகில் அமெரிக்கா, கனடாவுக்கு அடுத்து ஆங்கிலம் பேசும் மக்கள் அதிகம் உள்ள நாடு. மக்கள் மிகுந்த சந்தோஷமாகவும், பிரச்சினைகள் பெரிதாக இல்லாமலும் வாழ்கிறார்களாம். தலைநகர் கிங்ஸ்டன். பொழுதுபோக்கு, பீன்பிடிப்பது, குடிப்பது, கிரிக்கெட் பார்ப்பது!


4.கவுதிமாலா

இது ஒரு மத்திய அமெரிக்க நாடு. தலைநகர் கவுதிமாலா சிட்டியைத் தவிர, பிற பகுதிகளில் பெரிதாக போக்குவரத்து வசதிகள் கூட கிடையாது. ஆனால் மக்கள் நீண்ட ஆயுள் மற்றும் நிம்மதியுடன் வாழ்கிறார்களாம்.


5.வியட்நாம்

உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட 13 வது நாடு. ஆசியாவின் முக்கிய நாடுகளுள் ஒன்று. பெயரளவுக்கு கம்யூனிஸ நாடாக இருந்தாலும், இன்றைக்கு ஆசிய அளவில் திறந்தவெளிச் சந்தைக் கொள்கையை கடைப்பிடிக்கும் நாடு இதுதான்.

விவசாயம்தான் மெயின்... அதனால் நல்ல சாப்பாடு, தரமான உணவுப்பொருட்கள், நிமதியான வாழ்க்கை என மக்கள் நிதானத்துடன் இருக்கிறாகள்.


6. கொலம்பியா

லத்தீன் அமெரிக்க நாடுகளுள் ஒன்று. கொலம்பஸ் கண்டுபிடித்த நாடுகளில் ஒன்றான இங்கு சர்வதேச சந்தைப் பொருளாதாரம் எவ்வளவுதான் சுரண்டினாலும், நிம்மதியும் சந்தோஷமும் இன்னும் மக்களை விட்டுப் போகவில்லையாம். இதன் தலைநகர் பகோடா.


7.க்யூபா

உண்மையிலேயே உலகை ஆச்சரியப்பட வைத்துள்ள நாடு இது. எத்தனையோ சிக்கல்கள், தடைகள் இருந்தாலும், முன்பு புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோ, இப்போது அவர் தம்பி ரவுல் காஸ்ட்ரோ தலைமையில் வெற்றிநடைபோடும் நாடு இது.

இந்நாட்டு மக்களின் சராசரி வயது 78.3 ஆண்டுகள். உலகிலேயே அருமையான மருத்துவ வசதிகள் நிறைந்த நாடு. தலைநகர் ஹவானா.



8. எல் சால்வடார்

மத்திய அமெரிக்காவில் உள்ள இந்த நாடு, அப்பகுதியின் மிகப்பெரிய பொருளாதார சக்திகளுள் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

நிச்சயம் இந்நாட்டு மக்கள் நிம்மதியாகத்தான் இருப்பார்கள். காரணம் உலகிலேயே அதிக வரிகள் இல்லாத ஒரே நாடு எல் சால்வடார்தான். தலை நகர் சான் சால்வடார்.


9. பிரேஸில்

ஜி 20 அமைப்பின் முக்கிய அங்கம். உலகின் பெரிய நாடுகளுள் ஒன்று. எல்லா வளங்களும் நிறைந்த மிகச் சிறந்த நாடான பிரேஸில், உலக அளவில் 10வது சக்தி வாய்ந்த பொருளாதாரமாகத் திகழ்கிறது. தலைநகர்: ரியோடி ஜெனிரோ

10. ஹோண்டுராஸ்

மத்திய அமெரிக்காவைச் சேர்ந்த நாடுதான் இதுவும். நாளுக்கு நாள் இதன் பொருளாதாரம் வளர்ந்து வருகிறது. பேராசை கொள்ளாத, குற்றங்கள் செய்யாத மக்கள் என்பதால் இந்த டாப் டென்னில் அமெரிக்காவுக்குக் கூட கிடைக்காத இடம் ஹோண்டுராஜுக்குக் கிடைத்துள்ளது. தலைநகர்: டெகுசிகல்பா


இந்த முதல் பத்து சந்தோஷமான, நிம்மதியான நாடுகள் பட்டியலில் இந்தியாவோ உலக வல்லரசுகள் எனப்படும் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனாவோ இல்லை!.

/world

Costa Rica tops list of 'happiest' nations

  • Story Highlights
  • Costa Rica beats out Dominican Republic as "happiest" place in world
  • Independent British group claims Costa Ricans have world's highest life satisfaction
  • Central American nation also praised for its environmental efforts
July 5, 2009 -- Updated 1256 GMT (2056 HKT)

(CNN) -- Forget Disneyland! Costa Rica is the happiest place in the world, according to an independent research group in Britain with the goal of building a new economy, "centered on people and the environment."

Costa Rica is known for its lush rain forests and pristine beaches.

Costa Rica is known for its lush rain forests and pristine beaches.

In a report released Saturday, the group ranks nations using the "Happy Planet Index," which seeks countries with the most content people.

In addition to happiness, the index by the New Economics Foundation considers the ecological footprint and life expectancy of countries.

"Costa Ricans report the highest life satisfaction in the world and have the second-highest average life expectancy of the new world (second to Canada)," the organization said in a statement.

They "also have an ecological footprint that means that the country only narrowly fails to achieve the goal of ... consuming its fair share of the Earth's natural resources."

The Central American country, tucked between Nicaragua and Panama, touts its lush rain forests and pristine beaches. Its president, Oscar Arias Sanchez, won the Nobel Peace Prize in 1987 for trying to help end civil wars in several Central American countries.

This year's survey, which looked at 143 countries, featured Latin American nations in nine of the Top 10 spots.


The runner-up was the Dominican Republic, followed by Jamaica, Guatemala and Vietnam.

Most developed nations lagged in the study.

While Britain ranked 74th, the United States snagged the 114th spot, because of its hefty consumption and massive ecological footprint.

The United States was greener and happier 20 years ago than it is today, the report said.

Other populous nations, such as China and India, had a lower index brought on by their vigorous pursuit of growth-based models, the survey suggested.

"As the world faces the triple crunch of deep financial crisis, accelerating climate change and the looming peak in oil production, we desperately need a new compass to guide us," said Nic Marks, founder of the foundation's center for well-being.

Marks urged nations to make a collective global change before "our high-consuming lifestyles plunge us into the chaos of irreversible climate change."

The report, which was first conducted in 2006, covers 99 percent of the world population, the statement said

Labels:

8 Comments:

Blogger ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் said...

நல்லப் பதிவு நண்பரே.ஆனால் இந்த கருத்துக் கணிப்பை நடத்தியது யார் என்று சொல்லவேஇல்லை. எதற்குக் கேட்கிறேன் என்றால் கொலம்பியாவை எல்லாம் செர்த்துள்ளார்களே, அதனால் தான். உலகின் பாதி போதை வஸ்து அங்கிருந்து தான் சப்ளை ஆகிறதாம். தடி எடுத்தவனெல்லாம் தாதாவாம் அங்கே. கொலை கொள்ளை சர்வ சாதாரணம் என்று சொல்லப் படுகிறது.அனைவரும் துப்பாக்கி வைத்திருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. அதனால் தான் ரொம்ப நல்ல ஊர் என்று சொல்லுகிறார்களோ?வியட்னாம் மற்றும் கம்போடியாவில் அவர்கள் அனுபவித்த போர் தாகதிலிருந்து இன்னும் விடுபடவில்லை என்றும் கூறப் படுகிறது. ஒரு வேளை நான் சொல்வது தவறாக இருந்தால், தெரிந்தவர்கள் கொஞ்சம் விளக்குங்களேன்.ப்ளீஸ்.

July 25, 2009 at 8:24 PM  
Blogger கும்மாச்சி said...

நல்ல தொகுப்பு கார்த்தி. பிரேசில் அருமையான இடம், என்னை விட்டால், கோஸ்டாரிக்கா, பிரேசில், ஜமைகா போன்ற இடங்களுக்கு விடுமுறைக்கு செல்வேன். ஜமைகாதான் "ரம்" சரக்கு அடிக்க சிறந்த இடமாம்.

July 25, 2009 at 9:00 PM  
Blogger geethappriyan said...

நண்பர் தமிழ்நாட்டுத்தமிழன்.
முதல் வருகைக்கும் அற்புதமான வினாவுக்கும் நன்றி
உங்கள் வருத்தம் தான் எனக்கும் ஆயினும் அரசியல் என்பது எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்துள்ளதே?
அதன் விளைவு தான்.இந்த முடிவுகள்
இந்த cnn அளித்த கட்டுரையை படியுங்கள் .
http://edition.cnn.com/2009/WORLD/americas/07/05/costa.rica.happy.nation/
சில சமயங்களில் நாம் நினைப்பதற்கு மாறாக தான் நடக்கும்.

July 26, 2009 at 12:23 AM  
Blogger geethappriyan said...

நண்பர் கும்மாச்சி
உங்கள் வலையில் என் பின்னூடங்களை பார்த்தீர்கள் தானே?
தொடர்ந்த ஆதரவிற்கு நன்றி.
உங்கள் வலைப்பூவிற்கு சென்றேன்

July 26, 2009 at 12:26 AM  
Blogger vanathy said...

Nowadays I am sceptical about these serveys.I am sure most of the countries you listed here are nice conutries.However don't you think it is a bit unusual, majority of these countries are either latin American countries or caribbean countries?

Recently there have been all sort of surveys.you have to take the results with a pinch of salt.

I read a survey saying that Deepika Padugone is the most beautiful woman (or it could most sexiest) in the world or something like that.
I agree like many Indian acteresses she is also one of the pretty actresses,nothing more nothing less ,but I doubt that every one in the world from Alaska to Newzeland are saying that she is the most beautiful woman in the world.

I think south asian people take these polls so seriously and flock to the websites with their votes , invariably Indian actors and actresses get the top votes in these type of surveys
thank god ,chinese people don't take these polls seriously ,otherwise they will top all the polls as there are more chinese than indians .

--vanathy

July 26, 2009 at 12:13 PM  
Blogger geethappriyan said...

Hi vanathy ,
THANKS FOR YOUR VALAUABLE COMMENTS AND VISIT.
IHAVE THE SAME OPENION OF YOU REGARD THESE KIND OF POLLS.
IT SEEMS POLITICS PLAYING MAJOR ROLL EVERYWHERE.
WE CANT CHANGE SOME THINGS.

//thank god ,chinese people don't take these polls seriously ,otherwise they will top all the polls as there are more chinese than indians .//

ITS A VERY GOOD ONE.

July 26, 2009 at 1:18 PM  
Blogger பின்னோக்கி said...

என்னங்க இந்தியாவ காணோம் இந்த லிஸ்ட்ல ( நான் ரொம்ப அப்பாவின்னு இப்ப உங்களுக்கு புரிஞ்சிருக்குமே ? :-) )

September 16, 2009 at 9:30 AM  
Blogger ஜோதிஜி said...

வீட்டுக்கு வரும் கண் தெரியாத பெண்மணி கொண்டு வரும் அறிவுக்களஞ்சியம் புத்தகத்தை இனிமேல் வாங்கும் எண்ணம் இல்லை. இந்த நாட்டு பட்டியலில் தமிழ்நாட்டில் இலவச தொலைக்காட்சி நுழையாத பழங்குடியினர் வாழும் கிராமத்தையும் சேர்த்துக்கொள்ளுங்கள் கார்த்திகேயன்.

November 5, 2009 at 8:50 AM  

Post a Comment

வலை நண்பர்களே சான்றோர்களே சொன்னது பிடித்தால் ஓட்டு & கருத்து போட்டு ஊக்கம் கொடுங்கள்.

Subscribe to Post Comments [Atom]

<< Home