ஐக்கிய அரபு நாட்டில் ஒன்றான அபுதாபியில் 221வது பிரதோஷ பூஜை
அபுதாபியில் 221வது பிரதோஷ பூஜை செய்தி நன்றி :-தினமலர் ஜூன் 25,2009,13:03 IST |
அபுதாபி: அபுதாபியில் பிரதோஷக் குழுவினரால் 221வது பிரதோஷ பூஜை வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இது சனிப்பிரதோஷம் என்பது இப்பூஜைக்கு கூடுதல் சிறப்பைத் தந்தது. கணபதி பூஜையுடன் துவங்கிய இந்நிகழ்ச்சியில் பூர்வங்க பூஜை, கும்ப ஆவாகணம், மகன்யாச ஜபம், ஸ்ரீ ருத்ர அபிஷேகம், நந்தி அஷ்டோத்திரம், சிவ அஷ்டோத்திரம் ஆகியன நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிவ பெருமானுக்கு நல்லெண்ணை, பஞ்சவ்யம், பஞ்சாமிர்தம், நெய், பால், தயிர், தேன், கரும்புச்சாறு, இளநீர், எலுமிச்சை சாறு, சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. இப்பூஜைகள் அனைத்தும் வேத அமைப்பைச் சேர்ந்த குமார் என்பவரால் நடத்தி வைக்கப்பட்டது. இந்த சிறப்பு மிகுந்த சனிப் பிரதோஷத்தில் நந்திகேஸ்வரருக்கு நந்திகேஸ்வர அஷ்டோத்திரம் பாராயணம் செய்யப்பட்டது. மேலும் சிவபெருமானுக்கு பொங்கல், காப்பரிசி, தேங்காய் சாதம், தயிர் சாதம், வடை, சுண்டல், பஞ்சாமிர்தம் ஆகியன நைவேத்தியம் செய்யப்பட்டு, பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் விநியோகிக்கப்பட்டது. தொடர்ந்து நடத்தப்பட்டு வரம் இந்த பிரதோஷ பூஜையில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Labels: ஐக்கிய அரபு நாட்டில் ஒன்றான அபுதாபியில் 221வது பிரதோஷ பூஜை
4 Comments:
அன்புள்ள கார்த்திக் சார் அவர்களுக்கு அபுதாபியில் கோவில்கள் உண்டா?நான் துபாயில் இருந்த வரை கோவிலுக்கு போனேன்,அபுதாபி வந்து ஒரு வருடம் ஆகிறது.கோவில் எங்கே உள்ளது என தெரியவில்லை.எங்கே உள்ளது என்று தெரிந்தால் சொல்லுங்கள் எனக்கு உதவியாக இருக்கும்,நன்றி அன்புடன்
தேவி

அன்புள்ள ரேணுகாதேவி அவர்களுக்கு,
அபுதாபியில் ஹரே க்ரிஷ்னா இயக்கமான இஸ்கான் உள்ளது.அவர்கள் வெள்ளி மற்றும் விஷேஷ தினங்களில் சிறப்பு பூஜைகள் செய்கிறார்கள்
தொடர்புக்கு
Rasamrita Prabhu - 0507010185
தாமதத்திற்கு மன்னிக்கவும்
Post a Comment
வலை நண்பர்களே சான்றோர்களே சொன்னது பிடித்தால் ஓட்டு & கருத்து போட்டு ஊக்கம் கொடுங்கள்.
Subscribe to Post Comments [Atom]
<< Home