Friday, February 27, 2009

கல்லுக்குள் ஈரம் படத்தில் இருந்து சிறு பொன்மணி அசையும்,. பாடல்


இளையராஜாவின் இசையில் ,குரலில் கல்லுக்குள் ஈரம் படத்தில் இருந்து இப்பாடல் ஒரு காலத்தால் அழியாப் படைப்பு.
இந்த பாடலை திறமையான இளம் இயக்குனர் M.சசிகுமார் சுப்ரமணியபுரம் படத்தில் அருமையாக பயன் படுத்தி இருப்பார் ,படத்தின் வெற்றிக்கு இதுவும் ஒரு காரணி .
பாடல் ஆசிரியர் :- கங்கை அமரன்

பெண்(s.ஜானகி ):-சிறு பொன் மணி அசையும்,அதில் தெறிக்கும் புது இசையும்,
இரு கண்மணி பொன் இமைகளீல் தாள லயம்,
பெண்:-சிறு பொன்மணிஅசையும்,அதில் தெறிக்கும் புது இசையும்,
இரு கண்மணி பொன் இமைகளீல் தாள லயம், நிதமும்,தொடரும்,கனவும்,நினைவும் இது மாறாது, ராகம்,தாளம்,பாவம்,போல,நானும் நீயும் சேர வேண்டும்.
ஆண்:-சிறு பொன்மணி அசையும்,அதில் தெறிக்கும் புது இசையும்,
இரு கண்மணி பொன் இமைகளீல் தாள லயம்,
பெண்:-விழியில் சுகம் பொழியும்,இதழ் மொழியில் சுவை வழியும்.
எழுதும் வரை எழுதும் இனி புலரும் பொழுதும்,
பெண்:-விழியில் சுகம் பொழியும்,இதழ் மொழியில் சுவை வழியும்.
எழுதும் வரை எழுதும் இனி புலரும் பொழுதும்,
ஆண்:- தெளியாதது எண்ணம்,கலையாதது வண்ணம்,
தெளியாதது எண்ணம்,கலையாதது வண்ணம், அழியாதது,அடங்காதது,அணைமீறிடும் உள்ளம்,
பெண்:-வழி தேடுது ,விழி வாடுது,கிளி பாடுது, உன் நினைவினில்.
ஆண்:-சிறு பொன்மணி அசையும்,அதில் தெறிக்கும் புது இசையும்,
பெண்:-இரு கண்மணி பொன் இமைகளீல் தாள லயம்,
ஆண்:-நதியும் முழு மதியும் ,இரு இதயம் தனில் பதியும்,
ரதியும் அதன் பதியும் பெறும் சுகமே உதயம்,
ஆண்:-நதியும் முழு மதியும் ,இரு இதயம் தனில் பதியும்,
ரதியும் அதன் பதியும் பெறும் சுகமே உதயம்,
பெண்:-விதை ஊன்றிய நெஞ்சம். விளைவானது மஞ்சம்.
பெண்:-விதை ஊன்றிய நெஞ்சம். விளைவானது மஞ்சம்.
கதை பேசுது,கவி பாடுது, கலந்தால் சுகம் மிஞ்சும்,
ஆண்:-உயிர் உன் வசம்,உடல் என் வசம், பயிரானது உன் நினைவுகள்.
பெண்:-சிறு பொன்மணி அசையும்,அதில் தெறிக்கும் புது இசையும்,
ஆண்:-இரு கண்மணி பொன் இமைகளீல் தாள லயம், பெண்:-நிதமும்,தொடரும்,கனவும்,நினைவும் இது மாறாது, ஆண்:-ராகம்,தாளம்,பாவம்,போல,நானும் நீயும் சேர வேண்டும்.
பெண்:-சிறு பொன்மணி அசையும்,அதில் தெறிக்கும் புது இசையும்,
ஆண்:-இரு கண்மணி பொன் இமைகளீல் தாள லயம்,


SJ: SIRU PONMANI ASAYUM
ATHIL THERIKKUM PUTHU ISAYUM
IRU KANMANI PON IMAIGALIL THAALALAYAM

SIRU PONMANI ASAYUM
ATHIL THERIKKUM PUTHU ISAYUM
IRU KANMANI PON IMAIGALIL THAALALAYAM
NITHAMUM THODARUM KANAVUM ITHU MAARATHU
RAGA THALAM BAAVAM POLA NAANUM NEEYUM SERA VENDUM

IR: SIRU PONMANI ASAYUM
ATHIL THERIKKUM PUTHU ISAYUM
IRU KANMANI PON IMAIGALIL THAALALAYAM

SJ: VIZHIYIN SUGAM POZHIYUM
ITHAL VAZHIYIL SUVAI VAZHIYUM
EZHUTHUM VARAI EZHUTHUM
INI PULARUM POZHUTHUM

IR: THELIYATHATHU ENNAM
KALAIYAATHATHU VANNAM
THELIYATHATHU ENNAM
KALAIYAATHATHU VANNAM
AZHIYATHATHU ADANGATHATHU
ANAI MEERIDUM ULLAM

SJ:VAZHI THEDUTHU VIZHI VAADUTHU
KILI PAADUTHU UN NINAIVINIL
SIRU PONMANI ASAYUM
ATHIL THERIKKUM PUTHU ISAYUM
IRU KANMANI PON IMAIGALIL THAALALAYAM



SJ: NATHIYUM MUZHU MATHIYUM
IRU ITHAYAM THANIL PATHIYUM
RATHIYUM ATHAN PRATHIYUM
PERUM SUGAME UDHAYAM
NATHIYUM MUZHU MATHIYUM
IRU ITHAYAM THANIL PATHIYUM
RATHIYUM ATHAN PRATHIYUM
PERUM SUGAME UDHAYAM

VIDHAI OONRIYA NENJAM
VILAIVANATHU MANJAM
KATHAI PESUTHU KAVI PAADUTHU
KALANTHAAL SUGAM MINJUM


IR: UYIR UN VASAM UDAL EN VASAM
PAYIRAANATHU UN NINAIVUGAL

SJ: SIRU PONMANI ASAYUM
ATHIL THERIKKUM PUTHU ISAYUM

IR: IRU KANMANI PON IMAIGALIL THAALALAYAM

SJ: NITHAMUM THODARUM KANAVUM
NINAIVUM ITHU MAARATHU

IR: RAGA THALAM BAAVAM POLA
NAANUM NEEYUM SERA VENDUM

SIRU PONMANI ASAYUM
ATHIL THERIKKUM PUTHU ISAYUM
IRU KANMANI PON IMAIGALIL THAALALAYAM

The orchestration is simply beyond belief. The ripples that the flute and the orchestration in general and the flute in particular creates in the listener’s ears is simply beyond what any pen could describe, nor any tongue explain! I could even see the audience swaying from side to side while the song was sung by the local artistes. It simply uplifts one’s soul from one plane to another. All along Raja was excelling in folk tunes. He had proven that he was capable of singing romantic songs with great feelings. His choice of S. Janaki to join him was the best decision that he had made. She adds value and feelings to the song. I believe the Raaga Sudda Dhanyaasi is also a good choice.
Raja had proven a point that he could simply excel in love duets as well

Labels:

Sunday, February 22, 2009

அருமை நண்பர் சுந்தர பாண்டியன் அவர்களுக்கு அமீரகம் வாழ் நண்பர்களின் இதயம் கனிந்த திருமண நல்வாழ்த்துக்கள்


திருமண வாழ்த்து...
கடவுள் வணக்கம்
உலகம் முழுவதும் உன்னில்
அடக்கம்
சிலம்பா முருகா சிவப்பா –
குலம்போற்ற
நண்பன் மணம்செய்ய நானும்
கவிபாட
தண்டாயு தாவருள் தா.

தாய் வணக்கம்
விண்ணவன் பொய்த்தாலும்
வேளை எதிர்த்தாலும்
எண்ணும் எதுவும் எளிதாகும்
- உண்மைகேள்
மன்னனோ மந்தியோ மாந்தர்
அனைவர்க்கும்
அன்னை அருள்வேண்டும் ஆம்.

தமிழ் வணக்கம்
பொதிகை மலைதோன்றி
பார்புகழ்ந்து போற்றி
துதிக்கும் படிவளர்ந்த
தமிழே – மதுரமாய்
நண்பன் புகழ்பாட நானும்
தொடங்கினேன்
வண்டமிழை வாரி வழங்கு.

சபை வணக்கம்
சந்தத் தமிழின்
சிறப்புரைக்கும்
பற்பலரும்
சந்த முரைப்பர் சிறப்பொடு
- சிந்தைக்குச்
சந்த மளித்துச்
சிறப்புறும் ஈதெலாம்
சந்த வசந்தச் சிறப்பு.

அவை அடக்கம்
சிலரை வணங்கிச் சிலரை
வாழ்த்தினேன்
புலனுடைக் குழுவில்
பணிந்து – புலவீர்
எந்தன் பிழைபொறுத்து ஏற்ற
வழிசொல்லி
தந்தருள வேண்டும் திரம்.

நூல் வரலாறு
ஆற்ற லுடையவன் அன்பன்
அறிவுடையோர்
போற்று மொருநண்பர்
சுந்தர பாண்டியன் - தேற்றமிகு
கட்டிடக்கலை வித்தகராம்
அண்ணியார்-சூரிய சுகன்யாவும்
மென்பொருளில் வித்தகராம்
பற்றிய கரங்கள் இனிது நிலைத்திருக்க
மதுரை மீனாட்சியை வேண்டுகிறேன்...
பார் போற்ற நடை போட பராசக்தியை வேண்டுகிறேன்...
சந்தானம் சிறக்க சந்தானலட்சுமியை வேண்டுகிறேன்...
க்ரஹம் சிறக்க க்ரஹலட்சுமியை வேண்டுகிறேன்...
ஐஸ்வர்யம் சிறக்க ஐஸ்வர்யலட்சுமியை வேண்டுகிறேன்...

மன்னும் அவர்பெருமை
என்பாவில் சொன்னேனாம்
இன்று.

மதுரையின் சிறப்பு
வைகைக் கரையில் வளமான
மாநகரின்
துங்க முரைப்பது எளிதாமோ -
தங்கம்போல்
மங்காத வாழ்வளிக்கும்
மண்ணோர்க்கு குன்றாது
மதுரை மீனாட்சியின் சிறப்பு...

Labels:

Tuesday, February 17, 2009

ஆண்டாள் அருளிய திருப்பாவை


ஸ்ரீவைஷ்ணவ தர்சனத்தில், ஆழ்வார்கள் உயர்ந்த ஸ்தானத்தை உடையவர்கள். அந்த ஆழ்வார்களின் கூட்டத்தில், பாண்டிய ராஜ சபையில் பர தத்துவம் ஸ்ரீமன் நாராயணனே என்று உலகு உய்ய நிர்ணயம் செய்து, பின் அந்த பரவாசுதேவனான கண்ணனுக்கே தம் அன்பால் கண்ணேறு கழித்த பெரியாழ்வார் மிக உயர்ந்தவர். அப்படிப்பட்ட பெரியாழ்வாரையும் விஞ்சி அந்த பரம்பொருளுக்கே வாழ்க்கைப்பட்ட ஆண்டாள், விஷ்ணு பக்தியின் சிகரமாக விளங்குகிறாள்.

ஆசார்ய வந்தனம்


லக்ஷ்மீ நாத சமாரம்பாம் நாத யாமுன மத்யமாம் |
அச்மதாசார்யா பர்யந்தாம் வந்தே குருபரம்பராம் ||

யோநித்யமச்சுதபதாம்புஜ யுக்ம ருக்ம
வ்யமோஹதஸ்தத் இதராணி த்ருணாய மேனே |
அஸ்மத் குரோ: பகவதோஸ்ய தயைக சிந்தோ
ராமானுஜஸ்ய சரணௌ சரணம் பரபத்யே ||

ஸ்ரீமான் வேங்கட நாதார்ய கவிதார்கிக கேசரி |
வேதாந்தாசார்ய வர்யோமே சந்நிதத்தாம் சதாஹ்ருதி ||

ஆண்டாளின் தோற்றம்

ஸித்தானாம் சரதாம் கலாவபகமே வர்ஷே நளாக்யே ரவெள
யாதே கர்க்கடகம் விதாவுபசிதே ஷஷ்டேஹநி ஸ்ரீமதி |
நக்ஷத்ரேர்யமதைவதே க்ஷிதிபுவோ வாரே சதுர்த்யாம் திதெள
கோதா ப்ராதுரபூதசிந்த்யமஹிமா ஸ்ரீவிஷ்ணு சித்தாத்மஜா ||

கலி பிறந்து தொண்ணூற்றேழு ஆண்டுகளுக்கு பிறகு (கடபயாதி சங்க்யை படி ஸித்த என்ற வார்த்தையை தொண்ணுற்று ஏழு என்று கொள்வர்) ஒரு நள வருஷத்தில், சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கும்போது, சுக்ல பக்ஷ சதுர்த்தியில், ஆடிமாதம் ஆறாம் தேதி செவ்வாய் கிழமையன்று, அர்யமா என்னும் தேவனுக்குரிய பூர நக்ஷத்திரம் கூடிய சுப தினத்தில், ஸ்ரீவிஷ்ணு சித்தருடைய பெண்ணாக கோதை அவதரித்தாள்!
ஆண்டாள் ஆழ்வார்களைக்காட்டிலும் உயர்ந்தவள் என்று சொல்வார்கள் - ஏனெனில் பக்தியில் ஆழ்வார்களே ஆண்டாளின் வழிமுறையை கைக்கொண்டுதான் பரம்பொருளை அடைந்தார்கள் என்று பூர்வாசார்யர்கள் அருளியிருக்கிறார்கள். ஆண்டாள் பெண்ணானதால் அரங்கனை எளிதாக காதலிக்க முடிந்தது - தன் பக்தியை ப்ரணயமாய், விரகமாய் வெளிப்படுத்த முடிந்தது - இதே வழியைத்தான் ஆழ்வார்களும், நாயகி பாவத்தில் கடைபிடிக்க முயற்சித்தார்கள் - நம்மாழ்வார் பக்தியால் தம்மை பராங்குச நாயகியாக்கிக் கொண்டார் - திருமங்கை மன்னன் தம்மை பரகால நாயகி ஆக்கிக் கொண்டார்.

மேற்சொன்ன கருத்தை ஸ்வாமி தேசிகன் இந்த கோதாஸ்துதி ஸ்லோகத்தில் சொல்கிறார்:

போக்தும் தவ ப்ரியதமம் பவதீவ கோதே!
பக்திம் நிஜாம் ப்ரணய பாவனயா க்ருணந்து ||
உச்சாவசைர்விரஹ ஸங்கமஜைருதந்தை
ஸ்ருங்காரயந்தி ஹ்ருதயம் குரவஸ்தவதீயா ||

“ஹே கோதாதேவி! உன்னுடைய ப்ரியதமனான-காதலனான கண்ணனிடம் பக்தியை ப்ரணய பாவனையாக - காதலாக வெளிப்படுத்தினாய். பிரிந்தால் விரஹமாகவும், பிணைந்தால் இன்பமாகவும் பல்வேறு பாவனைகளை வெளிப்படுத்தி நீ செய்த பக்தியைப்போல் உயர்ந்தது வேறில்லாமையால், ஆண்களான ஆழ்வார் ஆசார்யர்களும் தம்மை பெண்ணாகக்கருதி உன் வழிமுறையையே கைக்கொண்டார்கள்”. இதிலிருந்து பரம்பொருளை காதல் செய்து அவனையே மணந்த ஆண்டாளின் வழிமுறையே சிறந்தது என்பது கருத்து.

ஆண்டாள் அருளிய திருப்பாவை

அன்னவயற் புதுவை ஆண்டாள் அரங்கர்க்கு (ப்)
பன்னு திருப்பாவை(ப்) பல்பதியம்
இன்னிசையால் பாடிகொடுதாள் நற்பாமாலை
பூமாலை சூடி(க்) கொடுத்தாளை(ச்) சொல்லு

சூடி(க்) கொடுத்த சுடர்(க்) கொடியே தொல்பாவை
பாடி அருளவல்ல பல்வளையாய்
நாடி நீ வேங்கடவற்கு என்னை விதி ஒன்ற இம்மாற்றம்
நாங்கடவா வண்ணமே நல்கு.

பாசுரம்-1.மார்கழி(த்) திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராட(ப்) போதுவீர் போதுமினோ நேரிழைஈர்
சீர்மல்கும் ஆய்பாடி(ச்) செல்வ(ச்) சிறுமீர்காள்
கூர் வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
எரார்ந்த கன்னி யசோதை இளம் சிங்கம்
கார் மேனி செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறைதருவான்
பாரோர் புகழ்(ப்) படிந்தேலோர் எம்பாவாய்.

பாசுரம்-2.வையத்து வழ்வீர்காள்!நாமும் நம் பாவைக்கு(ச்)
செய்யும் கிரிசைகள் கேளீரோ,பார்கடலுள்
பைய(த்) துயின்ற பரமனடி பாடி
நெய்யுன்னோம் பாலுன்னோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை(ச்) சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனயும் கைகாட்டி
உய்யுமாறெண்ணி உகந்து ஏல் ஓர் எம்பாவாய்.

பாசுரம்-3
.ஓங்கி உலகளந்த! உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்கு(ச்) சாற்றி நீரடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கும் பெரும் சென் நெல் ஊடு கயலுகள(ப்)
பூங்குவளை(ப்) போதில் பொரிவண்டு கண்படுப்ப(த்)
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வல்லல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்

பாசுரம்-4.ஆழி மழை(க்)கண்ணா! ஒன்று நீ கை கரவேல்
ஆழி உள் புக்கு முகந்து கொடு ஆர்த்து ஏறி
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கருத்து(ப்)
பாழிய் அம் தோலுடை(ப்) பத்மனாபன் கையில்
ஆழி போல் மின்னி,வலம்புரி போல் நின்று அதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சர மழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்கலும்
மார்கழி நீராட மகிழ்ந்து ஏல் ஓர் எம்பாவாய்

பாசுரம்-5
.மாயனை மன்னுவட மதுரை மைந்தனை(த்)
தூயப் பெருனீர் யமுனை(த்) துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை(த்)
தாயை(க்) குடல் விலக்கஞ் செய்த தாமோதரனை(த்)
தூயமாய் வந்து நாம் தூமலர் தூவி(த்) தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க(ப்)
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்

பாசுரம்-6.புள்ளும் சிலம்பின காண் புல்லரையன் கோயிலில்
வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய்!பேய் முலை நஞ்சுண்டு
கள்ள(ச்) சகடம் கலக் கழிய(க்) காலோச்சி
வெல்லத் தரவில் துயில் அமர்ந்த வித்தினை
உள்ளத்து(க்) கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெல்ல எழுந்து அரி யென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்

பாசுரம்-7.கீசு கீசென்று ஆனைச் சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலயோ ? பேய்ப்பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்ப கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்சியர் மத்தினால்
ஓசைப் படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண் பிள்ளாய் நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ
தேசமுடையாய்!திற ஏல் ஓர் எம்பாவாய்

பாசுரம்-8.கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு
மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்
கூவுவான் வந்து நின்றோம் கோதுகலமுடைய
பாவை எழுந்திராய் பாடிப் பறை கொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனை சென்று நாம் சேவித்தால்
ஆவாவென்று ஆராய்ந்து அருள் ஏல் ஓர் எம்பாவாய்

பாசுரம்-9.தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய
தூபம் கமழத் துயில் அனை மேல் கண் வளரும்
மாமான் மகளே!மணிக்கதவம் தாழ்திறவாய்!
மாமீர் ! அவளை எழுப்பீரோ?உன் மகள் தான்
ஊமையோ அன்றிச் செவிடோ அனந்தலோ
ஏமப் பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?
மாமயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்று ஏல் ஓர் எம்பாவாய்

பாசுரம்-10.நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய்முடி நாராயணண் நம்மால்
போற்றப் பறை தரும் புண்ணியனால் பண்டு ஒரு நாள்
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகருணனும்
தோற்றும் முனக்கே பெருந்துயில் தான் தந்தானோ?
ஆற்ற அனந்தலுடையாய் அருங்கலமே
தேற்றமாய் வந்து திர ஏல் ஓர் எம்பாவாய்

பாசுரம்-11.கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும்
குற்றம் ஒன்றில்லாத கோவலர்த்தம் பொற்கொடியே
புற்று அரவு அல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து நின்
முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாட
சிற்றாதே பேசாதே செல்வ பெண்டாட்டி நீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்

பாசுரம்-12.
கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி
நினைத்து முலைவழியே நின்று பால்சோர
நனைத்தில்லஞ் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழநின் வாசற்கடை பற்றிச்
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக் கினியானைப் பாடவும்நீ வாய்திறவாய்!
இனித்தானெ ழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்
அனைத்தில்லத் தாரும் அறிந்தே லோரெம்பாவாய்!

பாசுரம்-13.
புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா வரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப்
பிள்ளைக ளெல்லாரும் பாவைக்களம் புக்கார்
வெள்ளி யெழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளுஞ் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்!
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய் நீ நன்னாளால்
கள்ளந் தவிர்ந்து கலந்தே லொரெம்பாவாய்!

பாசுரம்-14.
உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்
செங்கல் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்!

பாசுரம்-15.

எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ?
சில்லென்றழையேன் மின் நங்கைமீர் போதர்கின்றேன்
வல்லையுன் கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக.
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்தெண்ணிக்கொள்
வல்லானை கொன்றானை மாற்றானை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலொ ரெம்பாவாய்!

பாசுரம்-16.

நாயகனாய் நின்ற நந்தகோப னுடைய
கோயில் காப்பானே! கொடித்தோன்றும் தோரண
வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள் திறவாய்!
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மாநீ!
நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்!

பாசுரம்-17.

அம்பரமே, தண்ணீரே, சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான்! நந்த கோபாலா! எழுந்திராய்!
கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!
எம்பெரு மாட்டி! யசோதாய்! அறிவுறாய்!
அம்பர மூடறுத் தோங்கி யுலகளந்த
உம்பர்கோ மானே! உறங்கா தெழுந்திராய்!
செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!
உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்!

பாசுரம்-18.

உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்த கோபாலன் மருமகளே நப்பின்னாய்!
கந்தங் கமழும் குழலீ! கடை திறவாய்!
வந்தெங்கும் கோழி அழைத்தன காண்! மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்
பந்தார் விரலியுன் மைத்துனன் பேர்பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!

பாசுரம்-19.

குத்துவிளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்சசயனத்தின் மேலேறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய்!
மைத்தடங் கண்ணினாய்! நீ உன்மணாளனை
எத்தனைபோதும் துயிலெழ ஒட்டாய்காண்
எத்தனையேலும் பிறிவாற்ற கில்லாயேல்
தத்துவமன்று தகவேலோ ரெம்பாவாய்!

பாசுரம்-20.
முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே துயிலெழாய்!
செப்பம் உடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா துயிலெழாய்!
செப்பென்ன மென்முலைச் செவ்வாய் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயிலேழாய்!
உக்கமுந் தட்டொளியும் தந்துன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்!

பாசுரம்-21.
ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுராய்!
ஊற்றமுடையாய்! பெரியாய்! உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலேழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்
ஆற்றாது வந்துன் அடிபணியுமா போலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்!

பாசுரம்-22.
அங்கண் மா ஞாலத்தரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக் கட்டிற்கீழே
சங்கமிருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்!
கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலே
செங்கண் சிறிச்சிறிதே எம்மேல் விழியாவோ!
திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற் போல்
அங்கணிரண்டுங் கொண்டெங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல்சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்!

பாசுரம்-23.
மாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரிமயிர் பொங்க வெப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமாப் போலே நீ பூவைப்பூவண்ணா! உன்
கோயில் நின்றிங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த
காரியமா ராய்ந்தருளேலோ ரெம்பாவாய்!

பாசுரம்-24.
அன்று இவ்வுலகம் அளந்தாய்! அடிபோற்றி,
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய்! திறல்போற்றி,
பொன்றச் சகடம் உதைத்தாய்! புகழ்போற்றி,
கன்று குணிலா எறிந்தாய்! கழல்போற்றி,
குன்று குடையா எடுத்தாய்! குணம்போற்றி,
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி,
என்றென்று உன்சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்றுயாம் வந்தோம், இரங்கேலோ ரெம்பாவாய்

பாசுரம்-25.
ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர,
தரிக்கிலா னாகித் தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து வந்தோம்; பறைதருதி யாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமுந் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.

பாசுரம்-26.
மாலே! மணிவண்ணா! மார்கழிநீ ராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை யெல்லாம் நடுங்குமுரல்வன
பாலன்ன வண்ணத்துள் பாஞ்சசன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடுடையனவே,
சாலப்பெரும் பறையே, பல்லாண் டிசைப்பாரே,
கோல விளக்கே, கொடியே, விதானமே,
ஆலின் இலையாய்! அருளேலோ ரெம்பாவாய்.

பாசுரம்-27.
கூடாரை வெல்லுஞ்சீர்க் கோவிந்தா! உன்தன்னை
பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்;
நாடு புகழும் பரிசினால் நன்றாக,
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே யென்றனைய பல்கலனும் யாம் அணிவோம்;
ஆடை உடுப்போம்; அதன்பின்னே பாற்சோறு(*)
மூடநெய் பெய்து முழங்கை வழிவார
கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.

பாசுரம்-28.
கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்;
அறிவொன்று மில்லாத ஆய்க்குலத்து உன்தன்மைப்
பிறவிப் பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்;
குறைவொன்று மில்லாத கோவிந்தா! உன்தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது!
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்
சிறுபேர ழைத்தனவும் சீறி யருளாதே,
இறைவா, நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்.


பாசுரம்-29.

சிற்றம் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்
பொற்றா மரையடியே போற்றும் பொருள் கேளாய்;
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்திற் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது;
இற்றைப் பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே ஆவோம்; உனக்கே நா மாட்செய்வோம்;
மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்.

பாசுரம்-30.
வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனைத்
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட ஆற்றை, அணி புதுவைப்
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்கிப் பரிசுரைப்பார், ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள்பெற் றின்புறுவ ரெம்பாவாய்.

திருவாடிப்பூரத்து செகத்துதித்தாள் வாழியே!
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே!
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே!
பெரும்பூதூர் மாமுனிக்கு பின்னானாள் வாழியே!
ஒரு நூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே!
உயரரங்கற்கே கண்ணியுகந்தளித்தாள் வாழியே!
மருவாறும் திருமல்லி வளநாடு வாழியே!
வண்புதுவை நகர்கோதை மலர்பாதங்கள் வாழியே!

ஆண்டாள் திருவடிகளே சரணம்
ஆசார்யர் திருவடிகளே சரணம்
ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீமதே நாராயணாய நம:
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்பணமஸ்து:

Labels:

இளையராஜா பாடிய காமாட்சி கருணா விலாசினி



சகல கஷ்டங்களையும் போக்கும் பாடல் ஆடியோவுடன் கேட்டு கூட சேர்ந்து பாடுங்கள்,இது தெய்வீக இசை என்று உணர்வீர்கள்,வேறு யாரொ இந்த பாடலை பாடி இருந்தால் பாட்டு வெறும் பாட்டாக இருந்திருக்கும்,நம் இசை ஞானி ஆத்மார்தமாக அம்பிகையை உள்வாங்கி ,உணர்ந்து,மகிழ்ந்து கொண்டாடி பாடியிருக்கிறார்,கேட்பவரும் அவர் அடைந்த பரவசத்தை அடைய பாடு பட்டுள்ளார்.கேட்கையிலே காரணமின்றி கண்ணீர் வரும். --------------------

காமாட்சி.....
காமாட்சி.,கருணாவிலாசினி.. காமாட்சி.,கருணாவிலாசினி..
காமகோடி பீட வாசினி,.சஞ்சீவினி.,காமகோடி பீட வாசினி.. காமாட்சி.,கருணாவிலாசினி. காமாட்சி.,கருணாவிலாசினி காமகோடி பீட வாசினி,.சஞ்சீவினி.,காமகோடி பீட வாசினி மந்தஹாசினி,. மந்தஹாசினி,.
மதுரபாஷினி மந்தஹாசினி,.மதுரபாஷினி
சந்த்ரலோசனி,.சாபவிமோசனி...
சந்த்ரலோசனி,.சாபவிமோசனி...
பவதாரிணி,.பரிபூரணீ...
பவதாரிணி,.பரிபூரணீ...
சஹல லோக சௌக்யதாரினி,.சஞ்சீவினி.,காமகோடி பீட வாசினி
காமகோடி பீட வாசினி,.சஞ்சீவினி.,காமகோடி பீட வாசினி.. காமாட்சி.,கருணாவிலாசினி. காமாட்சி.,கருணாவிலாசினி காமகோடி பீட வாசினி,.சஞ்சீவினி.,காமகோடி பீட வாசினி

க்ரிஷ்னசோதரி,.
க்ரிஷ்னசோதரி,.கனகசுந்தரி
க்ரிஷ்னசோதரி,.கனகசுந்தரி
திவ்யமஞ்சரி,தேவ மனோகரி
திவ்யமஞ்சரி,தேவ மனோகரி

பரமேஸ்வரி,.பஞ்சாட்சரி
பரமேஸ்வரி,.பஞ்சாட்சரி
அனந்த ஞ்யான அம்ருத சாகரி,.சஞ்சீவினி.,
காமகோடி பீட வாசினி

காமாட்சி.,கருணாவிலாசினி. காமகோடி பீட வாசினி,.சஞ்சீவினி.,காமகோடி பீட வாசினி..

Labels:

Wednesday, February 11, 2009

சுற்றுகிற உலகத்திலே


சுற்றுகிற உலகத்திலே
சுற்றுகிற உலகத்திலே,பலவிதத்தில் சுற்றுகிற மனிதர்களே...
வெற்றுக்கைகளுடன் பிறந்து பலவிதத்தில் பற்றுகளைப் பிடித்தவரே.....
இன்னும் ஒருமுறை பிறப்பீரா?மறுபடி மறுபடி இறப்பீரா?நற்பெருவழி வருவீரா?இல்லை ஒரு சிறுவழி போவீரா?
அண்ணாமலையை சுற்று சுற்று...அறுந்து போகும் பற்று
அண்ணாமலையை சுற்று சுற்று...அறுந்து போகும் பற்று
சுற்றுகிற உலகத்திலே,பலவிதத்தில் சுற்றுகிற மனிதர்களே...
வெற்றுக்கைகளுடன் பிறந்து பலவிதத்தில் பற்றுகளைப் பிடித்தவரே.....

அப்பனைசுற்றும் அம்மை உண்டு....அன்னையைசுற்றும் பிள்ளை உண்டு....
அப்பனைசுற்றும் அம்மை உண்டு....அன்னையைசுற்றும் பிள்ளை உண்டு....
கன்னியை சுற்றி வரும் காளையும் இங்குண்டு...
கன்னியையும் காளையயும் சுற்ற வைக்கும் காதலும் இங்குண்டு....
அட பாட்டன் போனான் ,அப்பன் போனான்,பிள்ளைகளும் அவன் பின்னாலே..
அரசன் போனான் ,ஆண்டி போனான்,தொடர்ந்து சென்றவரும் பின்னாலே...
சுற்றிச்சுழன்றவர் வாழ்கயிலே,சுகத்தில் இருப்பவர்கள் யாருமில்லே...
எதை எதயோ சுற்றாதீர்,பதைபதைத்து நிற்க்காதீர்...

அண்ணாமலையை சுற்று சுற்று...அறுந்து போகும் பற்று
அண்ணாமலையை சுற்று சுற்று...அறுந்து போகும் பற்று
சுற்றுகிற உலகத்திலே,பலவிதத்தில் சுற்றுகிற மனிதர்களே...
வெற்றுக்கைகளுடன் பிறந்து பலவிதத்தில் பற்றுகளைப் பிடித்தவரே.....
கல்விக்கு சுற்றும் மாணவரும்,வேலைக்குச் சுற்றும் பட்டதாரியும்,
மேல் பதவிக்காகச் சுற்றும் மனிதர்களும்,சிறு உதவிக்காகச் சுற்றும் எளியவரும்,
கல்வியும் பதவியும் கலை தரும் ஞ்யானமும் மனிதனைச் சுற்றவில்லை...
வல்வினை தொல்வினை தன்னைச் சுற்றி வருவதை மனிதனும் உணரவில்லை...
உன்மேல் உன்னை விட பிரியமுல்லவர் உலகதிலுண்டோ?
உன்சுமைகலயே தன்சுமயென்று சுமப்பவருண்டோ?
பாறத்தை அண்ணாமலயில் போட்டு சுகமாய் பாடி ஆடிப்போ...
நேரத்தை வீணாய் கழிக்காமல் நீ சரணம் என்றே பாடிப்போ...
சுற்றுகிற உலகத்திலே,பலவிதத்தில் சுற்றுகிற மனிதர்களே...
வெற்றுக்கைகளுடன் பிறந்து பலவிதத்தில் பற்றுகளைப் பிடித்தவரே.....
இன்னும் ஒருமுறை பிறப்பீரா?மறுபடி மறுபடி இறப்பீரா?நற்பெருவழி வருவீரா?இல்லை ஒரு சிறுவழி போவீரா?
அண்ணாமலையை சுற்று சுற்று...அறுந்து போகும் பற்று
அண்ணாமலையை சுற்று சுற்று...அறுந்து போகும் பற்று
சுற்றுகிற உலகத்திலே,பலவிதத்தில் சுற்றுகிற மனிதர்களே...
வெற்றுக்கைகளுடன் பிறந்து பலவிதத்தில் பற்றுகளைப் பிடித்தவரே.....
பாடலை டவுன் லோடு செய்ய
http://www.suribaba.com/sb_IRAlbumsPgbyPgDisp.php?name=Ramanamalai&type=Mov_name&Lang=Tamil&type2=IRALBUM

Labels: , ,

பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்-நான் கடவுள்


பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே
யாம் ஒரு பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே
பிண்டம் என்னும் எலும்போடு சதை நரம்பு உதிரமும்
அடங்கிய உடம்பு எனும் பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே
பிண்டம் என்னும் எலும்போடு சதை நரம்பு உதிரமும்
அடங்கிய உடம்பு எனும் பிச்சைப் பாத்திரம் ஏந்தி
வந்தேன் அய்யனே என் அய்யனே
அம்மையும் அப்பனும் தந்ததா
இல்லை ஆதியின் வல்வினை சுழ்ந்ததா
அம்மையும் அப்பனும் தந்ததா
இல்லை ஆதியின் வல்வினை சுழ்ந்ததா
இன்மையை நானறியாததா
சிறு பொம்மையின் நிலையினில்
உண்மையை உணர்ந்திட
பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே
பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே
அத்தனை செல்வமும் உன்னிடத்தில்
நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்
வெறும் பாத்திரம் உள்ளது என்னிடத்தில்
அதன் சூத்திரமோ அது உன்னிடத்தில்
ஒரு முறையா இரு முறையா பல முறை
பலப் பிறப்பெடுக்க வைத்தாய்
புது வினையா பழ வினையா கணம் கணம்
தினம் தினம் என்னை துடிக்க வைத்தாய்
பொருளுக்கு அலைந்திடும்
பொருளற்ற வாழ்க்கையும் துரத்துதே
உன் அருள் அருள் அருள் என்று
அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே
அருள் விழியால் நோக்குவாய்
மடற் பதத்தால் தாங்குவாய்
உன் திருக்கரம் எனை அரவணைத்து உனதருள் பெற
பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே
பிண்டம் என்னும் எலும்போடு சதை நரம்பு உதிரமும்
அடங்கிய உடம்பு எனும் பிச்சைப் பாத்திரம்
ஏந்தி வந்தேன் அய்யனே என் அய்யனே

பாடலை டவுன் லோடு செய்ய
http://www.suribaba.com/sb_IRAlbumsPgbyPgDisp.php?name=Ramanamalai&type=Mov_name&Lang=Tamil&type2=IRALBUM

Labels:

ஓம் சிவோஹம் ...


ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்
ஓம் பைரருத்ராய மஹாருத்ராய காலருத்ராய கல்பாந்தருத்ராய
வீரருத்ராய ருத்ரருத்ராய கோரருத்ராய அகோரருத்ராய
மார்தாண்டருத்ராய அண்டருத்ராய ப்ரமாண்டருத்ராய
சண்டருத்ராய பிரசண்டருத்ராய தண்டருத்ராய
சூரருத்ராய வீரருத்ராய பவருத்ராய பீமருத்ராய
அதலருத்ராய விதலருத்ராய சுதலருத்ராய மஹாதலருத்ராய
தசாதலருத்ராய தலாதலருத்ராய பாதாளருத்ராய
நமோ நமஹ:
ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
வீரபத்ராய அக்னிநேத்ராய கோரஸௌஹாரஹா
சகலலோகாய சர்வபூதாய சத்யசாக்ஷாத்கரா
சம்போ சம்போ ஷங்கரா
அ…ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
பஜே ஹம்
ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்
ஓம் நமஸ்வாமாயச ருத்ராய ஜநமஸ்தமரயச ருடாய
ஜனமஷரிங்காயதபஸ்துபதஜே ஜநமஹுக்ராயச பீமாய
ஜனமோ ஹக்ரே வதாய சதுரே வதாய
ஜனமோ ஹந்த்ரே ஸஹமியதெ தனமோ வ்ருக்ஷே
ப்யோஹரிகேஷே ப்யோநமஸ்தராய நமஸ்ஷம்பவே
தம யோபவேச்ச நமஷங்கராய தபயஷ்கராய
தனமஷிவாய தஷிமதவாதச்சா….
அண்டப்ரமாண்ட கோட்டி அகிலபரிபாலனா
பூரணா ஜகத்காரனா சத்யதேவ தேவப்ரியா
வேத வேதார்த்த சாரா யக்ஞ யக்ஞொமயா
நிஷ்சலா துஷ்ட நிக்ரஹா சப்தலோக சௌரக்ஷனா
சோம சூர்ய அக்னி லோச்சனா ஷ்வேதரிஷப வாஹணா
சூலபாணி புஜங்க பூஷணா திரிபுர நாச நர்த்தனா
ப்யோமகேஷ மஹாஸேன ஜனகா
பஞ்சவர்த்த பரஸுஹஸ்த நமஹ:
ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
பஜே ஹம்
ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
பஜே ஹம்
கால த்ரிகால நேத்ர த்ரிநேத்ர சூழ திரிசூல காத்ரம்
சத்யப்ரபாவ திவ்யப்ரகாஷ மந்த்ர ஸ்வரூப மாத்ரம்
நிஷ்ப்ரபஞ்சாதி நிஷகலந்கோஹம் நிஜபூர்ன போதஹம்நம்
நத்யகாத்மஹம் நித்யப்ரமோஹம் ஸ்வப்னகஸோகம்ஹம்நம்
சட்சித்ப்ரமானம் ஓம் ஓம்
மூலப்ரமேயம் ஓம் ஓம்
அயம் ப்ரம்மாஸ்மி ஓம் ஓம்
அஹம் ப்ரம்மாஸ்மி ஓம் ஓம்
கன கன கன கன கன கன கன கன
ஸஹஸ கண்ட சப்தவிஹரதி
டம டம டம டம டுப டுப டுப டுப
சிவடபருத நாதவிஹரதி
ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
பஜே ஹம்
ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
பஜே ஹம்
வீரபத்ராய அக்னிநேத்ராய கோரஸௌஹாரஹா
சகலலோகாய சர்வபூதாய சத்யசாக்ஷாத்கரா
சம்போ சம்போ ஷங்கரா
அ…ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
பஜே ஹம்

Labels: , ,

காரணமின்றி கண்ணீர் வரும்...


காரணமின்றி கண்ணீர் வரும்,
காரணமின்றி கண்ணீர் வரும்,
உன் கருணை விழிகள் கண்டால்....
காரணமின்றி கண்ணீர் வரும்,
உன் கருணை விழிகள் கண்டால்....
காரணமின்றி கண்ணீர் வரும்,
உன் கருணை விழிகள் கண்டால்....
கருக்குழி வழி தன்னை அடைக்கும் விழி...
கருவினில் திரு வந்து நிறைந்த விழி...
இரு விழி,தரும் மொழி,திரந்திடும் அருள் வழி...
காரணமின்றி கண்ணீர் வரும்,
உன் கருணை விழிகள் கண்டால்....
காரணமின்றி கண்ணீர் வரும்,
உன் கருணை விழிகள் கண்டால்....
பிதற்றிடும் மொழி என் பிள்ளை மொழி,
தினம் அரற்றுதல் தவிரவேறில்லை வழி..
பிதற்றிடும் மொழி என் பிள்ளை மொழி,
தினம் அரற்றுதல் தவிரவேறில்லை வழி..
அருந்தவச்சுடரே,அருள் நிறை கடலே,
அடியவர்க்கிரங்கி வந்தனைத்திடும் அருளே..
தொழுதேன்,தொழுதேன்,விழி திறப்பாய் ,
பிழைகள் பொருத்தே பழி எறிப்பாய்...
இரு விழி,தரும் மொழி,திறந்திடும் அருள்வழி...
காரணமின்றி கண்ணீர் வரும்,
உன் கருணை விழிகள் கண்டால்....
காரணமின்றி கண்ணீர் வரும்,....
பொருள் வழி செல்லும் மன வழி அடைப்பாய்..
நல்ல அருள் வழி தரும் பெருந்துயர் துடைப்பாய்...
பொருள் வழி செல்லும் மன வழி அடைப்பாய்..
நல்ல அருள்வழி தரும் பெருந்துயர் துடைப்பாய்...
எழில் ஞாயிறு போல் அருள் ஞாயிறு நீ...
ஒளி தனைப் பொழிந்திடும் கருணா நிதி நீ,
தொழுதேன்,தொழுதேன்,விழி திறப்பாய்,
பிழைகள் பொறுத்தே பழி எறிப்பாய்...
இரு விழி,தரும் மொழி,
திறந்திடும் அருள்வழி...
காரணமின்றி கண்ணீர் வரும்,
உன் கருணை விழிகள் கண்டால்....
காரணமின்றி கண்ணீர் வரும்,....
கருக்குழி வழி தன்னை அடைக்கும் விழி...
கருவினில் திரு வந்து நிறைந்த விழி...
இரு விழி,தரும் மொழி,திறந்திடும் அருள்வழி...
காரணமின்றி கண்ணீர் வரும்,
உன் கருணை விழிகள் கண்டால்....
காரணமின்றி கண்ணீர் வரும்,....


பாடலை டவுன் லோடு செய்ய
http://www.suribaba.com/sb_IRAlbumsPgbyPgDisp.php?name=Ramanamalai&type=Mov_name&Lang=Tamil&type2=IRALBUM

Labels: , , ,

அருணமலை குருரமணா ....


அருணமலை குரு ரமணா
அருணமலை குரு ரமணா,கருணை அருள் விழி வதனா,
மனது ஒன்று இருக்கிறதே,எனது என்று தவிக்கிறதே,
மனது ஒன்று இருக்கிறதே,எனது என்று தவிக்கிறதே,

எனது மனம் அழிந்திடவே அருள்புரிவாய்,அருள்புரிவாய்...

அருணமலை குரு ரமணா,கருணை அருள் விழி வதனா,
அருணமலை குரு ரமணா,கருணை அருள் விழி வதனா,

தனித்திருக்கும் தாகம் கொண்டேன்,தயவும் உனக்கு இல்லயோ?
பனித்த விழி நீரும் எந்தன் நிலையை கூற வில்லையோ?
இனியும் காலம் தாழ்த்தாமல் கனிவாம் பார்வை தரவேண்டும்,
பெரிதாம் பிறவி நோய் தீர்த்து இனி பிறவா வரமும் பெற வேண்டும்,
அந்தம் கடந்த ஆதியே,உனை சொந்தம் என்று பாடினேன்,
அச்சம் தோற்றும் பூமியில் வினை மிச்சம் தொலைய நாடினேன்,
கோடி கோடி அடியவரில் நான் தான் கடைக்கோடியய்யா,

அருணமலை குரு ரமணா,கருணை அருள் விழி வதனா,
மனது ஒன்று இருக்கிறதே,எனது என்று தவிக்கிறதே,
எனது மனம் அழிந்திடவே அருள்புரிவாய்,அருள்புரிவாய்...

அருணமலை குரு ரமணா,கருணை அருள் விழி வதனா,
அருணமலை குரு ரமணா,கருணை அருள் விழி வதனா,

உன் பெயரை ஓதும் யாரும் உயர்ந்த ஓர் பிறவியே..
தம் துயரை தீர்க்க எமக்கு கிடைத்த ஓர் கருவியே..
உன்னை தொழுதல் பெரும்பேறு..
செய்வேன் என்ன கைமாறு...
அய்யன் அருளைப் பெருமாறு செய்தாய் அது என் அருட்பேறு...

உன் கடனைத் தீர்க்கும் வழி ஒன்றும் நான் காணா நிலையும் ஆகுமோ?
என் உடலை தீபத் திரியாக்கி,அதை எரித்தால் கூட போதுமோ?
என் பிதற்றல் பிள்ளை மொழி அல்ல,ரமணன் விலக்கின் ஒளி அன்றோ?

அருணமலை குரு ரமணா,கருணை அருள் விழி வதனா,
அருணமலை குரு ரமணா,கருணை அருள் விழி வதனா,
மனது ஒன்று இருக்கிறதே,எனது என்று தவிக்கிறதே,
எனது மனம் அழிந்திடவே அருள்புரிவாய்,அருள்புரிவாய்...
அருணமலை குரு ரமணா,கருணை அருள் விழி வதனா,
அருணமலை குரு ரமணா,கருணை அருள் விழி வதனா,


பாடலை டவுன் லோடு செய்ய
http://www.suribaba.com/sb_IRAlbumsPgbyPgDisp.php?name=Ramanamalai&type=Mov_name&Lang=Tamil&type2=IRALBUM

Labels: